MLC தொடருக்காக 4 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள கம்மின்ஸ்

India Cricket

77

அமெரிக்காவில் நடைபெறவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) தொடரில் நான்கு வருடங்கள் விளையாடுவதற்கு அவுஸ்திரேலிய வீரர் பெட் கம்மின்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

அதன்படி பெட் கம்மின்ஸை  சென் பிரான்சிகோ யுனிகோர்ன்ஸ் அணி எதிர்வரும் நான்கு வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்கவில்லை – ராகுல் டிராவிட்

பெட் கம்மின்ஸ் சர்வதேச லீக் தொடர்களை பொருத்தவரை இந்தியாவில் நடைபெறும் IPL தொடரில் மாத்திரம் விளையாடி வருகின்றார். இதனை தவிர்த்து அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் லீக்கில் இறுதியாக 2018ம் ஆண்டு விளையாடியுள்ளார். சர்வதேச போட்டிகளின் காரணமாக இவர் பிக் பேஷ் தொடரிலும் விளையாடுவதை குறைத்திருந்தார். 

எனினும் தற்போது மேஜர் லீக் தொடருக்காக நான்கு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இவர், அவுஸ்திரேலிய அணியின் சர்வதேச போட்டிகள் பலவற்றை தவறவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 6ம் திகதி முதல் 29ம் திகதிவரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் இந்த தொடரை நடத்துவதற்கான அனுமதியும் ஐசிசியால் வழங்கப்பட்டுள்ளது. 

சுழல் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கான விஷேட அகடமிகளை அமைக்கவுள்ள இலங்கை கிரிக்கெட்

இவ்வாறான நிலையில் அடுத்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அவுஸ்திரேலிய அணி மே.தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் பெட் கம்மின்ஸ் ஆஸி. அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார். எனவே இவர் அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடுவாரா? அல்லது சென் பிரான்சிகோ யுனிகோர்ன்ஸ் அணிக்காக விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

பெட் கம்மின்ஸுடன் மற்றுமொரு அவுஸ்திரேலிய அணி வீரரான ஜெக் பிரேசர் மெக்கேர்க்கும் சென் பிரான்சிகோ யுனிகோர்ன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<