வாழ்க்கையே மாறி, இன்று பாராலிம்பிக் செல்லும் சுபசிங்க

Para Olympic

388

சமன் மதுரங்க சுபசிங்க, பாராலிம்பிக் போட்டியில் முழங்கைக்கு கீழ் ஒரு கையை இழந்த அல்லது செயலிழந்த பிரிவில் (T47 பிரிவில்) 400 மீற்றர் போட்டியில் இலங்கைக்காக பங்கேற்கிறார். அவர் பாராலிம்பிக் பங்கேற்கும் இலங்கை கடற்படையைச் சேர்ந்த முதலாமவராவார். 

‘பாராலிம்பிக்கில் பங்கேற்கும் பெரும் எதிர்பார்ப்பு ஒன்று இருந்தது. அதற்காக கடந்த காலத்தில் அதிகம் உழைத்தேன். அது நிறைவேறியதை இட்டு மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன். கொரோனா காரணமாக பயிற்சியை நிறுத்தவில்லை. முடியுமான அனைத்து சந்தர்ப்பத்திலும் பயிற்சியில் ஈடுபட்டேன். பாராலிம்பிக்கில் எனது போட்டிக்கு கடும் சவால் இருக்க முடியும். அதற்கு சிறந்த முறையில் முகம்கொடுப்பது எனது ஒரே எதிர்பார்ப்பு’ என்று சுபசிங்க ThePapare.com இற்கு தனது பேச்சை ஆரம்பித்தார்.  

>> பாராலிம்பிக் படகோட்டத்தில் பங்கேற்கும் ஒரே ஆசிய வீரர் மஹேஷ் ஜயகொடி

சுபசிங்க பாடசாலை சென்றது குருநாகல் புலுவல மஹா வித்தியாலயத்திற்கு. கல்வி கற்றது சாதாரண தரம் வரைதான். உயர் தர வகுப்பில் சேரும் வாய்ப்பு இருந்தபோதும், சுபசிங்க அதற்கு அதிகம் ஆர்வம் காட்டவில்லை.  

‘அந்தக் காலத்தில் இராணுவத்தில் சேர்ந்து சேவை ஆற்றவே எனக்கு விருப்பம் இருந்தது. அது எந்தக் காரணத்தால் ஏற்பட்டது என்று தெரியாது. ஆனால் அதற்கு நான் ஆசைப்பட்டேன். சாதாரண தரம் முடிவுற்ற உடனேயே, இராணுவத்தில் சேர்வதாக வீட்டில் கூறினேன். விட்டில் அதற்கு அதிகம் விருப்பம் காட்டவில்லை.’    

Saman Subasingheசுபசிங்கவின் குடும்பத்தில் அவரும் அண்ணனும் மாத்திரம் தான். தந்தை, எஸ்.எம்.ஏ. நந்தசேன சாரதியாக வேலை பார்க்கிறார். தாய், ஏ.என்.சி. அதிகாரி, இரு ஆண் பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் வீட்டுப் பொறுப்புகளை எடுத்து நடத்தினார். சுபசிங்கவை விட அண்ணன் 5 வயது மூத்தவர். அவர் தற்போது மோட்டார் மெக்கானிக்காக வேலை பார்க்கிறார்.

அப்போது இருந்த யுத்த சூழல் காரணமாக சுபசிங்கவின் பெற்றோர்கள் மாத்திரமல்ல, இந்நாட்டில் பெரும்பாலான பெற்றோர் தமது பிள்ளைகளை இராணவத்திற்கு இணைப்பதில் அதிக விருப்பத்தைக் காட்டாதபோதும் சுபசிங்கவின் முயற்சி தீராததாக இருந்தது.

‘இராணுவத்தில் இணையும் வயது வந்தபோது, தெரிந்த காலம் தொடக்கம் இராணுவத்தில் இணைவதற்கு நான் விண்ணப்பித்தேன். அதற்கிடையே கடற்படை மற்றும் விமானப்படைக்கும் விண்ணப்பித்தேன். எப்படியோ கடற்படை முந்தியது. கடற்படையில் தான் எனக்கு முதல் அழைப்பு வந்தது. அதனால் நான் கடற்படையால் தேர்வு செய்யப்பட்டேன்.’  

அதன்படி சுபசிங்க 2008 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையுடன் இணைந்தார். பயிற்சியின் பின் பணியில் ஈடுபட்டார். அது கடுமையான போர் இடம்பெற்ற காலம். ஆனால் போர் பயிற்சி பெற்ற சுபசிங்க போன்ற அவர்களின் படைப்பிரிவுக்கு அது பெரிய பொருட்டாக இருக்கவில்லை.  

அதற்கிடையேதான் சுபசிங்க தனது விதிக்கு முகம்கொடுத்தார்.

‘2009 முள்ளிக்குளத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது கைக்குண்டு தாக்குதலுக்கு முகம்கொடுத்தேன். இதனால் எனது இடது முழங்கைக்கு கீழ் கையை இழந்தேன். விபத்து இடம்பெற்ற பின்… வாழ்க்கை முடிந்து விட்டது போன்று உணர்ந்தேன். அம்மாவின் பேச்சை கேட்காமல் கடற்படையில் இணைந்தது பற்றி கவலை அடைந்தேன். என்னை பார்க்க வரும் அம்மா, அழும்போது அந்தக் கவலை மேலும் அதிகரித்தது.    

என்ன செய்ய? இரண்டு கைகளால் செய்ததை ஒரு கையால் செய்ய பழகினேன். ஆரம்பத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தது. அநியாயத்திற்கு கடற்படையில் சேர்ந்தேன் என்று நினைத்த நேரங்கள் பல. ஆனால் ஒன்று நடப்பதென்றால் அதனை தவிர்க்க முடியாது. பல ஆண்டுகள் சிகிச்சை பெற்றேன். உடல் ஊனமுற்றவர்களுடன் இருக்கும்போது பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை. எம்மிடையே இரு கால்கள் இல்லாதவர்களும் இருக்கிறார்கள். உடல் குறைபாடுடையவனாக வாழ்வை கட்டியெழுப்புவது பற்றி நினைக்க ஆரம்பித்தேன.’

Saman Subasingheஉடல் பாதிப்புடன் சுபசிங்க சேவையில் இணைந்தார். அவர் அவை அனைத்துடனும் புதிய வாழ்வை கட்டியெழுப்ப நினைத்தார். அதற்கிடையே தான் பாரா விளையாட்டுக்கு இணைவதற்கு சுபசிங்கவுக்கு அழைப்புக் கிடைத்தது. 

>> உலக கனிஷ்ட மெய்வல்லுனரில் அரையிறுதியுடன் வெளியேறிய தருஷி, மெதானி

‘அப்போது நான் செத்சிறிபாய பாதுகாப்பு படை நலன்புரி படைப்பிரிவில் பணியாற்றினேன். பிரதான கனிஷ்ட அதிகாரி ஹரிஸ்சந்திர சேர், விளையாட்டில் இணையும்படி எனக்கு அழைப்பு விடுத்தார். நீண்ட பயணம் ஒன்று செல்ல முடியும் என்று சேர் எனக்கு உணர்த்தினார். அவர்தான் அப்போது கடற்படையின் மெய்வல்லுநர் பயிற்சியாளராக இருந்தார். பின்னர் கடற்படை வலதுகுறைந்தோர் குழாமின் தலைவர் வன்னிநாயக்க சேர் அந்தக் குழாத்திற்கு மாற்றம் செய்து தந்தார். பாடசாலை செல்லும் காலத்தில் இல்ல விளையாட்டுப் போட்டிகளில் ஒன்று இரண்டு தடவைகள் மரதன் போட்டியில் பங்கேற்றிருக்கிறேன். அதுவும் போகின்ற போக்கில் பங்கேற்றவை. அதனால் எனக்கு விளையாட்டில் ஈடுபட முடியுமா என்ற அச்சம் இருந்தது. அப்படி இருந்த என்னை இந்த இடத்திற்கு கொண்டுவர அவர்கள் வழிகாட்டினார்கள்.’   Saman Subasinghe

சுபசிங்க கடற்படை பாரா விளையாட்டு குழாத்தில் 2016 ஆம் ஆண்டு இணைந்தார். அப்போது அவரது பயிற்சியாளராக ஹரிஸ்சந்திர அவர்கள் இருந்தார். அவரின் கீழ் விளையாட்டின் அடிப்படை கல்வியை பெற்று சுபசிங்க விளையாட்டை ஆரம்பித்தார்.      

‘வருடத்தின் இறுதிப் பகுதியில் நாம் தியதலாவையில் பயிற்சி பெறுவதை பார்க்க தற்போதைய விளையாட்டு கற்கை நிறுவனத்தின் பணிப்பாளரும் சிரேஷ்ட மெய்வல்லுநர் பயிற்சியாளருமான சஜித் ஜயலால் சேர் வந்தார். அன்று சேர் எனது திறமையை பார்த்து, எனக்கு ஒலிம்பிக் பதக்கம் வரை செல்ல முடியும் என்று கூறினார். அப்படிக் கூறி ஹரிஸ்சந்திர சேரிடம் அனுமதி பெற்று பயிற்சிக்கு அழைத்துச் சென்றார். அன்று தொடக்கம் இன்று வரை ஜயலால் சேருடன் பயிற்சியில் ஈடுபடுகிறேன்.’     

சுபசிங்க தனது விளையாட்டில் அதிக போட்டிகளில் விளையாடியதில்லை. இருந்து நின்று வேகத்தை கணிப்பதற்காக பங்கேற்புகளில் ஈடுபடுவது தான் சுபசிங்க பங்கேற்ற பெரிய போட்டிகளாகும். அவர் பங்பேற்ற போட்டிகளில் முதலாவது போட்டி 2018 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் இடம்பெற்ற ஆசிய பாரா போட்டிகளாகும். அதில் அவர் நான்காவது இடத்தை பிடித்தார். அதற்கு அடுத்த ஆண்டு பெப்ரவரியில் டுபாயில் இடம்பெற்ற World Para Athletics Grand Prix    போட்டியில் பங்கேற்றார். அந்தப் போட்டியில் அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

அவர் பங்கேற்கும் மூன்றாவது சர்வதேச போட்டியாகவே பாராலிம்பிக் போட்டி உள்ளது.

‘பாராலிம்பிக் போட்டி என்று ஒன்று மனதில் கூட இல்லாத நிலையில் தான் நான் விளையாட்டில் ஈடுபட்டேன். என்னை இந்த நிலைமைக்கு கட்டியெழுப்புவதன் கௌரவம் சஜித் ஜயலால் சேருக்கே சேர வேண்டும். அதற்கு முன்னர் ஹரிஸ்சந்திர சேர் தான் நான் இந்த இடத்திற்கு வர வழி காட்டினார். 2017 ஆம் ஆண்டில் இருந்து 400 மீற்றர் போட்டியில் முன்னிலையில் இருக்கிறேன். அதற்காக அர்ப்பணிப்புடன் பயிற்சி பெறுவது அவசியம். அவை அனைத்தும் எனக்கு கிடைக்கிறது. அதற்காக இலங்கை கடற்படை காட்டும் ஒத்துழைப்பு மற்றும் எனக்காக வழங்கும் அர்ப்பணிப்பு அதிகம். அதற்காக இலங்கை கடற்படையின் அனைத்து அதிகாரிகள் மற்றும் எனது சக கடற்படையினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறுகிறார் சுபசிங்க.

>> உலக கனிஷ்ட மெய்வல்லுனரில் அரையிறுதிக்கு முன்னேறிய தருஷி

30 வயதான சுபசிங்க தற்போது நான்கு வயது பிள்ளையின் தந்தை ஆவார். சுபசிங்கவின் மனைவி திலினி லலக்மாலி. அவர்கள் மகிழ்ச்சியான குடும்பமாக வாழ்கின்றனர்.       

‘உடல் ஊனத்தை மறந்து ஒரு இளைஞனாக வாழ்வை கட்டியெழுப்புவதற்கு அடித்தளம் இட்டது விளையாட்டுத் தான். அதற்கு பின்னர் மனைவியின் உதவி கிடைத்தது. அவரது ஒத்துழைப்பு மற்றும் விளையாட்டின் காரணமாக எல்லா குறைகளும் மறந்துபோயின. சாதாரண மக்களுடன் சாதாரணமாக இருந்தேன். அது பெரிய விடயமாக இருந்தது. எனது உடலில் குறை ஒன்று இருப்பது இப்போது நினைத்துக்கூட பார்க்காத ஒன்று.’

Saman Subasingheமனைவி மாவனல்லை அரநாயக்கவை சேர்ந்தவர். கடற்படை நண்பர்களுடன் அரநாயக்கவுக்கு சென்றபோது தான் அவர் திலினியை சந்தித்தார். சுபசிங்க அப்போது அவரது ஊரான மாவத்தகமவில் தங்கியிருந்தார். 

‘நான் உடல் ஊனமுற்ற பின் தான் திலினியும் நானும் காதல் தொடர்பை ஏற்படுத்தி இருந்தோம். அவர்களின் வீட்டில் எனக்கு ஒருபோதும் எதிர்ப்பு இருக்கவில்லை. நல்ல பண்பு உடையவர் என்றால், மகள் விருப்பம் என்றால் தாமும் விருப்பம் என்றே அவர்களின் பெற்றோர் கூறினார்கள். எனது வீட்டிலும் எதிர்ப்பு இருக்கவில்லை. எனது உடல் குறை எனக்கும் திலினிக்கும் பிரச்சினை இல்லை. எனது எல்லா தேவைகளையும் அவர் நிறைவேற்றுகிறார். அவர் எனக்காக பெரும் அர்ப்பணிப்போடு இன்றும் செயற்படுகிறார். திலினியும் மகனும் தான் இன்று எனது உலகம்.’    

வேலைப்பலுவுடைய சுபசிங்க அவரது உலகத்தில் உலவுவதற்கு வாரத்தில் ஒரு நாள் தான் கிடைக்கிறது. எல்லா வாரத்திலும் சனிக்கிழமை மாலை வீட்டுக்குச் செல்லும் சுபசிங்க அடுத்தநாள் மாலை மீண்டும் கடற்படை விடுதிக்கு வருகிறார். அதற்கு பின்னர் தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபடுகிறார். 

>> மஹேல பயிற்றுவிப்பில் சம்பியன் பட்டம் வென்ற சௌத்தர்ன் பிரேவ்

‘எல்லாவற்றிலும் இருவரினதும் பொறுப்பை தெரிந்துகொண்டு எந்த வேலையையும் இலகுவாக மேற்கொள்கிறோம். எனது விளையாட்டு வாழ்வு, திருமண வாழ்வின் பொறுப்புகளை நாம் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொள்கிறோம். விளையாட்டு பயிற்சியின்போது எனது மனம் அதில் மாத்திரம் தான் இருக்கும். நான் எனது குடும்பத்திற்கு மாத்திரமானவன் அல்ல. தற்போது முழு இலங்கைக்கும் உரித்தானவன் என்று நினைக்கும்போது பெருமையாக உள்ளது. இலங்கையர்கள் என்னிடம் எதிர்பார்ப்பதற்கு நான் நியாயத்தை செய்ய வேண்டும். அதற்கான பயணத்தில் எனது மனைவி எனக்கு தந்திருக்கும் சுதந்திரம், கடற்படை அளவுக்கு பெறுமதி மிக்கது’ என்கிறார் சுபசிங்க.  

பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக் கொடியை உயர்த்துவதற்கு செல்லும் சுபசிங்கவுக்கு ThePapare.com வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.     

டோக்கியோ பாராலிம்பிக் விழாவின் அனைத்து விபரங்களை உங்களிடம் கொண்டுவருவதற்கு ThePapare.com   தயாராக உள்ளது. போட்டிகள் இம்மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. போட்டிகளை அனுபவிப்பதற்கு ThePapare.com  உடன் இணைந்திருங்கள்.

>> மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு <<