இந்திய அணியின் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து அணிக்கு எதிராக அடுத்து நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்டியாவுக்கு பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது உபாதைக்கு முகங்கொடுத்தார். இவருடைய இடது முழங்கால் பகுதியில் உபாதை ஏற்பட்டிருந்தது.
>> உலகக்கிண்ண குழாத்துடன் மேலதிக வீரர்களாக இணையும் சமீர, மெதிவ்ஸ்
அணியின் 9வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா பந்தை தடுக்க முற்பட்ட போது முழங்கால் உபாதைக்கு முகங்கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அவர் மைதானத்திலிருந்து வெளியேறியதுடன், குறித்த ஓவரின் மிகுதிப்பந்துகளை விராட் கோஹ்லி வீசியிருந்தார்.
மைதானத்திலிருந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியாவுக்கு ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் மீண்டும் மைதானத்துக்கு திரும்பியிருந்தார். அணிக்கு தேவையாக இருந்தால் துடுப்பெடுத்தாட முடியும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும், இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக இலகுவாக வெற்றிபெற்றிருந்தது.
இந்தநிலையில் ஹர்திக் பாண்டியா ஓய்வில் இருக்க வேண்டும் என அணி வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். எனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அணியுடன் தர்மசாலாவுக்கு பயணிக்க மாட்டார் எனவும் சுட்டிக்காட்டப்படடுள்ளது.
எனினும் அதனைத்தொடர்ந்து நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியுடன் லக்னோவில் ஹர்திக் பாண்டியா இணைந்துக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<