கொரோனா வைரஸ் கிரிக்கெட் போட்டிகளை மட்டும் ஒத்திவைக்கவில்லை. மாறாக அவுஸ்திரேலிய வீரர்கள் பெரும்பாலானோரின் திருமண வைபவங்களையும் நிறுத்தி வைத்துள்ளது என்ற செய்தி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து விளையாட்டு போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் நடக்க இருந்த ஒலிம்பிக் விளையாட்டு விழா, யூரோ கால்பந்து தொடர், விம்பிள்டன் டென்னிஸ் தொடர் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனவே, கொரோனா பீதியால் இந்த ஆண்டு விளையாட்டு போட்டிகள் ஏதாவது நடக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
இலங்கை வீரர்களின் உடற்தகுதி பேணப்படுகிறதா?
உலகளாவிய ரீதியில் தீவிரம் காட்டிவரும் கொவிட்-19 (கொரோனா வைரஸ்) காரணமாக
இதனால் போட்டிகளை நடத்த முடியாமல் விளையாட்டு அமைப்புகள் திணறி வருகின்றன. இதன் தாக்கம் கிரிக்கெட் விளையாட்டை பெரிதளவில் பாதித்துள்ளன.
குறிப்பாக பல நாடுகள் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியாமல் கோடிக்கணக்கான பணத்தை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பெரும்பாலும், ஜூலை மாதத்திற்குப் பிறகுதான் மீண்டும் கிரிக்கெட் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வீரர்கள் ஊதியத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது.
அதேபோல, கொரானா பீதியால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற வருவாய், நிதி நெருக்கடி காரணமாக வீரர், வீராங்கனைகளுக்கான புதிய ஒப்பந்தத்தை அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒருசில மாதங்களுக்கு பிற்போட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விளையாட்டு போட்டித் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டு அல்லது ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்து வீரர்களும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களின் திருமணங்கள் பிற்போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது கிரிக்கெட் உலகில் வியப்பை ஏற்படுத்தி இருந்தாலும், கொரோனா வைரஸின் தாக்கம் குறித்த கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்கள் திருமணத்தை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிச்சயித்து இருந்தனர். அவர்கள் அனைவரும் இப்போது தங்கள் திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர்.
ஆஸி. வீரர் ஸ்டீவ் ஓ கீபே முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
அவுஸ்திரேலியாவின் இடதுகை சுழல்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ’கீபே
அதில் இரண்டு வீரர்கள் நிச்சயம் செய்து கொண்டு, திருமண திகதியை முடிவு செய்ய முடியாமல் தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அணியின் சுழல்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா, பெண்கள் அணியின் இடது கை சுழல்பந்து வீச்சாளர் ஜெஸ் ஜொனஸ்சன், ஜெக்சன் பேர்ட், மிட்செல் ஸ்வெப்சன், அண்ட்ரூ டை, டி‘ஆர்கி ஷோர்ட், கெட்லின் ஃபிரையெட், அலிஸ்டர் மெக்டேர்மோட் ஆகியோருக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக திருமணங்கள் தள்ளிப்போகியுள்ளன. அதேவேளையில் கிளென் மக்ஸ்வெல், பெட் கம்மின்ஸ் ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து திருமண திகதிக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க