இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓல்டு டிராஃப்போர்டில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
கடந்த 22ஆம் திகதி தொடங்கிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 589 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.
ஜோ ரூட் 254 ஓட்டங்களும், அலைஸ்டர் குக் 105 ஓட்டங்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டுகளும், ஆமிர் மற்றும் ரஹத் அலி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.
பின்னர் முதல் இனிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி கிறிஸ் வோக்ஸின் அபாரப் பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியால் 198 ஓட்டங்களில் சுருண்டது. மிஸ்பா அதிகபட்சமாக 52 ஓட்டங்கள் சேர்த்தார்.
இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.
இங்கிலாந்து அணி 391 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற போதிலும் பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2ஆவது இனிங்ஸைத் தொடங்கியது.
3ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 98 ஓட்டங்கள் எடுத்திருந்தது. குக் 49 ஓட்டங்களுடனும், ரூட் 23 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று 4ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பாக விளையாடி அரைச்சதம் அடித்தனர்.
இங்கிலாந்து அணி 2ஆவது இனிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. குக் 76 ஓட்டங்களும், ரூட் 71 ஓட்டங்களும் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இரண்டு இனிங்ஸிலும் சேர்த்து இங்கிலாந்து 564 ஓட்டங்கள் முன்னிலை பெற்று இருந்தது. இதனால் பாகிஸ்தான் அணியின் போட்டி முடிவடைய 185 ஓவர்கள் மீதமிருக்க 565 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
சுமார் இரண்டு நாட்கள் இருந்த நிலையில். பாகிஸ்தான் இந்த இமாலய இலக்கை சேஸிங் செய்ய வேண்டுமென்றால் இங்கிலாந்தின் பலமான பந்து வீச்சை எதிர்த்து ஓவருக்கு சராசரியாக 3.05 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை காணப்பட்டது.
இதன் படி தமது வெற்றி இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 70.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 234 ஓட்டங்களுக்கு சுருண்டது.
பாகிஸ்தான் அணி சார்பாக முஹமத் ஹபீஸ் 42 ஓட்டங்களையும், அசாத் சபீக் 39 ஓட்டங்களையும், மிஸ்பா உல் ஹக் 35 ஓட்டங்களையும், முஹமத் அமீர் 29 ஓட்டங்களையும், பெற்றனர். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் ஜேம்ஸ் எண்டர்சன், மொயின் அலி மற்றும் க்றிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தினர்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 2ஆவது டெஸ்ட் போட்டியில் 330 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பதிவு செய்தது. போட்டியின் ஆட்ட நாயகனாக முதல் இனிங்ஸில் இரட்டை சதமும் 2ஆவது இனிங்ஸில் ஆட்டம் இழக்காமல் 71 ஓட்டங்களையும் பெற்ற ஜோ ரூட் தெரிவு செய்யப்பட்டார்.
போட்டியின் சுருக்கம்
இங்கிலாந்து – 589/8d
ஜோ ரூட் 254, அலைஸ்டர் குக் 105, க்றிஸ் வோக்ஸ் 58, ஜொனி பெயர்ஸ்டோவ் 58, பென் ஸ்டோக்ஸ் 34
வஹாப் ரியாஸ் 106/3, முஹமத் அமீர் 89/2, ரஹத் அலி 101/2
பாகிஸ்தான் – 198/10
மிஸ்பா உல் ஹக் 51, ஷான் மஷூட் 39, வஹாப் ரியாஸ் 39,
கிறிஸ் வோக்ஸ் 67/4, பென் ஸ்டோக்ஸ் 39/2
இங்கிலாந்து – 173/1d
எலஸ்டயர் குக் 76*, ஜோ ரூட் 71*
முஹமத் அமீர் 43/1
பாகிஸ்தான் – 234/10
முஹமத் ஹபீஸ் 42, அசாத் சபீக் 39, மிஸ்பா உல் ஹக் 35, முஹமத் அமீர் 29
ஜேம்ஸ் எண்டர்சன் 41/3, மொயின் அலி 88/3, க்றிஸ் வோக்ஸ் 41/3
இங்கிலாந்து அணி 330 ஓட்டங்களால் வெற்றி