ஐக்கிய அமெரிக்காவுடன் அதிர்ச்சி தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி

151

நேற்று (06) நடைபெற்று முடிந்த 2024ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியினை ஐக்கிய அமெரிக்கா சுப்பர் ஓவரில் வீழ்த்தியிருக்கின்றது.

இலங்கை – மே.தீவுகள் மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியானது!

மேலும் இந்த வெற்றியுடன் ஐக்கிய அமெரிக்கா உலகக் கிண்ணம் ஒன்றை வென்ற கிரிக்கட் அணியொன்றினை முதல் தடவையாக வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது.

குழு A அணிகளான ஐக்கிய அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய போட்டி டல்லாஸில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அமெரிக்க வீரர்கள் பாகிஸ்தானை துடுப்பாடப் பணித்தனர்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணியானது 7 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்கள் எடுத்தது. பாகிஸ்தான் துடுப்பாட்டம் சார்பில் பாபர் அசாம் 43 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம் சதாப் கான் 25 பந்துகளில் 3 சிக்ஸர்கள் ஒரு பௌண்டரியோடு 40 ஓட்டங்கள் எடுத்தார்.

ஐக்கிய அமெரிக்க அணியின் பந்துவீச்சில் நோஷ்டுஷ் கெஞ்சிகே 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்ற, சௌராப் நெத்ராவால்கர் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை சுருட்டினார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 160 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய அமெரிக்க அணியானது சிறந்த ஆரம்பத்தினை பெற்ற போதிலும் 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களையே எடுத்தது. இதனால் போட்டி சமநிலையானது. அமெரிக்கத் துடுப்பாட்டத்தில் 38 பந்துகளை எதிர்கொண்ட அதன் அணித்தலைவர் மோனான்க் பட்டேல் ஒரு சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்கள் எடுத்தார்.

இங்கிலாந்து தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி

பாகிஸ்தான் பந்துவீச்சில் மொஹமட் ஆமிர், நஷீம் சாஹ் மற்றும் ஹாரிஸ் ரவூப் ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் கைப்பற்றினர். பின்னர் போட்டி சுப்பர் ஓவருக்கு சென்றது. சுப்பர் ஓவரில் 19 ஓட்டங்கள் பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட போதிலும் 13 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற பாகிஸ்தான் அணி போட்டியினை அமெரிக்காவிடம் பறிகொடுத்தது. போட்டியின் ஆட்டநாயகனாக            மோனான்க் பட்டேல் தெரிவானார்.

போட்டியின் சுருக்கம்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<