Home Tamil ரிஸ்வான், சபீக்கின் சதங்களோடு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெற்றி

ரிஸ்வான், சபீக்கின் சதங்களோடு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெற்றி

ICC ODI World Cup 2023

1462

ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்காக இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியிருந்த போட்டியில் பாகிஸ்தான் அணியானது 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருக்கின்றது.

>>தோல்வியுடன் சேர்த்து இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபாராதம்

முன்னதாக ஹைதராபாத் நகரில் நடைபெற்றிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தெரிவு செய்திருந்தார்.

இப்போட்டிக்கான இலங்கை அணி கசுன் ராஜிதவிற்குப் பதிலாக மகீஷ் தீக்ஷனவிற்குப் வாய்ப்பு வழங்கியிருந்தது. அதேநேரம் பாகிஸ்தான் பகார் சமானுக்குப் பதிலாக அப்துல்லா சபீக்கிற்கு வாய்ப்பு வழங்கியிருந்தது.

இலங்கை XI

குசல் பெரேரா, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, சரித் அசலன்க, தனன்ஞய டி சில்வா, தசுன் ஷானக்க (தலைவர்), துனித் வெல்லாலகே, மதீஷ பதிரன, டில்சான் மதுசங்க, மகீஷ் தீக்ஷன

பாகிஸ்தான் XI

அப்துல்லா சபீக், இமாம்உல்ஹக், பாபர் அசாம் (தலைவர்), மொஹமட் ரிஸ்வான், சௌத் சகீல், இப்திக்கார் அஹ்மட், மொஹமட் நவாஸ், சதாப் கான், ஹஸன் அலி, சஹீன் அப்ரிடி, ஹரிஸ் ரவுப்

இதன் பின்னர் நாணய சுழற்சிக்கு அமைய துடுப்பாட்டத்தினை தொடங்கிய இலங்கை அணியானது குசல் பெரேரா மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோரோடு களம் வந்திருந்தது. போட்டி தொடங்கி சிறிது நேரத்தில் குசல் பெரேரா ஓட்டமேதுமின்றி தனது விக்கெட்டினை ஹஸன் அலியின் பந்துவீச்சில் பறிகொடுத்தார்.

தொடர்ந்து இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த குசல் மெண்டிஸ் – பெதும் நிஸ்ஸங்க ஆகிய இருவரும் இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டமாக 102 ஓட்டங்களைப் பதிவு செய்தனர். இந்த இணைப்பாட்டத்தின் நிறைவாக ஆட்டமிழந்த பெதும் நிஸ்ஸங்க தன்னுடைய 10ஆவது ஒருநாள் சதத்தோடு 61 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன் பின்னர் இலங்கை அணிக்காக அதிரடியாக ஆடத் தொடங்கிய குசல் மெண்டிஸ் 65 பந்துகளில் சதம் விளாசி இலங்கைத் தரப்பினைப் பலப்படுத்தியிருந்தார். அத்துடன் அவர் இலங்கை அணியின் மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக 111 ஓட்டங்களை சதீர சமரவிக்ரமவுடன் சேர்ந்து பகிர்ந்தார்.

இந்த இணைப்பாட்டத்தின் நிறைவாக ஹஸன் அலியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த குசல் மெண்டிஸ் 6 சிக்ஸர்கள் மற்றும் 14 பௌண்டரிகள் அடங்கலாக 122 ஓட்டங்கள் எடுத்தார். இந்த சதம் மூலம் குசல் மெண்டிஸ் இலங்கை அணிக்காக ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிவேக சதம் பெற்ற வீரராக மாறியதோடு, அது அவரின் மூன்றாவது ஒருநாள் சதமாகவும் மாறியது.

>>குசல் மெண்டிஸிற்கு உபாதை ; இலங்கை கிரிக்கெட் சபையின் அறிவிப்பு!

தொடர்ந்து சதீர சமரவிக்ரமவும் சதம் விளாசிய நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியானது 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 344 ஓட்டங்களை எடுத்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் தன்னுடைய கன்னி ஒருநாள் சதத்தினைப் பதிவு செய்த சதீர சமரவிக்ரம 89 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 122 ஓட்டங்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஹஸன் அலி 71 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதோடு, ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டுக்களை சுருட்டினார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணியானது ஆரம்பத்தில் தடுமாறிய போதிலும் மொஹமட் ரிஸ்வான் மற்றும் அப்துல்லா சபீக் ஆகியோரது சதங்களோடு போட்டியின் வெற்றி இலக்கினை 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 345 ஓட்டங்களுடன் அடைந்தது.

பாகிஸ்தான் அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் மொஹமட் ரிஸ்வான் 121 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 131 ஓட்டங்கள் எடுக்க, அப்துல்லா சபீக் 103 பந்துகளில் 113 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் டில்சான் மதுசங்க 02 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்த போதும் அது வீணாகியிருந்தது. இப்போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர்களில் அதிக ஓட்டங்களை விரட்டிய அணியாக புதிய சாதனையினையும் நிலை நாட்டியிருக்கின்றது. போட்டியின் ஆட்டநாயகனாக மொஹமட் ரிஸ்வான் தெரிவாகினார்.

உலகக் கிண்ணத்தில் தமது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியினைச் சந்தித்திருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியானது அடுத்ததாக அவுஸ்திரேலியாவினை எதிர்வரும் திங்கட்கிழமை (16) சந்திக்கின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


Pakistan
345/4 (48.2)

Sri Lanka
344/9 (50)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Abdullah Shafique b Shadab Khan 51 61 7 1 83.61
Kusal Perera c Mohammad Rizwan b Hasan Ali 0 4 0 0 0.00
Kusal Mendis c Imam-ul-Haq b Hasan Ali 122 77 14 6 158.44
Sadeera Samarawickrama c Mohammad Rizwan b Hasan Ali 108 89 11 2 121.35
Charith Asalanka c Mohammad Rizwan b Hasan Ali 1 3 0 0 33.33
Dhananjaya de Silva c Shaheen Shah Afridi b Mohammad Nawaz 25 34 3 0 73.53
Dasun Shanaka c Babar Azam b Shaheen Shah Afridi 12 18 0 0 66.67
Dunith Wellalage c Abdullah Shafique b Haris Rauf 10 8 1 0 125.00
Mahesh Theekshana b Haris Rauf 0 4 0 0 0.00
Matheesha Pathirana not out 1 3 0 0 33.33


Extras 14 (b 2 , lb 2 , nb 1, w 9, pen 0)
Total 344/9 (50 Overs, RR: 6.88)
Bowling O M R W Econ
Shaheen Shah Afridi 9 0 66 1 7.33
Hasan Ali 10 0 71 4 7.10
Mohammad Nawaz 9 0 62 1 6.89
Haris Rauf 10 0 64 2 6.40
Shadab Khan 8 0 55 1 6.88
Iftikhar Ahmed 4 0 22 0 5.50


Batsmen R B 4s 6s SR
Abdullah Shafique c Dushan Hemantha b Matheesha Pathirana 113 103 9 3 109.71
Imam-ul-Haq c Kusal Perera b Dilshan Madushanka 12 12 1 0 100.00
Babar Azam c Sadeera Samarawickrama b Dilshan Madushanka 10 15 1 0 66.67
Mohammad Rizwan not out 131 121 8 3 108.26
Saud Shakeel c Dunith Wellalage b Mahesh Theekshana 31 30 2 0 103.33
Iftikhar Ahmed not out 22 10 0 0 220.00


Extras 26 (b 0 , lb 0 , nb 1, w 25, pen 0)
Total 345/4 (48.2 Overs, RR: 7.14)
Bowling O M R W Econ
Mahesh Theekshana 10 0 59 1 5.90
Dilshan Madushanka 9.2 0 60 2 6.52
Dasun Shanaka 5 0 28 0 5.60
Matheesha Pathirana 9 0 90 1 10.00
Dunith Wellalage 10 0 62 0 6.20
Dhananjaya de Silva 4 0 36 0 9.00
Charith Asalanka 1 0 10 0 10.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<