Home Tamil அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

341
Getty Images

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இடையிலான T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

மேலும் இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து பாகிஸ்தான் அணி இந்த T20 உலகக் கிண்ணத் தொடரில் முன்னேறுகின்றது.

மே.தீவுகளை வீழ்த்தி வெற்றிக் ஓட்டத்தை ஆரம்பித்த தென்னாபிரிக்கா

முன்னதாக ஷார்ஜாவில் தொடங்கிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் சந்தர்ப்பத்தினை தெரிவு செய்தார்.

அதன்படி T20 உலகக் கிண்ண தமது முதல் போட்டியில் இந்தியாவினை வீழ்த்திய பாகிஸ்தான், துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த நியூசிலாந்து வீரர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றம் ஏற்படுத்தியிருந்தது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி தொடர்ந்தும் தடுமாற்றத்தில் இருந்து மீளாத நிலையில் 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்பத்துடுப்பாட்டவீரராக களம் வந்த டேரைல் மிச்சல் மற்றும் டெவோன் கொன்வேய் ஆகியோர் தலா 27 ஓட்டங்கள் வீதம் பெற்றிருக்க, அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 25 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜப்னா கிங்ஸ் அணியுடன் இணையும் டு பிளெசிஸ், வஹாப் ரியாஷ்

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் ஹரிஸ் ரவுப் வெறும் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க சஹீன் அப்ரிடி, இமாத் வஸீம் மற்றும் சஹீன் அப்ரிடி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கினை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தின் சுழல்பந்துவீச்சாளர்களினால் தடுமாற்றம் காட்டிய போதும் சொஹைப் மலிக் மற்றும் ஆசிப் அலி ஆகியோர் நிதானமான முறையில் துடுப்பாடி அணியினை வெற்றிப்பாதைக்கு வழிநடாத்தினர். அந்தவகையில் பாகிஸ்தான் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களுடன் அடைந்தது.

T20 உலகக்கிண்ணத்தில் தனித்துவமான சாதனையை படைத்த முஜீப்

பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த சொஹைப் மலிக் 20 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஒரு சிக்ஸர் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 26 ஓட்டங்கள் பெற, ஆசிப் அலி வெறும் 12 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 27 ஓட்டங்களை எடுத்திருந்தார். மறுமுனையில், மொஹமட் ரிஸ்வானும் 33 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கினார்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் இஸ் சோதி 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ட்ரென்ட் போல்ட், மிச்சல் சான்ட்னர் மற்றும் டிம் சௌத்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணிக்காக பந்துவீச்சில் அசத்தியிருந்த ஹரிஸ் ரவுப் தெரிவாகினார்.

இரண்டு வெற்றிகளுடன் T20 உலகக் கிண்ணத்தினை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ள பாகிஸ்தான் அணி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29) ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள, தமது அடுத்த போட்டியில் நியூசிலாந்து ஞாயிற்றுக்கிழமை (31) இந்தியாவினை எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் – 134/8 (20) டேரைல் மிச்சல் 27(20), டெவோன் கொன்வேய் 27(24), ஹரிஸ் ரவுப் 22/4(4)

நியூசிலாந்து – 135/5 (18.4) மொஹமட் ரிஸ்வான் 33(34), இஸ் சோதி 28/2 (4)

முடிவு – பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<


Result


Pakistan
135/5 (18.4)

New Zealand
134/8 (20)

Batsmen R B 4s 6s SR
Daryl Mitchell b Haris Rauf 17 20 3 0 85.00
Martin Guptill c Fakhar Zaman b Imad Wasim 27 20 1 2 135.00
Kane Williamson run out () 25 26 2 1 96.15
James Neesham c Fakhar Zaman b Mohammad Hafeez 1 2 0 0 50.00
Devon Conway c Babar Azam b Haris Rauf 27 24 3 0 112.50
Glenn Phillips c Hasan Ali b Haris Rauf 13 15 1 0 86.67
Tim Seifert ( c Mohammad Hafeez b Shaheen Shah Afridi 8 8 1 0 100.00
Mitchell Santner b Haris Rauf 6 5 1 0 120.00
Ish Sodhi not out 2 2 0 0 100.00


Extras 8 (b 1 , lb 5 , nb 2, w 0, pen 0)
Total 134/8 (20 Overs, RR: 6.7)
Fall of Wickets 1-36 (5.2) Martin Guptill, 2-54 (8.2) Daryl Mitchell, 3-56 (9.1) James Neesham, 4-90 (13.1) Kane Williamson, 5-116 (17.1) Devon Conway, 6-116 (17.3) Glenn Phillips, 7-125 (18.6) Tim Seifert (, 8-134 (19.6) Mitchell Santner,

Bowling O M R W Econ
Shaheen Shah Afridi 4 1 21 0 5.25
Imad Wasim 4 0 24 1 6.00
Hasan Ali 3 0 26 0 8.67
Haris Rauf 4 0 22 4 5.50
Shadab Khan 3 0 19 0 6.33
Mohammad Hafeez 2 0 16 1 8.00


Batsmen R B 4s 6s SR
Mohammad Rizwan lbw b Ish Sodhi 33 34 5 0 97.06
Babar Azam b Tim Southee 9 11 1 0 81.82
Fakhar Zaman lbw b Ish Sodhi 11 17 0 1 64.71
Mohammad Hafeez c Devon Conway b Mitchell Santner 11 6 0 1 183.33
Shoaib Malik not out 26 20 2 1 130.00
Imad Wasim lbw b Trent Boult 11 12 1 0 91.67
Asif Ali not out 27 12 1 3 225.00


Extras 7 (b 0 , lb 2 , nb 5, w 0, pen 0)
Total 135/5 (18.4 Overs, RR: 7.23)
Fall of Wickets 1-28 (5.1) Babar Azam, 2-47 (8.6) Fakhar Zaman, 3-63 (10.6) Mohammad Hafeez, 4-69 (11.4) Mohammad Rizwan, 5-87 (14.5) Imad Wasim,

Bowling O M R W Econ
Mitchell Santner 4 0 33 1 8.25
Tim Southee 4 0 25 1 6.25
Trent Boult 3.4 0 29 1 8.53
James Neesham 3 0 18 0 6.00
Ish Sodhi 4 0 29 2 7.25