Home Tamil T20 உலகக் கிண்ண அரையிறுதிக்கு தகுதிபெற்றது பாகிஸ்தான்

T20 உலகக் கிண்ண அரையிறுதிக்கு தகுதிபெற்றது பாகிஸ்தான்

ICC T20 World Cup – 2021

308

T20 உலகக் கிண்ணத்தில் சுபர் 12 சுற்றின் நமீபியா அணிக்கெதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 45 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

இந்த வெற்றியின் மூலம் சுபர் 12 சுற்றின் இரண்டாவது குழுவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளைப் பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

T20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று (02) இரவு அபுதாபியில் நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் – நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் ஆரம்ப வீரர்களான மொஹமட் ரிஸ்வான், பாபர் அசாம் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

வேகப்பந்துவீச்சாளர்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்த தென்னாபிரிக்கா

சிறப்பாக விளையாடிய அணித்தலைவர் பாபர் அசாம் 49 பந்துகளில் 70 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுபுறத்தில் நமீபியா அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்ட மெஹமட் ரிஸ்வான் 50 பந்துகளில் அரைச்சதம் கடந்து 79 ஓட்டங்களையும், அவருடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடிய மொஹமட் ஹபீஸ் 16 பந்துகளில் 5 பௌண்டரிகளை விளாசி 32 ஓட்டங்களைக் குவித்தார்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஒவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

நமீபியா அணியின் பந்துவீச்சில் டேவிட் வீஸி மற்றும் ஜான் ப்ரைலின்க் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இதையடுத்து கடின இலக்கை துரத்திய நமீபியா அணி ஆரம்பத்திலே தடுமாறியது. இருப்பினும் கிரைக் வில்லியம்ஸ் – டேவிட் வீஸி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வலுச்சேர்த்தனர்.

வனிந்துவின் போராட்டம் வீணாக இங்கிலாந்திடம் வீழ்ந்த இலங்கை!

இதில் கிரைக் வில்லியம்ஸ் 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பின்வரிசை வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். இதனால் 20 ஓவர்கள் நிறைவில் நமீபியா அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

துடுப்பாட்டத்தில் டேவிட் வீஸி ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஹசன் அலி, இமாத் வசிம், சதாப் கான் மற்றும் ஹரீஸ் ரவூப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இதன் மூலம் பாகிஸ்தான் அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தியதுடன், இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணியைத் தொடர்ந்து அரையிறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இரண்டாவது அணியாக தகுதிபெற்றது.

நியூசிலாந்திடம் வரலாற்றுத் தோல்வியை சந்தித்த இந்தியா

மறுபுறத்தில் T20 உலகக் கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக பங்குபற்றியுள்ள நமீபியா அணி, இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2இல் தோல்வியைத் தழுவியுள்ளது.

இதன்படி, பாகிஸ்தான் அணி சுபர் 12 சுற்றில் தமது கடைசி லீக் போட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) ஸ்கொட்லாந்து அணியை சந்திக்கவுள்ளதுடன், நமீபியா அணி தமது அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) எதிர்கொள்கின்றது.


Result


Pakistan
189/2 (20)

Namibia
144/5 (20)

Batsmen R B 4s 6s SR
Mohammad Rizwan not out 79 50 8 4 158.00
Babar Azam c Jan Frylinck b David Wiese 70 49 7 0 142.86
Fakhar Zaman c Zane Green b Jan Frylinck 5 5 0 0 100.00
Mohammad Hafeez not out 32 16 5 0 200.00


Extras 3 (b 0 , lb 3 , nb 0, w 0, pen 0)
Total 189/2 (20 Overs, RR: 9.45)
Fall of Wickets 1-113 (14.2) Babar Azam, 2-122 (15.4) Fakhar Zaman,

Bowling O M R W Econ
Ruben Trumpelmann 4 1 36 0 9.00
David Wiese 4 0 30 1 7.50
JJ Smit 4 0 50 0 12.50
Jan Frylinck 4 0 31 1 7.75
Ben Shikongo 2 0 19 0 9.50
Jan Nicol Loftie-Eaton 2 0 20 0 10.00


Batsmen R B 4s 6s SR
Stephan Baard run out (Haris Rauf) 29 29 1 1 100.00
Michael van Lingen b Hasan Ali 4 2 1 0 200.00
Craig Williams c Hasan Ali b Shadab Khan 40 37 5 1 108.11
Gerhard Erasmus c Shadab Khan b Imad Wasim 15 10 1 1 150.00
David Wiese not out 43 31 3 2 138.71
JJ Smit c Fakhar Zaman b Haris Rauf 2 5 0 0 40.00
Jan Nicol Loftie-Eaton not out 7 7 0 0 100.00


Extras 4 (b 0 , lb 2 , nb 1, w 1, pen 0)
Total 144/5 (20 Overs, RR: 7.2)
Fall of Wickets 1-8 (1.3) Michael van Lingen, 2-55 (8.4) Stephan Baard, 3-83 (12.3) Gerhard Erasmus, 4-93 (13.6) Craig Williams, 5-110 (16.5) JJ Smit,

Bowling O M R W Econ
Shaheen Shah Afridi 4 0 36 0 9.00
Hasan Ali 4 0 22 1 5.50
Imad Wasim 3 0 13 1 4.33
Haris Rauf 4 0 25 1 6.25
Shadab Khan 4 0 35 1 8.75
Mohammad Hafeez 1 0 11 0 11.00



>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<