Home Tamil வோர்னரின் சதத்தோடு பாகிஸ்தானை வீழ்த்திய அவுஸ்திரேலியா

வோர்னரின் சதத்தோடு பாகிஸ்தானை வீழ்த்திய அவுஸ்திரேலியா

287
AFP

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின், 17 ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.

டோன்டன் நகரில் புதன்கிழமை (12) ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹ்மட் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை அவுஸ்திரேலிய அணிக்காக வழங்கினார்.

ஐ.சி.சிக்கு நெருக்கடியை கொடுத்துள்ள சீரற்ற காலநிலை

இங்கிலாந்தில் திடீர் மழையால் உலகக் கிண்ணப் போட்டிகள் பாதிப்புக்குள்ளாகி…

இந்த உலகக் கிண்ணத் தொடரில் தமது கடைசிப் போட்டியில் இலங்கை அணியுடன் பாகிஸ்தான் விளையாட இருந்த நிலையில் குறித்த போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. அப்போட்டியில் ஒரு புள்ளியினைப் பெற்றுக் கொண்ட பாகிஸ்தான் அணி இப்போட்டியில் ஒரு மாற்றத்தினை மேற்கொண்டிருந்தது.

அந்தவகையில், மணிக்கட்டு சுழல் வீரரான சதாப் கானிற்கு பதிலாக வேகப் பந்துவீச்சாளரான சஹீன் அப்ரிடி பாகிஸ்தான் அணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்தார்.

பாகிஸ்தான் அணி – இமாம்-உல்-ஹக், பக்கார் சமான், பாபர் அசாம், சொஹைப் மலிக், மொஹமட் ஹபீஸ், சர்பராஸ் அஹ்மட் (அணித்தலைவர்), ஆசிப் அலி, சஹீன் அப்ரிடி, ஹஸன் அலி, வஹாப் ரியாஸ், மொஹம்மட் ஆமீர்

மறுமுனையில் அவுஸ்திரேலிய அணி இப்போட்டியில் இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. இடுப்புத் தசை உபாதைக்கு ஆளாகிய சகலதுறை வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் அடம் சம்பா ஆகியோருக்கு பதிலாக முன்வரிசை துடுப்பாட்ட வீரர் சோன் மார்ஷ், வேகப் பந்துவீச்சாளர் கேன் றிச்சர்ட்ஸன் ஆகியோர் அவுஸ்திரேலிய அணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

அவுஸ்திரேலிய அணி – ஆரோன் பின்ச் (அணித்தலைவர்), டேவிட் வோர்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், கிளென் மெக்ஸ்வெல், சோன் மார்ஷ், அலெக்ஸ் கேரி, கோல்டர்-நைல், பெட் கமின்ஸ், மிச்செல் ஸ்டார்க், கேன் றிச்சர்ட்ஸன்

இதனையடுத்து டேவிட் வோர்னர் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வர அவுஸ்திரேலிய அணி, தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது.

அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்த ஆரோன் பின்ச், டேவிட் வோர்னர் ஜோடி மிகவும் சிறப்பான ஆரம்பத்தை கொடுத்தது. இரண்டு வீரர்களும் அரைச்சதங்களை கடந்தனர். அதுமட்டுமின்றி, இந்த ஜோடி அவுஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 146 ஓட்டங்களையும் குவித்தது.

ஸ்டோய்னிஸை இழக்கும் நிலையில் உள்ளதா அவுஸ்திரேலியா?

கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) இடம்பெற்ற அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள்..

இதன் பின்னர், அவுஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டாக ஆரோன் பின்ச், மொஹமட் ஆமிரின் வேகத்திற்கு இரையாகினார். பின்ச் ஆட்டமிழக்கும் போது  தன்னுடைய 23 ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 84 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 82 ஓட்டங்களை குவித்திருந்தார். பின்ச் இப்போட்டி மூலம் இந்த உலகக் கிண்ணத் தொடரில் அவரது இரண்டாவது அரைச்சதத்தினையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்ச்சினை அடுத்து புதிய துடுப்பாட்ட வீரராக வந்த ஸ்டீவ் ஸமித் வெறும் 10 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார். அவரை அடுத்து வந்த கிளென் மெக்ஸ்வெல் அதிரடி காட்டிய போதிலும் அவரினால் 10 பந்துகளில் 20 ஓட்டங்களையே பெற முடியுமாக இருந்தது.

எனினும், ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த டேவிட் வோர்னர் ஒருநாள் போட்டிகளில் பதிவு செய்த தனது 15 ஆவது சதத்துடன் அவுஸ்திரேலிய அணிக்கு வலுச்சேர்த்தார். வோர்னரின் இந்த சதத்தோடு அவுஸ்திரேலிய அணியும் நல்ல நிலைக்கு முன்னேறியது.

பின்னர், டேவிட் வோர்னர் சஹீன் சாஹ் அப்ரிடியின் வேகத்திற்கு இலக்காகி அவுஸ்திரேலிய அணியின் 4 ஆம் விக்கெட்டாக ஓய்வறை நடந்தார். வோர்னரின் விக்கெட்டுக்கு பின்னர் அவுஸ்திரேலிய அணி, மொஹமட் ஆமிரின் வேகத்திற்கு ஈடுகொடுக்கக முடியாமல் குறுகிய ஓட்ட இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

முடிவில், 49 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த அவுஸ்திரேலிய அணி 307 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் மத்திய வரிசை வீரர்களில் சோன் மார்ஷ் மாத்திரம் இருபது ஒட்டங்களை (23) கடந்திருக்க, சதம் பெற்ற டேவிட் வோர்னர் 111 பந்துகளில் 11 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 107 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இதேநேரம் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் மொஹமட் ஆமீர் 30 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி ஒருநாள் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சு பிரதியினை பதிவு செய்ததோடு, சஹீன் சாஹ் அப்ரிடி 70 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

>> உலகக் கிண்ணத்தின் துரதிஷ்ட பதிவுக்குள்ளான இலங்கை அணி

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 308 ஓட்டங்களை அடைவதற்கு பாகிஸ்தான் அணி, பக்கார் சமான் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோருடன் தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது.

பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பக்கார் சமான் ஓட்டமேதுமின்றி ஆட்டமிழந்தார். இதனை அடுத்து புதிய துடுப்பாட்ட வீரராக வந்த பாபர் அசாம் நல்ல முறையில் தனது இன்னிங்ஸை ஆரம்பித்த போதிலும் 30 ஓட்டங்களை மட்டுமே பெற்றார்.

எனினும், ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இமாம்-உல்-ஹக் ஒருநாள் போட்டிகளில் தான் பெற்ற 6 ஆவது அரைச்சதத்தோடு தனது தரப்பிற்கு வலுச் சேர்த்தார். தொடர்ந்து இமாம்-உல்-ஹக்கின் விக்கெட் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பெட் கம்மின்ஸின் பந்துவீச்சில் பறிபோனது. இமாம்-உல்-ஹக் ஆட்டமிழக்கும் போது 75 பந்துகளில் 6 பௌண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இதனை அடுத்து, மொஹமட் ஹபீஸ், பாகிஸ்தான் அணியின் வெற்றி இலக்கினை எட்டும் பயணத்திற்கு 46 ஓட்டங்கள் பெற்று உதவினார். அவரை அடுத்து பாகிஸ்தான் அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இதனால், பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 160 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

எனினும் பின்வரிசையில் துடுப்பாடிய வஹாப் ரியாஸ், ஹஸன் அலி ஆகியோர் தமது அதிரடியான துடுப்பாட்டம் மூலம் பாகிஸ்தானின் வெற்றிக்காக முயற்சித்தனர். ஆனால், அவர்களது முயற்சிகள் கைகொடுக்காமல் போக பாகிஸ்தான் அணி 45.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 266 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் அதிரடியாக செயற்பட்ட வஹாப் ரியாஸ், 39 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்களை பெற்றார். அதேநேரம் ஹஸன் அலி 15 பந்துகளுக்கு 32 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பில் பெட் கம்மின்ஸ் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்ததோடு, மிச்செல் ஸ்டார்க் மற்றும் கேன் றிச்சர்ட்ஸன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு டில்ஷான் கூறும் அறிவுரை

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமாக செயற்பட, நடைபெறவிருக்கும்..

போட்டியின் ஆட்ட நாயகனாக அவுஸ்திரேலிய அணியின் டேவிட் வோர்னர் தெரிவாகினார்.

இப்போட்டியோடு இந்த உலகக் கிண்ணத் தொடரில் தம்முடைய 3ஆவது வெற்றியை பதிவு செய்துள்ள அவுஸ்திரேலிய அணி, தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் எதிர்வரும் சனிக்கிழமை (15) லண்டன் நகரில் வைத்து எதிர்கொள்கின்றது.  

இதேநேரம், மன்செஸ்டர் நகரில் பாகிஸ்தான் அணி தமது அடுத்த உலகக் கிண்ண போட்டியில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16) இந்திய அணியுடன் மோதுகின்றது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<

ஸ்கோர் விபரம்

Result


Australia
307/10 (49)

Pakistan
266/10 (45.4)

Batsmen R B 4s 6s SR
Aaron Finch c Mohammad Hafeez b Mohammad Amir 82 84 6 4 97.62
David Warner c Imam-ul-Haq b Shaheen Shah Afridi 107 111 11 1 96.40
Steve Smith c Asif Ali b Mohammad Hafeez 10 13 1 0 76.92
Glenn Maxwell b Shaheen Shah Afridi 20 10 2 1 200.00
Shaun Marsh c Shoaib Malik b Mohammad Amir 23 26 2 0 88.46
Usman Khawaja c Wahab Riaz b Mohammad Amir 18 16 3 0 112.50
 Alex Carey lbw b Mohammad Amir 20 21 0 0 95.24
Nathan Coulter-Nile c Sarfaraz Ahmed b Wahab Riaz 2 3 0 0 66.67
Pat Cummins c Sarfaraz Ahmed b Hasan Ali 2 7 0 0 28.57
Mitchell Starc c Shoaib Malik b Mohammad Amir 3 6 0 0 50.00
Jhye Richardson not out 1 1 0 0 100.00


Extras 19 (b 0 , lb 10 , nb 3, w 6, pen 0)
Total 307/10 (49 Overs, RR: 6.27)
Fall of Wickets 1-146 (22.1) Aaron Finch, 2-189 (28.4) Steve Smith, 3-223 (33.4) Glenn Maxwell, 4-242 (37.5) David Warner, 5-277 (42.1) Usman Khawaja, 6-288 (44.3) Shaun Marsh, 7-299 (46.2) Nathan Coulter-Nile, 8-302 (47.3) Pat Cummins, 9-304 (48.3)  Alex Carey, 10-307 (48.6) Mitchell Starc,

Bowling O M R W Econ
Mohammad Amir 10 2 30 5 3.00
Shaheen Shah Afridi 10 0 70 2 7.00
Hasan Ali 10 0 67 1 6.70
Wahab Riaz 8 0 44 1 5.50
Mohammad Hafeez 7 0 60 1 8.57
Shoaib Malik 4 0 26 0 6.50


Batsmen R B 4s 6s SR
Imam-ul-Haq c  Alex Carey b Pat Cummins 53 75 7 0 70.67
Fakhar Zaman c Kane Richardson b Pat Cummins 0 3 0 0 0.00
Babar Azam c Kane Richardson b Nathan Coulter-Nile 30 28 7 0 107.14
Mohammad Hafeez c Mitchell Starc b Aaron Finch 46 49 3 1 93.88
Sarfaraz Ahmed run out (Glenn Maxwell) 40 48 1 0 83.33
Shoaib Malik c  Alex Carey b Pat Cummins 0 2 0 0 0.00
Asif Ali c  Alex Carey b Kane Richardson 5 8 0 0 62.50
Hasan Ali c Usman Khawaja b Kane Richardson 32 15 3 3 213.33
Wahab Riaz c  Alex Carey b Mitchell Starc 45 39 2 3 115.38
Mohammad Amir b Mitchell Starc 0 2 0 0 0.00
Shaheen Shah Afridi not out 1 6 0 0 16.67


Extras 14 (b 0 , lb 4 , nb 1, w 9, pen 0)
Total 266/10 (45.4 Overs, RR: 5.82)
Fall of Wickets 1-2 (2.1) Fakhar Zaman, 2-56 (10.5) Babar Azam, 3-136 (25.1) Imam-ul-Haq, 4-146 (26.6) Mohammad Hafeez, 5-147 (27.3) Shoaib Malik, 6-160 (29.6) Hasan Ali, 7-200 (33.5) Asif Ali, 8-264 (44.2) Wahab Riaz, 9-265 (44.4) Mohammad Amir, 10-266 (45.4) Sarfaraz Ahmed,

Bowling O M R W Econ
Pat Cummins 10 0 33 3 3.30
Mitchell Starc 9 1 43 2 4.78
Kane Richardson 8.4 0 62 2 7.38
Nathan Coulter-Nile 9 0 53 1 5.89
Glenn Maxwell 7 0 58 0 8.29
Aaron Finch 2 0 13 1 6.50



முடிவு – அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டங்களால் வெற்றி