Home Tamil ஆப்கான் வெற்றியுடன் அரையிறுதி வாய்ப்பை அதிகரித்துக் கொண்ட பாகிஸ்தான்

ஆப்கான் வெற்றியுடன் அரையிறுதி வாய்ப்பை அதிகரித்துக் கொண்ட பாகிஸ்தான்

262
ICC

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 36ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தான் அணியை 3 விக்கெட்டுக்களால் தோற்கடித்துள்ளது.

லீட்ஸ் நகரில் இன்று (29) நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் குல்படின் நயீப் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தெரிவு செய்து கொண்டார்.

கார்லோஸ் பிரெத்வெய்ட்டுக்கு ஐ.சி.சி இனால் அபராதம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய ஒழுக்க விதிமுறையை மீறிய குற்றச்சாட்டில்…

இந்த உலகக் கிண்ணத் தொடரில் இதுவரையில் எந்த போட்டிகளிலும் வெற்றி பெறாது அரையிறுதிச் சுற்று வாய்ப்பை இழந்திருக்கும் ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தமது முதல் வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் இப்போட்டியில் ஒரு மாற்றத்தினை மேற்கொண்டிருந்தது. அதன்படி,  ஆப்கானிஸ்தான் அணியில் அப்தாப் ஆலத்திற்கு பதிலாக ஹமிட் ஹஸன் இணைக்கப்பட்டிருந்தார்.

ஆப்கானிஸ்தான் அணி  – குல்படின் நயீப் (அணித்தலைவர்), றஹ்மத் ஷாஹ், ஹஷ்மத்துல்லா சஹிதி, அஸ்கர் ஆப்கான், மொஹமட் நபி, நஜிபுல்லாஹ் சத்ரான், சமியுல்லா ஷின்வாரி, ரஷீத் கான், இக்ராம் அலி கில், ஹமிட் ஹஸன், முஜிபுர் ரஹ்மான் 

இதேநேரம் இந்த உலகக் கிண்ணத் தொடரில் மூன்று வெற்றிகளுடன் தமது அரையிறுதிச் சுற்றுக்கான வாய்ப்பினை உயிர்ப்புடன் வைத்துள்ள பாகிஸ்தான் அணி எந்த மாற்றங்களுமின்றி களமிறங்கியது. 

பாகிஸ்தான் அணி – இமாம்-உல்-ஹக், பக்கார் சமான், பாபர் அசாம், மொஹமட் ஹபீஸ், ஹரிஸ் சொஹைல், சர்பராஸ் அஹ்மட் (அணித்தலைவர்), இமாத் வஸீம், சதாப் கான், வஹாப் ரியாஸ், மொஹமட் ஆமீர், சஹீன் அப்ரிடி 

இதனை அடுத்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணிக்கு, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக அதன் தலைவர் குல்படின் நயீப் மற்றும் றஹ்மத் ஷாஹ் ஆகியோர் களம் வந்தனர். எனினும், ஆப்கானிஸ்தான் அணிக்கு சிறந்த ஆரம்பம் அமையவில்லை. 

ஆப்கானிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டாக அதன் தலைவர் குல்படின் நயீப் 15 ஓட்டங்களை மட்டும் பெற்று வெளியேறினார். இதன் பின்னர் புதிய துடுப்பாட்ட வீரராக வந்த ஹஸ்மத்துல்லா சஹிதி ஜொலிக்கவில்லை. சஹிதி ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார். 

இதேநேரம் ஆப்கானிஸ்தான் அணியின் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான றஹ்மத் ஷாஹ் 35 ஓட்டங்களுடன் தனது தரப்பிற்கு வலுச்சேர்த்தார். தொடர்ந்து அவரின் விக்கெட்டும் பறிபோனது.

அவரினை அடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் மத்திய வரிசை வீரர்களில் அஸ்கர் ஆப்கான் மற்றும் நஜிபுல்லாஹ் சத்ரான் ஆகியோரை தவிர ஏனையோர் ஏமாற்றம் தந்தனர். 

பின்னர் அஸ்கர் ஆப்கான் மற்றும் நஜிபுல்லாஹ் சத்ரான் ஆகியோரின் துடுப்பாட்ட உதவியோடு ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

கூட்டு முயற்சியால் இலங்கையை வீழ்த்தினோம் – டு பிளெசிஸ்

இலங்கை அணிக்கு எதிராக மூன்று துறைகளிலும் ஒரு அணியாக செயற்பட்ட…

ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அஸ்கர் ஆப்கான் 35 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதேநேரம், நஜிபுல்லாஹ் சத்ரானும் 6 பெளண்டரிகள் உடன் 42 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் இளம் வேகப்பந்துவீச்சாளரான சஹீன் அப்ரிடி 47 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் வஹாப் ரியாஸ் மற்றும் இமாத் வஸீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தனர்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 228 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய  பாகிஸ்தான் அணி பதிலுக்கு துடுப்பாடியது. 

தொடர்ந்து பாகிஸ்தான் அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வந்த பக்கார் சமான் ஓட்டமேதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார். எனினும், ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இமாம்-உல்-ஹக் மற்றும் பாபர் அசாம் ஆகியோரின் பெறுமதியான துடுப்பாட்டத்தோடு போட்டியின் வெற்றி இலக்கினை நோக்கி பாகிஸ்தான் அணி முன்னேறியது. இதில், இமாம்-உல்-ஹக் 36 ஓட்டங்களை குவிக்க, பாபர் அசாம் 45 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

எனினும் இந்த இரண்டு வீரர்களின் விக்கெட்டுக்களை தொடர்ந்து பாகிஸ்தான் அணி ஒரு தடுமாற்றத்தை காட்டியது. இதனால், பாகிஸ்தான் அணி  ஒரு கட்டத்தில் 158 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலைக்குச் சென்றது.

இத்தருணத்தில் பாகிஸ்தான் அணியின் நிலை அறிந்து துடுப்பாடிய இமாத் வஸீம், சதாப் கான் ஜோடி பாகிஸ்தான் அணியின் ஆறாம் விக்கெட்டுக்காக பொறுமையான முறையில் 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தது.  

மிகவும் பெறுமதியாக அமைந்த இந்த இணைப்பாட்டத்துடன் பாகிஸ்தான் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 49.4 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 230 ஓட்டங்களுடன் அடைந்தது.

பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவிய இமாத் வஸீம் தனது போராட்டமான துடுப்பாட்டத்துடன் 54 பந்துகளில் 5 பெளண்டரிகள் அடங்கலாக 49 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இதேநேரம் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு இணைப்பாட்டம் ஒன்றுடன் சதாப் கான் 11 ஓட்டங்களுடனும், வஹாப் ரியாஸ் ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களுடனும் உதவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பாக மொஹமட் நபி, முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் பாகிஸ்தான் அணி 9 புள்ளிகளுடன், உலகக் கிண்ணத்திற்கான அணிகள் நிரல்படுத்தலில் நான்காம் இடத்திற்கு முன்னேறி உலகக் கிண்ணத்திற்கான தமது அரையிறுதி சுற்று வாய்ப்பினை அதிகரித்திருக்கின்றது.

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இருந்து வெளியேறும் நுவன் பிரதீப்

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாமில் இணைக்கப்பட்டிருந்த…

போட்டியின் ஆட்ட நாயகனாக பாகிஸ்தான் அணியினை வெற்றிக்கு அழைத்துச் சென்ற இமாத் வஸீம் தெரிவானார்.

பாகிஸ்தான் அணி தமது அடுத்த உலகக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷ் அணியினை லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) சந்திக்கின்றது.

மறுமுனையில் இப்போட்டியோடு இன்னுமொரு ஏமாற்றத்தை சந்தித்திருக்கும் ஆப்கானிஸ்தான் அணி, தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்வரும் வியாழக்கிழமை (04) லீட்ஸ் நகரில் சந்திக்கின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

ஸ்கோர் விபரம்

Result


Pakistan
230/7 (49.4)

Afghanistan
227/9 (50)

Batsmen R B 4s 6s SR
Rahmat Shah c Babar Azam b Imad Wasim 35 43 5 0 81.40
Gulbadin Naib c Sarfaraz Ahmed b Shaheen Shah Afridi 15 12 3 0 125.00
Hashmatullah Shahidi c Imad Wasim b Shaheen Shah Afridi 0 1 0 0 0.00
Ikram Alikhil c Mohammad Hafeez b Imad Wasim 24 66 1 0 36.36
Asghar Afghan b Shadab Khan 42 35 3 2 120.00
Mohammad Nabi c Mohammad Amir b Wahab Riaz 16 33 0 0 48.48
Najibullah Zadran Shaheen Shah Afridi b Shaheen Shah Afridi 42 54 6 0 77.78
Samiullah Shinwari not out 19 32 1 0 59.38
Rashid Khan c Fakhar Zaman b Shaheen Shah Afridi 8 12 1 0 66.67
Hamid Hassan Wahab Riaz b Wahab Riaz 1 3 0 0 33.33
Mujeeb ur Rahman not out 7 9 1 0 77.78


Extras 18 (b 8 , lb 0 , nb 0, w 10, pen 0)
Total 227/9 (50 Overs, RR: 4.54)
Bowling O M R W Econ
Imad Wasim 10 0 48 2 4.80
Mohammad Amir 10 1 41 0 4.10
Shaheen Shah Afridi 10 0 87 4 8.70
Mohammad Hafeez 2 0 10 0 5.00
Wahab Riaz 8 0 29 2 3.62
Fakhar Zaman 10 0 44 1 4.40


Batsmen R B 4s 6s SR
Fakhar Zaman lbw b Mujeeb ur Rahman 0 2 0 0 0.00
Imam-ul-Haq st Ikram Alikhil b Mohammad Nabi 36 51 4 0 70.59
Babar Azam b Mohammad Nabi 45 24 5 0 187.50
Mohammad Hafeez c Hashmatullah Shahidi b Mujeeb ur Rahman 19 35 1 0 54.29
Haris Sohail lbw b Rashid Khan 27 57 2 0 47.37
Sarfaraz Ahmed run out () 18 22 1 0 81.82
Imad Wasim not out 49 54 5 0 90.74
Shadab Khan run out () 11 17 1 0 64.71
Wahab Riaz not out 15 9 1 1 166.67


Extras 10 (b 1 , lb 4 , nb 0, w 5, pen 0)
Total 230/7 (49.4 Overs, RR: 4.63)
Bowling O M R W Econ
Mujeeb ur Rahman 10 1 34 2 3.40
Hamid Hassan 2 0 13 0 6.50
Gulbadin Naib 9.4 0 73 0 7.77
Mohammad Nabi 10 0 23 2 2.30
Rashid Khan 10 0 50 1 5.00
Samiullah Shinwari 8 0 32 0 4.00



முடிவு – பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி