Home Tamil இலங்கை இளையோரை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்

இலங்கை இளையோரை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்

223

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியுடனான நான்காவது ஒருநாள் போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணி, 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றியைப் பதிவுசெய்து ஒருநாள் தொடரை 3 – 1 என கைப்பற்றியது.

ரொஹைல் நாசிர் தலைமையிலான 19 வயதுக்கு உட்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரின் 4 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (02) அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக் மைதானத்தில் நடைபெற்றது.  

>>அக்தர், ரொஹைலின் அதிரடியால் இலங்கையை வீழ்த்திய பாக். இளையோர்

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளுக்குமான அணித் தலைவராக செயற்பட்ட நிபுன் தனஞ்சய உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. மாறாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 4 ஆவது, 5 ஆவது ஒருநாள் போட்டிகளுக்குமான அணி இப்போட்டியில் களமிறங்கியிருந்ததுடன், அந்த அணிக்கு கமில் மிஷார தலைவராக செயற்பட்டிருந்தார்.

இதன்படி, துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை இளையோர் அணி, தமது முதல் விக்கெட்டினை 20 ஓட்டங்களுக்கு இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கவிந்து விக்ரமசிங்க (12) சிராஸ் கானின் பந்து வீச்சில் ஹைதர் அலியிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த ரவிந்து ரசந்த 14 ஓட்டங்களுடனும், மூன்றாவது ஒருநாள் போட்டியில் அரைச் சதமடித்த அணித் தலைவர் கமில் மிஷார 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஓய்வறை திரும்பினர். தொடரந்து களமிறங்கிய பவன் ரத்னாயக்க 6 ஓட்டங்களுடன் மொஹமட் தாஹாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி 94 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தவீஷ கஹதுவாரச்சி மற்றும் அவிஷ்க தரிந்து ஆகியோர் பொறுமையான ஒரு இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்பினர். இருவரும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்காக 61 ஓட்டங்கள் பகிர்ந்து நம்பிக்கை கொடுத்தனர்.

நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவீஷ கஹதுவாரச்சி அரைச் சதம் கடந்த நிலையில் 64 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த அவிஷ்க தரிந்து 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டித் தொடரில் அவிஷ்க பெற்றுக்கொண்ட இரண்டாவது அரைச் சதம் இதுவாகும்.

Photo Album – Sri Lanka U19 vs Pakistan U19 | 4th Youth ODI

இறுதியில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்களைக் குவித்தது.

பந்துவீச்சில் சிராஸ் கான் மற்றும் மொஹமட் வசீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து, 196 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய 19 வயதுக்கு உட்பட்ட பாகிஸ்தான் அணியின் பாசித் அலி, ஹைதர் அலி ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.

முதலாவது விக்கெட்டாக பாசித் அலி ஓட்டமின்றி (0) சமிந்து விக்ரமசிங்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவர் ரொஹைல் நாசிர், ஹைதர் அலியுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 117 ஓட்டங்களை பெற்று அணியை வலுப்படுத்தினர். இந்த தொடரில் தனது நான்காவது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்த ரொஹைல் நாசிர் 69 ஓட்டங்களை பெற்றிருந்த போது கமில் மிஷாரவின் அபார களத்தடுப்பினால் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த மொஹமட் தாஹா ஓட்டமின்றி டக்அவுட் ஆனார்.

>>துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் தோற்றோம் – சர்பராஸ்

எனினும், 4 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஹைதர் அலி மற்றும் காசிம் அக்ரம் ஆகியோர் நிதானமான இணைப்பாட்டம் (71) ஒன்றினை வழங்கி பாகிஸ்தான் இளையோர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். துடுப்பாட்டத்தில் பிரகாசித்த ஹைதர் அலி 95 பந்துகளில் 93 ஓட்டங்களையும், காசிம் அக்ரம் ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களையும் பெற்று வலுச்சேர்த்தனர்.

இறுதியில் 19 வயதுக்கு உட்பட்ட பாகிஸ்தான் அணி, 34.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றியைப் பதிவு செய்தது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் சமிந்து விக்ரமசிங்க மற்றும் சமிந்து மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் ஒருநாள் தொடரில் 19 வயதுக்கு உட்பட்ட பாகிஸ்தான் அணி 3 – 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5 ஆவதும், இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 5 ஆம் திகதி அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka U19
195/8 (50)

Pakistan U19
199/3 (34.5)

Batsmen R B 4s 6s SR
Chamindu Wickramasinghe c Haider Ali b Shiraz Khan 12 13 1 0 92.31
Thaveesha Abhishek b Mohammad Wasim 64 116 4 0 55.17
Ravindu De Silva c Rohail Nazir b Mohammad Junaid 14 22 2 0 63.64
Kamil Mishara c Mohammad Taha b Shiraz Khan 8 25 1 0 32.00
Pawan Rathnayake  c Abbas Afridi b Mohammad Taha 6 19 1 0 31.58
Avishka Tharindu run out (Akhtar Shah) 50 79 1 0 63.29
Chamindu Wijesinghe lbw b Mohammad Wasim 5 8 0 0 62.50
Dunith Wellalage not out 15 17 1 0 88.24
Raveen De Silva run out (Rohail Nazir) 1 1 0 0 100.00


Extras 20 (b 1 , lb 2 , nb 0, w 17, pen 0)
Total 195/8 (50 Overs, RR: 3.9)
Fall of Wickets 1-20 (3.6) Chamindu Wickramasinghe, 2-48 (11.5) Ravindu De Silva, 3-66 (17.6) Kamil Mishara, 4-94 (24.3) Pawan Rathnayake , 5-155 (42.3) Thaveesha Abhishek, 6-163 (44.2) Chamindu Wijesinghe, 7-195 (49.6) Raveen De Silva,

Bowling O M R W Econ
Akhtar Shah 5 0 24 0 4.80
Shiraz Khan 7 0 34 2 4.86
Abbas Afridi 6 0 19 0 3.17
Mohammad Junaid 9 2 32 1 3.56
Mohammad Wasim 10 0 42 2 4.20
Mohammad Taha 7 0 20 1 2.86
Qasim Akram 6 0 21 0 3.50


Batsmen R B 4s 6s SR
Basit Ali c Pawan Rathnayake  b Chamindu Wickramasinghe 0 1 0 0 0.00
Haider Ali not out 96 92 7 1 104.35
Rohail Nazir run out (Kamil Mishara) 69 77 8 0 89.61
Mohammad Taha lbw b Sandun Mendis 0 2 0 0 0.00
Qasim Akram not out 29 39 2 0 74.36


Extras 5 (b 0 , lb 1 , nb 1, w 3, pen 0)
Total 199/3 (34.5 Overs, RR: 5.71)
Fall of Wickets 1-11 (1.1) Basit Ali, 2-128 (22.6) Rohail Nazir, 3-128 (23.2) Mohammad Taha,

Bowling O M R W Econ
Naveen Fernando 2 0 18 0 9.00
Chamindu Wickramasinghe 4 0 27 1 6.75
Chamindu Wijesinghe 4 0 17 0 4.25
Dunith Wellalage 5.5 0 41 0 7.45
Sandun Mendis 9 1 31 1 3.44
Raveen De Silva 7 0 51 0 7.29
Kamil Mishara 3 0 11 0 3.67



முடிவு – பாகிஸ்தான் இளையோர் அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<