அக்தர் ஷாவின் மிரட்டல் பந்துவீச்சு மற்றும் ரொஹைல் நாசிரின் அபார துடுப்பாட்டம் என்பவற்றால் இலங்கை இளையோர் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் இளையோர் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 2 – 1 என்ற கணக்கில் தொடரில் முன்னியிலை பெற்றுள்ளது.
இலங்கை இளையோருக்கு எதிராக த்ரில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் வீரர்கள்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையில் நடைபெற்ற…
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி, ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதன் முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று (31) ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணித் தலைவர் ரொஹைல் நாசிர் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
இதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிய திலும் சுதீர மற்றும் சமிந்து விஜேசிங்க ஆகியோருக்குப் பதிலாக நவீன் பெர்னாண்டோ மற்றும் சந்துன் மெண்டிஸ் ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.
Photos: Sri Lanka U19 vs Pakistan U19 | 3rd Youth ODI
பாகிஸ்தான் அணியின் பணிப்பின்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி, தடுமாற்றத்துடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. முதலாவது விக்கெட்டாக நவோத் பரணவிதான 2 ஓட்டங்களுடன் அக்தர் ஷாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மொஹமட் சமாஸ் ஓட்டமின்றி வந்த வேகத்தில் ஆட்டமிழந்து சென்றார்.
தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவர் நிபுன் தனஞ்சய, கமில் மிஷாரவுடன் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்காக 48 ஓட்டங்களை பெற்று அணியை வலுப்படுத்தினர். குவிண்டன் டி கொக் 17 ஓட்டங்களை பெற்றிருந்த போது அப்பாஸ் அப்ரிடியின் பந்து வீச்சில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
எனினும், 4ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த கமில் மிஷார மற்றும் சொனால் தினூஷ ஆகியோர் நிதானமான இணைப்பாட்டம் (60) ஒன்றினை வழங்கி இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர்.
நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சொனால் தினூஷ 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மறுமுனையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கமில் மிஷார அரைச் சதம் அடித்து நம்பிக்கை கொடுத்தார். எனினும், ஜுனைட் கான் வீசிய பந்தில் ரொஹைல் நாசிரிடம் பிடிகொடுத்து 73 ஓட்டங்களுடன் அவர் ஆட்டமிழந்தார்.
சகலதுறையிலும் பிரகாசித்த இலங்கை இளையோர் பாகிஸ்தானை வீழ்த்தினர்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையில்…
இதனையடுத்து வந்த பின்வரிசை வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேற, இறுதியில் இலங்கை வீரர்கள் 48.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 183 ஓட்டங்களை எடுத்தனர்.
பந்துவீச்சில் அக்தர் ஷா 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ஜுனைட் கான் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 184 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் இளையோர் அணிக்கு சைம் அய்யூப், ஹைதர் அலி ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். இதில் சைம் அய்யூப் 8 ஓட்டங்களுடனும், ஹைதர் அலி ஓட்டங்களுடனும் டில்ஷான் மதுஷங்கவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய ரொஹைல் நாசிர், மொஹமட் தாஹாவுடன் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்காக 49 ஓட்டங்களை பெற்று அணியை வலுப்படுத்தினர். மொஹமட் தாஹா 25 ஓட்டங்களை பெற்றிருந்த போது ரொஹான் சன்ஜயவின் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.
எனினும், அணித் தலைவர் ரொஹைல் நாசிருடன் இணைந்து கொண்ட காசிம் அக்ரம் நான்காவது விக்கெட்டுக்காக 52 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று பாகிஸ்தான் அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றனர். ரொஹைல் நாசிருக்கு ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்த காசிம் அக்ரம் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இரண்டு மில்லியன் இரசிகர்களின் எதிர்பார்ப்புடன் முதல் போட்டியில் இலங்கை
உலக கிரிக்கெட் இரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த கிரிக்கெட் உலகக் கிண்ணம்…
தொடர்ந்து ஐந்தாவது விக்கெட்டுக்காக நிதானமாக துடுப்பாட்டத்தை தொடர்ந்த ரொஹைல் நாசிர் மற்றும் ஹரிஸ் கான் ஜோடி 48 ஓட்டங்களை இணைப்பட்டமாகப் பெற்று வலுச்சேர்க்க பாகிஸ்தான் அணி வெற்றியிலக்கை அடைந்தது.
இந்தப் போட்டித் தொடரில் தனது மூன்றாவது அரைச் சதத்ததைப் பதிவுசெய்த ரொஹைல் நாசிர் 76 ஓட்டங்களையும், ஹாரிஸ் கான் ஆட்டமிழக்காது 21 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இறுதியில் பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணி, 43.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை அணியின் பந்துவீச்சில் டில்ஷான் மதுசங்க மற்றும் ரொஹான் சன்ஜய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
இதன்படி, ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 2 – 1 என பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது. இதுஇவ்வாறிருக்க, இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 4ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 03ஆம் திகதி இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Navod Paranavithana | c Qasim Akram b Akhtar Shah | 2 | 2 | 0 | 0 | 100.00 |
Kamil Mishara | c Rohail Nazir b Mohammad Junaid | 73 | 116 | 5 | 0 | 62.93 |
Mohammed Shamaz | b Akhtar Shah | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Nipun Dananjaya | c Abbas Afridi b Shiraz Khan | 17 | 35 | 0 | 0 | 48.57 |
Sonal Dinusha | c Saim Ayub b Mohammad Junaid | 32 | 65 | 2 | 0 | 49.23 |
Avishka Tharindu | run out (Shiraz Khan) | 26 | 41 | 1 | 0 | 63.41 |
Sandun Mendis | run out (Saim Ayub) | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Rohan Sanjaya | run out (Mohammad Taha) | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Ashain Daniel | c Rohail Nazir b Akhtar Shah | 4 | 9 | 0 | 0 | 44.44 |
Naveen Fernando | c Mohammad Taha b Akhtar Shah | 10 | 11 | 0 | 0 | 90.91 |
Dilshan Madusanka | not out | 3 | 8 | 0 | 0 | 37.50 |
Extras | 16 (b 1 , lb 1 , nb 2, w 12, pen 0) |
Total | 183/10 (48.3 Overs, RR: 3.77) |
Fall of Wickets | 1-2 (0.2) Navod Paranavithana, 2-2 (0.4) Mohammed Shamaz, 3-50 (16.3) Nipun Dananjaya, 4-110 (32.2) Sonal Dinusha, 5-156 (41.2) Kamil Mishara, 6-156 (41.4) Sandun Mendis, 7-158 (42.1) Rohan Sanjaya, 8-168 (44.4) Ashain Daniel, 9-176 (46.2) Avishka Tharindu, 10-183 (48.3) Naveen Fernando, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Akhtar Shah | 9.3 | 1 | 19 | 4 | 2.04 | |
Niaz Khan | 9 | 1 | 43 | 0 | 4.78 | |
Shiraz Khan | 6 | 0 | 22 | 0 | 3.67 | |
Abbas Afridi | 6 | 0 | 28 | 1 | 4.67 | |
Saim Ayub | 7 | 0 | 25 | 0 | 3.57 | |
Mohammad Junaid | 10 | 0 | 38 | 2 | 3.80 | |
Mohammad Taha | 1 | 0 | 6 | 0 | 6.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Saim Ayub | c Kamil Mishara b Dilshan Madusanka | 8 | 10 | 1 | 0 | 80.00 |
Haider Ali | lbw b Dilshan Madusanka | 9 | 13 | 2 | 0 | 69.23 |
Rohail Nazir | st Kamil Mishara b Ashain Daniel | 76 | 116 | 6 | 0 | 65.52 |
Mohammad Taha | b Rohan Sanjaya | 25 | 42 | 3 | 0 | 59.52 |
Qasim Akram | c Kamil Mishara b Rohan Sanjaya | 26 | 44 | 1 | 0 | 59.09 |
Mohammad Haris | not out | 25 | 38 | 2 | 0 | 65.79 |
Mohammad Junaid | not out | 11 | 13 | 2 | 0 | 84.62 |
Extras | 4 (b 0 , lb 0 , nb 0, w 4, pen 0) |
Total | 184/5 (46 Overs, RR: 4) |
Fall of Wickets | 1-14 (2.3) Saim Ayub, 2-20 (4.5) Haider Ali, 3-61 (18.1) Mohammad Taha, 4-121 (32.1) Qasim Akram, 5-169 (43.1) Rohail Nazir, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dilshan Madusanka | 9 | 0 | 43 | 2 | 4.78 | |
Naveen Fernando | 6 | 1 | 17 | 0 | 2.83 | |
Rohan Sanjaya | 10 | 0 | 46 | 2 | 4.60 | |
Ashain Daniel | 10 | 0 | 39 | 1 | 3.90 | |
Sandun Mendis | 7 | 0 | 29 | 0 | 4.14 | |
Navod Paranavithana | 4 | 0 | 10 | 0 | 2.50 |
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<