இலங்கை மற்றும் பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவிஷ்க தரிந்துவின் அரைச் சதத்துக்கு பதிலடி கொடுத்து அரைச் சதம் அடித்த ரொஹைல் நாசிரின் அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணி 3 விக்கெட்டுகளால் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஓவரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 8 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன், அந்த வெற்றி இலக்கை துரத்தியடித்த பாகிஸ்தான் வீரர்கள் தமது முதல் வெற்றியை அமர்க்களமாகப் பெற்றுக் கொண்டனர்.
சகலதுறையிலும் பிரகாசித்த இலங்கை இளையோர் பாகிஸ்தானை வீழ்த்தினர்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையில்…..
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணி, ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதன் முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி 26 ஓட்டங்களால் வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று (27) அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் நிபுன் தனஞ்சய முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.
>>Photos: Sri Lanka U19 Vs. Pakistan U19 | 2nd Youth ODI<<
இலங்கை அணிக்கு கமில் மிஷார மற்றும் நவோத் பரணவிதான ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். பாகிஸ்தான் இளையோர் அணி ஆரம்பத்திலேயே பந்து வீச்சில் மிரட்டியது. முதலாவது விக்கெட்டாக நவோத் பரணவிதான ஓட்டமின்றியும், மொஹமட் சமாஸ் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
முதலாவது ஒருநாள் போட்டியில் அரைச்சதமடித்த கமில் மிஷார 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஓய்வறை திரும்பினார். இதற்கு அடுத்தபடியாக களமிறங்கிய சொனால் தினூஷ (8), அணித் தலைவர் நிபுன் தனஞ்சய (15), திலும் சுதீர (7) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் ஆரம்பத்திலேயே இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி 69 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனை அடுத்து ஜோடி சேர்ந்த அவிஷ்க தரிந்து மற்றும் சமிந்து விஜேசிங்க ஆகியோர் பொறுமையான ஒரு இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்பினர். இருவரும் ஏழாவது விக்கெட்டுக்காக 74 ஓட்டங்களைப் பகிர்ந்து நம்பிக்கை கொடுத்தனர்.
நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமிந்த விஜேசிங்க 28 ஓட்டங்களுடனும், அரைச்சதம் கடந்த அவிஷ்க தரிந்து 54 ஓட்டங்களுடனும் வெளியேறினார்
எனினும், 8 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ரொஹான் சன்ஜய மற்றும் அஷேன் டேனியல் ஆகியோர் நிதானமான இணைப்பாட்டம் (67) ஒன்றினை வழங்கி இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர்.
இறுதியில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களைக் குவித்தது.
பந்துவீச்சில் அக்தர் ஷாஹ் மற்றும் ஜுனைட் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து, 221 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணி களமிறங்கியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக சைம் அய்யூப் மற்றும் ஹைதர் அலி ஆகியோர் களமிறங்கினர். சைம் அய்யூப் 7 ஓட்டங்களுடன் டில்ஷான் மதுஷங்கவின் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.
பொறுப்பாக விளையாடிய ஹைதர் அலி அரைச் சதம் அடித்து நம்பிக்கை கொடுத்தார். இந்தத் தொடரில் இது அவரது இரண்டாவது அரைச் சதமாகும். எனினும், நவோத் பரணவிதான வீசிய பந்தில் ஹைதர் அலி LBW முறையில் 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் மத்திய வரிசையில் களமிறங்கிய மொஹமட் தாஹா (7), ஹாரிஸ் கான் (3), கய்யாம் கான் (5) ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினர்.
இப்படியான ஒரு நிலையில் 6 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அணித் தலைவர் ரொஹைல் நாசிர் மற்றும் ஜுனைட் கான் ஆகியோர் 62 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர்.
பொறுப்பாக விளையாடி அரைச் சதம் கடந்த அணித் தலைவர் ரொஹைல் நாசிர் 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஜீனைட் கான் 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இறுதியில் அப்பாஸ் அப்ரிடி ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட 17 ஓட்டங்களுடன் ஒரு பந்து எஞ்சியிருக்க பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இதன்படி, பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணி, 49.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ஓட்டங்களை எடுத்து இந்தத் தொடரில் முதலாவது வெற்றியை பதிவு செய்தது.
இதேநேரம் இலங்கை அணியின் பந்துவீச்சில் டில்ஷான் மதுஷங்க, திலும் சுதீர மற்றும் நவோத் பரவிதாண ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
இலங்கை – பாகிஸ்தான் இளையோர் ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்
இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கும், பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கும்….
இதன்படி, 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் 1 – 1 என சமநிலை அடைந்தது. இது இவ்வாறிருக்க, இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 31 ஆம் திகதி அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Navod Paranavithana | b Akhtar Shah | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Kamil Mishara | run out (Khayyam Khan) | 9 | 11 | 1 | 0 | 81.82 |
Mohammed Shamaz | c Rohail Nazir b Akhtar Shah | 8 | 17 | 1 | 0 | 47.06 |
Nipun Dananjaya | c Saim Ayub b Mohammad Junaid | 15 | 28 | 2 | 0 | 53.57 |
Sonal Dinusha | c Mohammad Junaid b Saim Ayub | 8 | 14 | 1 | 0 | 57.14 |
Avishka Tharindu | c Khayyam Khan b Mohammad Taha | 54 | 80 | 5 | 0 | 67.50 |
Dilum Sudeera | lbw b Mohammad Wasim | 7 | 12 | 0 | 0 | 58.33 |
Chamindu Wijesinghe | c Akhtar Shah b Mohammad Junaid | 28 | 54 | 0 | 0 | 51.85 |
Rohan Sanjaya | not out | 45 | 59 | 4 | 0 | 76.27 |
Ashain Daniel | not out | 20 | 25 | 0 | 0 | 80.00 |
Extras | 26 (b 0 , lb 3 , nb 3, w 15, pen 5) |
Total | 220/8 (50 Overs, RR: 4.4) |
Fall of Wickets | 1-0 (0.5) Navod Paranavithana, 2-18 (4.2) Mohammed Shamaz, 3-32 (7.1) Kamil Mishara, 4-45 (10.6) Sonal Dinusha, 5-52 (12.6) Nipun Dananjaya, 6-69 (17.3) Dilum Sudeera, 7-143 (33.5) Chamindu Wijesinghe, 8-151 (39.3) Avishka Tharindu, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Akhtar Shah | 7 | 1 | 32 | 2 | 4.57 | |
Abbas Afridi | 6 | 0 | 39 | 0 | 6.50 | |
Mohammad Wasim | 10 | 0 | 25 | 1 | 2.50 | |
Saim Ayub | 2 | 0 | 15 | 1 | 7.50 | |
Mohammad Junaid | 10 | 0 | 39 | 2 | 3.90 | |
Suleman Shafqat | 5 | 0 | 26 | 0 | 5.20 | |
Mohammad Taha | 10 | 0 | 36 | 1 | 3.60 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Saim Ayub | b Dilshan Madusanka | 7 | 17 | 0 | 0 | 41.18 |
Haider Ali | lbw b Navod Paranavithana | 56 | 60 | 6 | 0 | 93.33 |
Rohail Nazir | c Kamil Mishara b Dilshan Madusanka | 87 | 98 | 7 | 0 | 88.78 |
Mohammad Taha | c Sonal Dinusha b Navod Paranavithana | 7 | 19 | 0 | 0 | 36.84 |
Mohammad Haris | st Kamil Mishara b Rohan Sanjaya | 3 | 4 | 0 | 0 | 75.00 |
Khayyam Khan | c & b Dilum Sudeera | 5 | 12 | 0 | 0 | 41.67 |
Mohammad Junaid | c Chamindu Wijesinghe b Dilum Sudeera | 30 | 64 | 0 | 0 | 46.88 |
Abbas Afridi | not out | 16 | 21 | 0 | 0 | 76.19 |
Mohammad Wasim | not out | 3 | 4 | 0 | 0 | 75.00 |
Extras | 7 (b 0 , lb 3 , nb 0, w 4, pen 0) |
Total | 221/7 (49.5 Overs, RR: 4.43) |
Fall of Wickets | 1-33 (6.3) Saim Ayub, 2-93 (18.1) Haider Ali, 3-105 (22.4) Mohammad Taha, 4-108 (23.3) Mohammad Haris, 5-131 (28.1) Khayyam Khan, 6-193 (43.4) Rohail Nazir, 7-212 (48.3) Mohammad Junaid, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dilshan Madusanka | 8 | 0 | 27 | 2 | 3.38 | |
Chamindu Wijesinghe | 2 | 0 | 18 | 0 | 9.00 | |
Ashain Daniel | 10 | 0 | 40 | 0 | 4.00 | |
Dilum Sudeera | 10 | 0 | 35 | 2 | 3.50 | |
Rohan Sanjaya | 10 | 0 | 47 | 1 | 4.70 | |
Navod Paranavithana | 9.5 | 0 | 51 | 2 | 5.37 |
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<