பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணிக்கு ஜனாதிபதிக்கு நிகரான பாதுகாப்பு

813

தீவிரவாத தாக்குதல் நடாத்தப்பட்ட பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்டை மீளக்கொண்டு வரும் நோக்கோடு இலங்கைபாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருதரப்பு தொடரின் இறுதி T-20 போட்டியை பாகிஸ்தானில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தினால் தமது நாட்டில் விளையாட விடுக்கப்பட்டிருக்கும் இந்த அழைப்பினை ஏற்றுக்கொண்டு பாகிஸ்தான் செல்லத் தயராகியிருக்கும் இலங்கை அணிக்கு ஜனாதிபதிக்கு நிகரான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும் என ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.  

இளம் பந்துவீச்சாளர்களின் உதவியோடு இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான்

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட

2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணியினர் சென்ற பஸ் வண்டி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடாத்தியிருந்தனர்.  இந்த தாக்குதலை அடுத்து அங்கு சர்வதேச கிரிக்கெட் அணிகள் சென்று விளையாட மறுப்புத் தெரிவித்திருந்தன.

இதனையடுத்து நடுநிலையான இடம் ஒன்றினை பாகிஸ்தான் தமது தாயகமாக தெரிவு செய்து ஏனைய நாடுகளுடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தது.  இவ்வாறு பாகிஸ்தான் தமது தாயகமாக தெரிவு செய்து  கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய், சார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய மைதானங்களில் அண்மையில் பாகிஸ்தான் சந்தித்த பாரிய தோல்விகள் அந்நாட்டு வீரர்களுக்கும், இரசிகர்களுக்கும் ஒரு துயர நிலையினை ஏற்படுத்தியிருக்கின்றது.

இலங்கை அணிக்கு பாகிஸ்தானில் ஜனாதிபதிக்கு நிகரான பாதுகாப்பு வழங்கப்படும் என்கிற செய்தியை தெரிவித்துக் கொள்கின்றேன். “ என பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும் தற்போதைய அணியின் முகாமையாளருமான தலாத் அலி ThePapare.com இற்கு தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தானுக்கு உலக பதினொருவர் அணியினர் வந்து மூன்று போட்டிகளில் விளையாடியிருந்தனர். அப்போது அவர்கள் எம்மால் வழங்கப்பட்ட பாதுகாப்பினை பார்த்து மிகவும் வியப்படைந்திருந்தனர். இலங்கை அணியும் எமது நாட்டுக்கு வந்து விளையாடினால், எமக்கு இன்னும் பல நாடுகளை இங்கு விளையாட வைக்க வழிவகைகள் செய்ய உதவியாக இருக்கும் என தலாத் அலி மேலும் குறிப்பிட்டிருந்தார்.

இன்னும் இலங்கை அணி டெஸ்ட் தொடரில் காட்டிய போராட்டத்தினையும்  தலாத் அலி பாராட்டியதோடு, அதி சிறப்பான பந்து வீச்சினை வெளிப்படுத்தி 400 டெஸ்ட் விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கும் முன்னணி  சுழல் வீரர் ரங்கன ஹேரத்துக்கும் வாழ்த்துக்களை வழங்கியிருந்தார்.

இலங்கை A அணிக்காக தனித்து போராடிய தனன்ஜய டி சில்வா அபார சதம்

மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான உத்தியோகபூர்வமற்ற நான்கு நாள் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை

இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நாம் சில ஏற்ற இறக்கங்களை காட்டியிருந்தோம். எனினும் இந்த தொடர் மிகவும் போட்டித்தன்மை மிக்கதாகவே அமைந்திருந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாம் ஒரு கட்டத்தில் 52 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் இருந்தோம். இவ்வாறானதொரு நிலையில் அசாத் (சபீக்) மற்றும் சர்பராஸ் (அஹ்மட்) ஆகிய வீரர்கள் காட்டிய போராட்டம் வியக்க வைக்கும் படி அமைந்திருந்தது. நாம் போட்டியின் இலக்கினை மிகவும் நெருங்கியிருந்தோம்.  எனினும் டெஸ்ட் போட்டியொன்றில் 300 ஓட்டங்களை நான்காவது இன்னிங்சில் மீண்டும் பெறுவது என்பது சாதாரண விடயமில்லை.

சிறப்பாக செயற்பட்ட இலங்கை அணிக்கே வெற்றி உரித்தானது. அவர்கள்  முதலாவது டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக பந்து வீசி 136 ஓட்டங்கள் என்கிற சிறிய இலக்கினை  (எம்மை எட்டவிடாது) தடுத்திருந்தனர்.  இந்த இலக்கை எங்கள் அணி அடையாது போனது மிகவும் வருத்தமாக அமைந்திருந்தது. இப்போட்டியில் நாம் 136 ஓட்டங்களினை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் போட்டியிலிருந்து அவர்களது கடந்த காலத்தில் காணப்பட்டது போன்று இருந்திருக்கவில்லை. நானும், இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பமாக முன்னர் (இலங்கை) அணியினர் சரியான தரத்தில் தற்போது இல்லை எனக் குறிப்பிட்டிருந்தேன். எனினும் அவர்கள் எமக்கெதிராக மிகவும் பிரமாதமான முறையில் செயற்பட்டிருந்தனர். அது பார்ப்பதற்கு நன்றாக அமைந்திருந்தது.“

பிசான் சிங் பேடிக்கு அடுத்ததாக சிறந்த இடது கை சுழல் வீரராக ரங்கன ஹேரத்தை என்னால் குறிப்பிட முடியும். 400 விக்கெட்டுக்கள் எடுப்பது அவருக்கு  ஒரு கடமையில்லை. எனினும், அபுதாபியில் நடைபெற்ற போட்டியின் இரண்டாம் இன்னிங்சில் அவரது ஆட்டம் பார்க்க மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது. “  என தலாத் அலி கூறியிருந்தார்.

சாருஜ, ஆகில் மூலம் புனித அந்தோனியார் கல்லூரிக்கு இலகு வெற்றி

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் பாடசாலைகளுக்கு இடையிலான 13 வயதின் கீழ் பிரிவு 1 (டிவிசன் 1) கிரிக்கெட் போட்டித் தொடரில்

சம்பியன்ஸ் கிண்ணத்தின்போதும் பாகிஸ்தான் அணியின் முகாமையாளராக தலாத் அலியே காணப்பட்டிருந்தார்.  அத்தொடரில் இருந்து இலங்கை வெளியேற காரணமாக அமைந்த பாகிஸ்தானுடான போட்டி பற்றியும் இவரால் கருத்துக்கள் பகிரப்பட்டிருந்தன.

நாங்கள் ஒரு கட்டத்தில் 140 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தோம். இந்நிலையில் சர்பராஸ் மற்றும் அமீர் ஆகிய வீரர்கள் களத்தில் நின்றனர். எனக்கு பெரேரா அந்த பிடியெடுப்பை எவ்வாறு தவறவிட்டார் என்பது தெரியவில்லை. அதன் பின்னர் ரன்அவுட் வாய்ப்பொன்றும் மீண்டும் பிடியெடுப்பொன்றும் தவறவிடப்பட்டிருந்தது. இந்த இக்கட்டான நிலைகளை நாம் தாண்டியது அதிஷ்டம் என்றே கூறமுடியும். பெரேரா தவறவிட்ட அந்த பிடியெடுப்பில் இருந்து நாம் இன்று தோற்கப்போவதில்லை என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். “

சம்பியன்ஸ் கிண்ணத்தின் இறுதி குழுநிலை போட்டியில் பாகிஸ்தான் இலங்கை அணியினை 3 விக்கெட்டுக்களால் வீழ்த்தியதுடன் எட்டு நாடுகள் பங்குகொண்ட அத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கும் தெரிவாகியிருந்தது.

ஒரு நாள் தரவரிசையில் எட்டாம் இடத்தில் காணப்பட்டவாறு சம்பியன்ஸ் கிண்ணத்தில் உள்நுழைந்திருந்த பாகிஸ்தான் பலம்மிக்க இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு முறையே அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் அதிர்ச்சியளித்து தொடரின் சம்பியனாகவும் மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.