பாபர் அசாம், ஷான் மசூத் மற்றும் சௌத் சகீல் ஆகியோரது அரைச்சதங்களோடு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணிகள் இடையே நடைபெற்ற இரண்டு நாட்கள் பயிற்சி போட்டி நிறைவடைந்திருக்கின்றது.
>>அமெரிக்காவில் விளையாட ஷானகவுக்கு அனுமதி
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இங்கே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16) காலியில் ஆரம்பமாகவுள்ள நிலையில் பாகிஸ்தான் அணியானது இலங்கை தொடருக்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் சபை அணியுடன் இரு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டமொன்றில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செவ்வாய்க்கிழமை (11) ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியானது 46.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 196 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கைத் தரப்பின் சார்பில் அபார சதம் விளாசிய ஒசத பெர்னாண்டோ 127 பந்துகளில் 18 பௌண்டரிகள் அடங்கலாக 113 ஓட்டங்கள் பெற்றார்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் சஹீன் அப்ரிடி, ஹஸன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருக்க, அப்றார் அஹ்மட் மற்றும் ஆமேர் ஜமால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணியானது 78.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 342 ஓட்டங்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் தலைவர் பாபர் அசாம் ஒரு சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 79 ஓட்டங்கள் எடுக்க, ஷான் மசூத் 67 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 83 ஓட்டங்கள் எடுத்தார்.
>>பல சாதனைகளுடன் நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி
இதேநேரம் பாகிஸ்தான் தரப்பில் மற்றுமொரு அரைச்சதம் விளாசியிருந்த சௌத் சக்கீல் 96 பந்துகளில் 6 பௌண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணியின் பந்துவீச்சில் வலதுகை சுழல்வீரரான லக்ஷித மானசிங்க 82 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சுருட்ட, பிரவீன் ஜயவிக்ரம 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இதேநேரம் இலங்கைத் தரப்பின் பந்துவீச்சில் மொஹமட் சிராஸ் மற்றும் கவிஷ்க அஞ்சுல ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பின்னர் 146 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்டத்தினை ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் சபை அணியானது 88 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த நிலையில் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்து போட்டி சமநிலை அடைந்தது.
இலங்கைத் தரப்பின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காது நின்ற நுவனிது பெர்னாண்டோ 31 ஓட்டங்கள் பெற்றிருக்க, நிபுன் தனன்ஞய 26 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் இம்முறை அகா சல்மான் 02 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Oshada Fernando | c Mohammad Nawaz b Aamir Jamal | 113 | 127 | 18 | 0 | 88.98 |
Sandun Weerakkody | b Hasan Ali | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Nuwanidu Fernando | b Abrar Ahmed | 5 | 19 | 0 | 0 | 26.32 |
Kamindu Mendis | c Sarfaraz Ahmed b Shaheen Shah Afridi | 21 | 41 | 2 | 1 | 51.22 |
Niroshan Dickwella | c Sarfaraz Ahmed b Hasan Ali | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Nipun Dhananjaya | c & b Aamir Jamal | 14 | 21 | 1 | 1 | 66.67 |
Ahan Wickramasinghe | c Abdullah Shafique b Shaheen Shah Afridi | 2 | 12 | 0 | 0 | 16.67 |
Lakshitha Manasinghe | c Abdullah Shafique b Hasan Ali | 10 | 26 | 1 | 0 | 38.46 |
Kavishka Anjula | b Shaheen Shah Afridi | 2 | 5 | 0 | 0 | 40.00 |
Milan Rathnayake | b Abrar Ahmed | 15 | 22 | 3 | 0 | 68.18 |
Praveen Jayawickrama | not out | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Extras | 13 (b 6 , lb 2 , nb 3, w 2, pen 0) |
Total | 196/10 (46.3 Overs, RR: 4.22) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Shaheen Shah Afridi | 12 | 3 | 37 | 3 | 3.08 | |
Hasan Ali | 7.3 | 1 | 22 | 3 | 3.01 | |
Abrar Ahmed | 11 | 1 | 52 | 2 | 4.73 | |
Aamir Jamal | 9 | 1 | 33 | 2 | 3.67 | |
Nauman Ali | 7 | 0 | 44 | 0 | 6.29 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Abdullah Shafique | c Praveen Jayawickrama b Kavishka Anjula | 25 | 44 | 3 | 0 | 56.82 |
Imam-ul-Haq | c Niroshan Dickwella b Lakshitha Manasinghe | 36 | 75 | 5 | 0 | 48.00 |
Shan Masood | c Kamindu Mendis b Lakshitha Manasinghe | 83 | 67 | 9 | 3 | 123.88 |
Babar Azam | retired | 79 | 113 | 7 | 1 | 69.91 |
Saud Shakeel | retired | 61 | 96 | 6 | 0 | 63.54 |
Agha Salman | lbw b Mohammad Shiraz | 12 | 6 | 3 | 0 | 200.00 |
Sarfaraz Ahmed | not out | 17 | 25 | 0 | 0 | 68.00 |
Mohammad Rizwan | b Praveen Jayawickrama | 12 | 25 | 0 | 1 | 48.00 |
Mohammed Huraira | c Sandun Weerakkody b Praveen Jayawickrama | 12 | 15 | 1 | 0 | 80.00 |
Shaheen Shah Afridi | c Ahan Wickramasinghe b Lakshitha Manasinghe | 3 | 14 | 0 | 0 | 21.43 |
Nauman Ali | c Niroshan Dickwella b Lakshitha Manasinghe | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 2 (b 0 , lb 0 , nb 1, w 1, pen 0) |
Total | 342/10 (78.3 Overs, RR: 4.36) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Milan Rathnayake | 11 | 0 | 32 | 0 | 2.91 | |
Mohammad Shiraz | 10 | 2 | 40 | 1 | 4.00 | |
Kavishka Anjula | 9 | 2 | 39 | 1 | 4.33 | |
Asanka Manoj | 7 | 0 | 29 | 0 | 4.14 | |
Lakshitha Manasinghe | 18.3 | 1 | 82 | 4 | 4.48 | |
Praveen Jayawickrama | 19 | 2 | 89 | 2 | 4.68 | |
Shashika Dulshan | 4 | 0 | 31 | 0 | 7.75 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Oshada Fernando | c Sarfaraz Ahmed b Naseem Shah | 6 | 31 | 0 | 0 | 19.35 |
Sandun Weerakkody | c Nauman Ali b Shaheen Shah Afridi | 8 | 14 | 2 | 0 | 57.14 |
Nuwanidu Fernando | not out | 31 | 42 | 2 | 1 | 73.81 |
Kamindu Mendis | st Sarfaraz Ahmed b Agha Salman | 1 | 9 | 0 | 0 | 11.11 |
Niroshan Dickwella | b Agha Salman | 12 | 9 | 2 | 0 | 133.33 |
Nipun Dhananjaya | not out | 26 | 45 | 1 | 0 | 57.78 |
Extras | 4 (b 0 , lb 4 , nb 0, w 0, pen 0) |
Total | 88/4 (30 Overs, RR: 2.93) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Shaheen Shah Afridi | 4 | 2 | 2 | 1 | 0.50 | |
Naseem Shah | 4.1 | 0 | 13 | 1 | 3.17 | |
Abrar Ahmed | 7 | 0 | 26 | 0 | 3.71 | |
Agha Salman | 6.5 | 1 | 18 | 2 | 2.77 | |
Hasan Ali | 4 | 2 | 6 | 0 | 1.50 | |
Mohammad Nawaz | 4 | 0 | 19 | 0 | 4.75 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<