இலங்கை – பாகிஸ்தான் தொடரை பார்வையிட இலவச அனுமதி

Pakistan tour of Sri Lanka 2023

580
Pakistan tour of Sri Lanka 2023

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலவசமாக பார்வையிட முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான டெஸ்ட் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16) களமிறங்குகின்றன.

>>பலத்த எதிர்பார்ப்புக்களுடன் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி

தொடரின் முதலாவது போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்திலும் (24ம் திகதி) நடைபெறவுள்ளன.

குறித்த இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் ரசிகர்கள் டிக்கெட்டுகளின்றி இலவசமாக சென்று மைதானத்தில் பார்வையிட முடியும் என இலங்கை கிரிக்கெட் அறவித்துள்ளது.

இந்தப் போட்டித்தொடருக்கான டிக்கெட்டுகளை இலங்கை கிரிக்கெட் சபை விற்பனை செய்திருக்கும் நிலையில், ஏற்கனவே டிக்கெட்டுகளை கொள்வனவு செய்த ரசிகர்களுக்கு குறித்த தொகையினை இலங்கை கிரிக்கெட் சபை மீள செலுத்தவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<