இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

Pakistan tour of Sri Lanka 2023

784

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கான பாகிஸ்தான் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் குழாத்தில் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் சஹீன் ஷா அப்ரிடி மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் மீண்டும் ஒன்றுகூடும் CSK நட்சத்திரங்கள்!

கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது உபாதைக்குள்ளான சஹீன் ஷா அப்ரிடி அதனைத்தொடர்ந்து போட்டிகளில் விளையாடவில்லை. இந்தநிலையில் மீண்டும் இவர் அணிக்கு திரும்பியுள்ளார்.

பாபர் அஷாமின் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் புதுமுக வீரர்களான ஆமிர் ஜமால் மற்றும் மொஹமட் ஹுரைரா ஆகியோர் முதன்முறையாக டெஸ்ட் குழாத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். மொஹமட் ஹுரைரா உள்ளூர் போட்டிகளில் சிறந்த முறையில் ஓட்டங்களை குவித்துள்ளதுடன், ஆமிர் ஜமால் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக இருந்தார்.

இவர்களுடன் அணியின் முன்னணி வீரர்களான மொஹமட் ரிஸ்வான், கடந்த முறை இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை தன்னுடய துடுப்பாட்டத்தின் மூலம் வென்றுக்கொடுத்த அப்துல்லாஹ் சபீக், மொஹமட் நவாஸ், ஹசன் அலி, நசீம் ஷா மற்றும் ஷான் மசூட் போன்ற வீரர்கள் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான முதல் டெஸ்ட் தொடர் ஜூலை மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் குழாம்

பாபர் அஷாம் (தலைவர்), மொஹமட் ரிஸ்வான், ஆமிர் ஜமால், அப்துல்லாஹ் சபீக், அப்ரர் அஹ்மட், ஹஸன் அலி, இமாம் உல் ஹக், மொஹமட் ஹுரைரா, மொஹமட் நவாஸ், நசீம் ஷா, நோமான் அலி, சல்மான் அலி ஆகா, சர்பராஸ் அஹ்மட், சவுட் சகீல், சஹீன் அப்ரிடி, ஷான் மசூட்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<