சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணிகள் இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.
பாகிஸ்தானுக்கு எதிராக பிரகாசிக்கும் இலங்கையின் துடுப்பாட்டவீரர்கள்
இலங்கை கிரிக்கெட் அணியுடன் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவந்திருக்கும் பாகிஸ்தான் அணி, அதற்கு முன்னதாக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் ஆடுகின்றது.
கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்தப் பயிற்சிப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (12) நிறைவுக்கு வரும் போது, பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸை (323) அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 278 ஓட்டங்கள் எடுத்திருந்தது. களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்த நிஷான் மதுஷ்க 39 ஓட்டங்களையும், சாமிக்க கருணாரட்ன 14 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
இன்று மூன்றாம் நாளாக தொடர்ந்த போட்டியில் 22 வயது நிரம்பிய நிஷான் மதுஷ்க அரைச்சதம் விளாச இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணி 99 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 375 ஓட்டங்கள் பெற்றிருந்த போது, முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தினை இடைநிறுத்தியது.
இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் நிஷான் மதுஷ்க 9 பெளண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்களை எடுக்க, இறுதிவரை ஆட்டமிழக்காது நின்ற மினோத் பானுக்க 32 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
LPL தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் மொஹமட் நவாஸ் மாத்திரம் 02 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார்.
தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணியினை விட 52 ஓட்டங்கள் பின்தங்கியவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவடைந்து போட்டி சமநிலை அடையும் போது 50 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்கள் பெற்று காணப்பட்டிருந்தது.
பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பாக அரைச்சதம் தாண்டிய அப்துல்லா சபீக் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இதேநேரம் அஷார் அலி 40 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணியின் பந்துவீச்சு சார்பில் லக்ஷித ரசஞ்சன மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
முடிவு – போட்டி சமநிலை அடைந்தது
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<