பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு!

Pakistan tour of Sri Lanka 2022

2018

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 18 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான முக்கியமான இந்த தொடர் எதிர்வரும் 16ம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில், அவுஸ்திரேலிய தொடரிலிருந்து பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன, சுழல் பந்துவீச்சாளர்களான லசித் எம்புல்தெனிய, லக்ஷித மானசிங்க மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பதிலாக புதிய வீரர்கள் இணைக்கப்படாத போதும், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகியோர் தங்களுடைய இடங்களை தக்கவைத்துள்ளனர்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் 24ம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம்

திமுத் கருணாரத்ன (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, ஓசத பெர்னாண்டோ அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, தினேஷ் சந்திமால், ரமேஷ் மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, விஷ்வ பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ, டில்ஷான் மதுசங்க, பிரபாத் ஜயசூரிய, துனித் வெல்லாலகே, ஜெப்ரி வெண்டர்சே

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<