சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை 246 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினையும் 1-1 என சமநிலை செய்துள்ளது.
>> சவாலான வெற்றி இலக்கினை நிர்ணயம் செய்த இலங்கை
காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இந்த டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நேற்று (27) நிறைவுக்கு வந்த போது, போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 508 ஓட்டங்களை அடைவதற்கு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்திருந்த பாகிஸ்தான் 89 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த இமாம்-உல்-ஹக் 46 ஓட்டங்களையும், அணித்தலைவர் பாபர் அசாம் 26 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
இன்று போட்டியின் ஐந்தாம் நாளில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு இன்னும் 419 ஓட்டங்கள் தேவைப்பட, பாகிஸ்தான் அணி தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்தது. இன்றைய நாளின் ஆரம்பத்தில் அரைச்சதத்தினை நெருங்கிய இமாம்-உல்-ஹக் பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டாக ரமேஷ் மெண்டிஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டுடன் இமாம்-உல்-ஹக்கின் இன்னிங்ஸ் துரதிஷ்டவசமாக 49 ஓட்டங்களுடன் நிறைவுக்கு வந்தது.
அடுத்து பாகிஸ்தான் அணியின் மூன்றாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த பாபர் அசாம் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆகியோர் பொறுப்பான முறையில் ஆடி சிறந்த இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்க முயன்றிருந்தனர். இந்த இணைப்பாட்டத்திற்குள் பாபர் அசாம் தன்னுடைய 23ஆவது டெஸ்ட் அரைச்சதத்தினையும் பூர்த்தி செய்தார். தொடர்ந்து பிரபாத் ஜயசூரியவின் அபார பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டம் 76 ஓட்டங்களுடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது. பாகிஸ்தான் அணியின் மூன்றாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த மொஹமட் ரிஸ்வான் 6 பௌண்டரிகள் அடங்கலாக 37 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
ரிஸ்வானின் விக்கெட்டினை அடுத்து பாகிஸ்தான் அணியின் சரிவு ஆரம்பமாகியது. புதிய துடுப்பாட்டவீரராக வந்த பவாட் அலாம் அசித்த பெர்னாண்டோவின் அபார ரன் அவுட்டின் காரணமாக ஒரு ஓட்டத்துடன் ஓய்வறை நடக்க, அவரின் பின்னர் வந்த அகா சல்மான் குசல் மெண்டிஸின் பிடியெடுப்போடு வெறும் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார். இந்த விக்கெட்டோடு ஐந்தாம் நாளின் மதிய போசண இடைவேளை வழங்கப்பட்டது.
மதிய போசணத்தினை அடுத்த ஆட்டத்தில் இலங்கை சுழல்பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயற்படத் தொடங்கினார். அதன்படி மதிய போசணத்தின் பின்னர் பிரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சில் பாகிஸ்தானின் முதல் விக்கெட்டாக மாறிய பாபர் அசாம் LBW முறையில் ஆட்டமிழந்து 81 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். பாபர் அசாம் தனது துடுப்பாட்ட இன்னிங்ஸில் 6 பௌண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> ஆசியக்கிண்ணம் தொடர்பில் வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு
பாபர் அசாமின் விக்கெட்டினை அடுத்து பாரிய சிக்கலுக்கு உள்ளான பாகிஸ்தான் அணி இலங்கையின் சுழல்பந்துவீச்சாளர்கள் காரணமாக தமது விக்கெட்டுக்களை அடுத்தடுத்து பறிகொடுத்ததுடன் இறுதியில் 77 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 261 ஓட்டங்களை எடுத்து, போட்டியில் படுதோல்வியடைந்தது.
பாகிஸ்தான் அணியின் பின்வரிசை துடுப்பாட்டத்தில் யாசிர் சாஹ் 25 பந்துகளுக்கு 6 பௌண்டரிகள் அடங்கலாக 27 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இதேநேரம் இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் பிரபாத் ஜயசூரிய 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுக்களை சாய்த்தும் இலங்கைத் தரப்பின் வெற்றியினை உறுதி செய்தனர்.
போட்டியின் நாயகனாக இப்போட்டியில் இலங்கை அணியின் உப தலைவராக செயற்பட்ட தனன்ஞய டி சில்வா தெரிவாக, தொடர் நாயகன் விருது இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்துவீச்சாளர் பிரபாத் ஜயசூரியவிற்கு வழங்கப்பட்டது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Oshada Fernando | c Mohammad Rizwan b Mohammad Nawaz | 50 | 70 | 4 | 3 | 71.43 |
Dimuth Karunaratne | c Naseem Shah b Yasir Shah | 40 | 90 | 3 | 0 | 44.44 |
Kusal Mendis | run out (Agha Salman) | 3 | 10 | 0 | 0 | 30.00 |
Angelo Mathews | c Mohammad Rizwan b Nauman Ali | 42 | 106 | 5 | 0 | 39.62 |
Dinesh Chandimal | c Fawad Alam b Mohammad Nawaz | 80 | 137 | 9 | 2 | 58.39 |
Dhananjaya de Silva | b Naseem Shah | 33 | 61 | 3 | 1 | 54.10 |
Niroshan Dickwella | c Mohammad Rizwan b Naseem Shah | 51 | 54 | 6 | 1 | 94.44 |
Dunith Wellalage | c Babar Azam b Naseem Shah | 11 | 20 | 2 | 0 | 55.00 |
Ramesh Mendis | b Yasir Shah | 35 | 52 | 4 | 1 | 67.31 |
Prabath Jayasuriya | lbw b Yasir Shah | 8 | 17 | 0 | 0 | 47.06 |
Asitha Fernando | not out | 4 | 13 | 1 | 0 | 30.77 |
Extras | 21 (b 4 , lb 5 , nb 12, w 0, pen 0) |
Total | 378/10 (103 Overs, RR: 3.67) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Hasan Ali | 17 | 3 | 59 | 0 | 3.47 | |
Naseem Shah | 18 | 3 | 58 | 3 | 3.22 | |
Nauman Ali | 21 | 2 | 64 | 1 | 3.05 | |
Agha Salman | 6 | 0 | 25 | 0 | 4.17 | |
Mohammad Nawaz | 19 | 3 | 80 | 2 | 4.21 | |
Yasir Shah | 22 | 2 | 83 | 3 | 3.77 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Abdullah Shafique | b Asitha Fernando | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Imam-ul-Haq | b Dhananjaya de Silva | 32 | 54 | 4 | 0 | 59.26 |
Babar Azam | b Prabath Jayasuriya | 16 | 34 | 3 | 0 | 47.06 |
Mohammad Rizwan | lbw b Ramesh Mendis | 24 | 35 | 3 | 0 | 68.57 |
Fawad Alam | lbw b Ramesh Mendis | 24 | 69 | 1 | 0 | 34.78 |
Agha Salman | c Dhananjaya de Silva b Prabath Jayasuriya | 62 | 126 | 4 | 1 | 49.21 |
Mohammad Nawaz | c Niroshan Dickwella b Ramesh Mendis | 12 | 37 | 1 | 0 | 32.43 |
Yasir Shah | lbw b Ramesh Mendis | 26 | 97 | 0 | 1 | 26.80 |
Hasan Ali | b Prabath Jayasuriya | 21 | 54 | 0 | 1 | 38.89 |
Nauman Ali | c Niroshan Dickwella b Ramesh Mendis | 1 | 11 | 0 | 0 | 9.09 |
Naseem Shah | not out | 4 | 10 | 1 | 0 | 40.00 |
Extras | 9 (b 4 , lb 5 , nb 0, w 0, pen 0) |
Total | 231/10 (88.1 Overs, RR: 2.62) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 20 | 2 | 63 | 1 | 3.15 | |
Prabath Jayasuriya | 37 | 10 | 80 | 3 | 2.16 | |
Ramesh Mendis | 21.1 | 6 | 47 | 5 | 2.23 | |
Dhananjaya de Silva | 4 | 0 | 15 | 1 | 3.75 | |
Dunith Wellalage | 6 | 1 | 18 | 0 | 3.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Niroshan Dickwella | c Mohammad Rizwan b Naseem Shah | 15 | 25 | 2 | 0 | 60.00 |
Oshada Fernando | lbw b Yasir Shah | 19 | 24 | 3 | 0 | 79.17 |
Kusal Mendis | lbw b Mohammad Nawaz | 15 | 30 | 2 | 0 | 50.00 |
Angelo Mathews | c Babar Azam b Agha Salman | 35 | 62 | 4 | 1 | 56.45 |
Dinesh Chandimal | c Mohammad Rizwan b Naseem Shah | 21 | 58 | 0 | 0 | 36.21 |
Dimuth Karunaratne | c Abdullah Shafique b Nauman Ali | 61 | 105 | 3 | 0 | 58.10 |
Dhananjaya de Silva | run out (Yasir Shah) | 109 | 171 | 16 | 0 | 63.74 |
Dunith Wellalage | c Mohammad Rizwan b Mohammad Nawaz | 18 | 27 | 1 | 0 | 66.67 |
Ramesh Mendis | not out | 45 | 54 | 4 | 0 | 83.33 |
Extras | 22 (b 13 , lb 3 , nb 5, w 1, pen 0) |
Total | 360/8 (91.5 Overs, RR: 3.92) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Hasan Ali | 10 | 0 | 44 | 0 | 4.40 | |
Naseem Shah | 12.5 | 1 | 44 | 2 | 3.52 | |
Yasir Shah | 21 | 2 | 80 | 1 | 3.81 | |
Mohammad Nawaz | 21 | 4 | 75 | 2 | 3.57 | |
Nauman Ali | 14 | 0 | 54 | 1 | 3.86 | |
Agha Salman | 12 | 2 | 41 | 1 | 3.42 | |
Babar Azam | 1 | 0 | 6 | 0 | 6.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Abdullah Shafique | c Dunith Wellalage b Prabath Jayasuriya | 16 | 51 | 3 | 0 | 31.37 |
Imam-ul-Haq | c Niroshan Dickwella b Ramesh Mendis | 49 | 90 | 4 | 0 | 54.44 |
Babar Azam | lbw b Prabath Jayasuriya | 81 | 146 | 6 | 1 | 55.48 |
Mohammad Rizwan | b Prabath Jayasuriya | 37 | 69 | 6 | 0 | 53.62 |
Fawad Alam | run out (Niroshan Dickwella) | 1 | 9 | 0 | 0 | 11.11 |
Agha Salman | c Kusal Mendis b Prabath Jayasuriya | 4 | 6 | 1 | 0 | 66.67 |
Mohammad Nawaz | c Dinesh Chandimal b Ramesh Mendis | 12 | 29 | 1 | 0 | 41.38 |
Yasir Shah | c Kusal Mendis b Prabath Jayasuriya | 27 | 25 | 6 | 0 | 108.00 |
Hasan Ali | b Ramesh Mendis | 11 | 10 | 1 | 1 | 110.00 |
Nauman Ali | not out | 0 | 9 | 0 | 0 | 0.00 |
Naseem Shah | c Dunith Wellalage b Ramesh Mendis | 18 | 21 | 1 | 2 | 85.71 |
Extras | 5 (b 2 , lb 0 , nb 3, w 0, pen 0) |
Total | 261/10 (77 Overs, RR: 3.39) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 6 | 1 | 20 | 0 | 3.33 | |
Prabath Jayasuriya | 32 | 5 | 117 | 5 | 3.66 | |
Ramesh Mendis | 30 | 7 | 101 | 4 | 3.37 | |
Dhananjaya de Silva | 2 | 0 | 4 | 0 | 2.00 | |
Dunith Wellalage | 7 | 0 | 17 | 0 | 2.43 |
முடிவு – இலங்கை கிரிக்கெட் அணி 246 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<