Home Tamil சவாலான வெற்றி இலக்கினை நிர்ணயம் செய்த இலங்கை

சவாலான வெற்றி இலக்கினை நிர்ணயம் செய்த இலங்கை

324

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (27) நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில், இலங்கை அணி பாகிஸ்தான் அணிக்கு இமாலய இலக்கான 508 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

நல்ல முன்னிலையுடன் பலம் பெற்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (26) நிறைவுக்கு வரும் போது, பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸ் (231) துடுப்பாட்டத்தை அடுத்து பதிலுக்கு இரண்டாம் துடுப்பாடிய இலங்கை அணி 176 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்த தனன்ஞய டி சில்வா 30 ஓட்டங்களை பெற்றிருக்க, திமுத் கருணாரட்ன 27 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இன்று (27) போட்டியின் நான்காம் நாளில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு இன்றைய நாளில் அணித்தலைவர் திமுத் கருணாரட்ன தன்னுடைய 31ஆவது டெஸ்ட்  அரைச்சதம் பெற்று பெறுமதி சேர்த்தார். மறுமுனையில் தனன்ஞய டி சில்வாவும் அரைச்சதம் பூர்த்தி செய்தார்.

நான்காம் நாளின் மதிய போசணத்திற்கு முன்னதாக இலங்கை அணி இன்றைய நாளில் தமது முதல் விக்கெட்டினைப் பறிகொடுத்தது. இன்றைய நாளில் இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக மாறிய திமுத் கருணாரட்ன நெளமான் அலியின் பந்துவீச்சில் அப்துல்லா சபீக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்ததோடு, 3 பெளண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்கள் பெற்று ஓய்வறை நடந்தார்.

நான்காம் நாளின் மதிய போசணத்தினை தொடர்ந்து தனன்ஞய டி சில்வா, ரமேஷ் மெண்டிஸ் ஆகிய இருவரும் அபாரமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியதோடு, இதில் தனன்ஞய டி சில்வா சதம் பெற பாகிஸ்தான் அணியினை விட இலங்கை 500 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுக் கொண்டது.

ஐசிசி கிரிக்கெட் குழுவில் இணையும் விட்டோரி, லக்ஷ்மன்!

தொடர்ந்து நான்காம் நாளின் தேநீர் இடைவேளைக்கு முன்னர் தனன்ஞய டி சில்வா தனது விக்கெட்டினை பறிகொடுக்க தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை இலங்கை அணி 360 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் இடைநிறுத்தியது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் தனன்ஞய டி சில்வா தன்னுடைய 09ஆவது சதத்துடன், 16 பெளண்டரிகள் அடங்கலாக 109 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.  மறுமுனையில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரமேஷ் மெண்டிஸ் 54 பந்துகளுக்கு 5 பெளண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் நஸீம் சாஹ் மற்றும் மொஹமட் நவாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக பாகிஸ்தான் அணிக்கு 508 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த வெற்றி இலக்கை அடைய நான்காம் நாளின் தேநீர் இடைவேளைக்கு முன்னர் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தமது ஆட்டத்தினை ஆரம்பித்து நல்ல துவக்கத்துடன் தேநீர் இடைவேளையை அடைந்தது.

எனினும் தொடர்ந்த ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக இடைநிறுத்தப்பட்டதோடு, தொடர்ச்சியாக நிலைமைகள் சீராகாது போக இன்றைய நாளுக்கான ஆட்டம் நிறைவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்றைய நாளுக்கான ஆட்டம் நிறைவுக்கு வரும் போது பாகிஸ்தான் 89 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்படுகின்றது.

பாகிஸ்தான் அணிக்கு போட்டியின் ஐந்தாம் நாளில் வெற்றி பெற 419 ஓட்டங்கள் இன்னும் தேவைப்பட்ட நிலையில், களத்தில் ஆட்டமிழக்காது இருக்கும் இமாம்-உல்-ஹக் 46 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் பாபர் அசாம் 26 ஓட்டங்களையும் பெற்று நம்பிக்கை தருகின்றனர்.

இலங்கை அணியின் இன்றையபந்துவீச்சு சார்பில் பிரபாத் ஜயசூரிய ஒரு விக்கெட்டினை சாய்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
378/10 (103) & 360/8 (91.5)

Pakistan
231/10 (88.1) & 261/10 (77)

Batsmen R B 4s 6s SR
Oshada Fernando c Mohammad Rizwan b Mohammad Nawaz 50 70 4 3 71.43
Dimuth Karunaratne c Naseem Shah b Yasir Shah 40 90 3 0 44.44
Kusal Mendis run out (Agha Salman) 3 10 0 0 30.00
Angelo Mathews c Mohammad Rizwan b Nauman Ali 42 106 5 0 39.62
Dinesh Chandimal c Fawad Alam b Mohammad Nawaz 80 137 9 2 58.39
Dhananjaya de Silva b Naseem Shah 33 61 3 1 54.10
Niroshan Dickwella c Mohammad Rizwan b Naseem Shah 51 54 6 1 94.44
Dunith Wellalage c Babar Azam b Naseem Shah 11 20 2 0 55.00
Ramesh Mendis b Yasir Shah 35 52 4 1 67.31
Prabath Jayasuriya lbw b Yasir Shah 8 17 0 0 47.06
Asitha Fernando  not out 4 13 1 0 30.77


Extras 21 (b 4 , lb 5 , nb 12, w 0, pen 0)
Total 378/10 (103 Overs, RR: 3.67)
Bowling O M R W Econ
Hasan Ali 17 3 59 0 3.47
Naseem Shah 18 3 58 3 3.22
Nauman Ali 21 2 64 1 3.05
Agha Salman 6 0 25 0 4.17
Mohammad Nawaz 19 3 80 2 4.21
Yasir Shah 22 2 83 3 3.77
Batsmen R B 4s 6s SR
Abdullah Shafique b Asitha Fernando  0 2 0 0 0.00
Imam-ul-Haq b Dhananjaya de Silva 32 54 4 0 59.26
Babar Azam b Prabath Jayasuriya 16 34 3 0 47.06
Mohammad Rizwan lbw b Ramesh Mendis 24 35 3 0 68.57
Fawad Alam lbw b Ramesh Mendis 24 69 1 0 34.78
Agha Salman c Dhananjaya de Silva b Prabath Jayasuriya 62 126 4 1 49.21
Mohammad Nawaz c Niroshan Dickwella b Ramesh Mendis 12 37 1 0 32.43
Yasir Shah lbw b Ramesh Mendis 26 97 0 1 26.80
Hasan Ali b Prabath Jayasuriya 21 54 0 1 38.89
Nauman Ali c Niroshan Dickwella b Ramesh Mendis 1 11 0 0 9.09
Naseem Shah not out 4 10 1 0 40.00


Extras 9 (b 4 , lb 5 , nb 0, w 0, pen 0)
Total 231/10 (88.1 Overs, RR: 2.62)
Bowling O M R W Econ
Asitha Fernando  20 2 63 1 3.15
Prabath Jayasuriya 37 10 80 3 2.16
Ramesh Mendis 21.1 6 47 5 2.23
Dhananjaya de Silva 4 0 15 1 3.75
Dunith Wellalage 6 1 18 0 3.00
Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella c Mohammad Rizwan b Naseem Shah 15 25 2 0 60.00
Oshada Fernando lbw b Yasir Shah 19 24 3 0 79.17
Kusal Mendis lbw b Mohammad Nawaz 15 30 2 0 50.00
Angelo Mathews c Babar Azam b Agha Salman 35 62 4 1 56.45
Dinesh Chandimal c Mohammad Rizwan b Naseem Shah 21 58 0 0 36.21
Dimuth Karunaratne c Abdullah Shafique b Nauman Ali 61 105 3 0 58.10
Dhananjaya de Silva run out (Yasir Shah) 109 171 16 0 63.74
Dunith Wellalage c Mohammad Rizwan b Mohammad Nawaz 18 27 1 0 66.67
Ramesh Mendis not out 45 54 4 0 83.33


Extras 22 (b 13 , lb 3 , nb 5, w 1, pen 0)
Total 360/8 (91.5 Overs, RR: 3.92)
Bowling O M R W Econ
Hasan Ali 10 0 44 0 4.40
Naseem Shah 12.5 1 44 2 3.52
Yasir Shah 21 2 80 1 3.81
Mohammad Nawaz 21 4 75 2 3.57
Nauman Ali 14 0 54 1 3.86
Agha Salman 12 2 41 1 3.42
Babar Azam 1 0 6 0 6.00


Batsmen R B 4s 6s SR
Abdullah Shafique c Dunith Wellalage b Prabath Jayasuriya 16 51 3 0 31.37
Imam-ul-Haq c Niroshan Dickwella b Ramesh Mendis 49 90 4 0 54.44
Babar Azam lbw b Prabath Jayasuriya 81 146 6 1 55.48
Mohammad Rizwan b Prabath Jayasuriya 37 69 6 0 53.62
Fawad Alam run out (Niroshan Dickwella) 1 9 0 0 11.11
Agha Salman c Kusal Mendis b Prabath Jayasuriya 4 6 1 0 66.67
Mohammad Nawaz c Dinesh Chandimal b Ramesh Mendis 12 29 1 0 41.38
Yasir Shah c Kusal Mendis b Prabath Jayasuriya 27 25 6 0 108.00
Hasan Ali b Ramesh Mendis 11 10 1 1 110.00
Nauman Ali not out 0 9 0 0 0.00
Naseem Shah c Dunith Wellalage b Ramesh Mendis 18 21 1 2 85.71


Extras 5 (b 2 , lb 0 , nb 3, w 0, pen 0)
Total 261/10 (77 Overs, RR: 3.39)
Bowling O M R W Econ
Asitha Fernando  6 1 20 0 3.33
Prabath Jayasuriya 32 5 117 5 3.66
Ramesh Mendis 30 7 101 4 3.37
Dhananjaya de Silva 2 0 4 0 2.00
Dunith Wellalage 7 0 17 0 2.43



போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<