சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சன்மை காரணமாக நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு எதிராக நல்ல முன்னிலையுடன் பலம் பெற்றிருக்கின்றது.
>> முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் தடுமாறும் பாகிஸ்தான்
காலியில் நடைபெறும் இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (25) நிறைவுக்கு வரும் போது இலங்கை கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸை (378) அடுத்து, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய பாகிஸ்தான் 191 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. பாகிஸ்தான் அணிக்காக களத்தில் ஆட்டமிழக்காது நின்ற யாசிர் சாஹ் 13 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இன்று (26) போட்டியின் மூன்றாம் நாளில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த பாகிஸ்தான் மூன்றாம் நாளின் மதிய போசணத்திற்கு முன்னதாக 88.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 231 ஓட்டங்களை எடுத்துக் கொண்டது. பாகிஸ்தான் அணியின் பின்வரிசை வீரர்களில் சற்று பொறுப்பாக ஆடிய யாசிர் சாஹ் 26 ஓட்டங்களை எடுத்தார்.
மறுமுனையில் இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் ரமேஷ் மெண்டிஸ் 47 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்க்க, பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுக்களையும் அசித பெர்னாண்டோ மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றினர்.
பின்னர் பாகிஸ்தானை விட 148 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை இலங்கை அணி நிரோஷன் டிக்வெல்ல மற்றும் ஒசத பெர்னாண்டோ ஆகியோருடன் ஆரம்பித்தது. தொடர்ந்த போட்டியில் இலங்கை அணி மூன்றாம் நாளின் மதிய போசணத்தினை விக்கெட்டுக்கள் இழப்பின்றி அடைந்தது.
மதிய போசணத்தின் பின்னர் இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக மாறிய நிரோஷன் டிக்வெல்ல நஸீம் சாஹ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து 15 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். நிரோஷன் டிக்வெல்லவின் பின்னர் ஓசத பெர்னாண்டோவின் விக்கெட்டும் அவர் 19 ஓட்டங்கள் பெற்ற நிலையில் யாசிர் சாஹ்வின் பந்துவீச்சில் பறிபோனது. இதன் பின்னர் புதிய துடுப்பாட்டவீரராக வந்த குசல் மெண்டிஸ் வெறும் 15 ஓட்டங்களுடன் ஏமாற்றினார். அதன் பின்னர் அஞ்செலோ மெதிவ்ஸ் நல்ல ஆரம்பத்தினை பெற்றுக் கொண்ட போதும் அவரின் விக்கெட், அவர் 35 ஓட்டங்களை பெற்ற நிலையில் அகா சல்மானின் பந்துவீச்சில் பறிபோனது. இதனையடுத்து இலங்கை அணிக்கு பலம் தருவார் என எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் சந்திமாலும் மூன்றாம் நாளின் தேநீர் இடைவேளையினை அடுத்து, நஸீம் சாஹ்விடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் தினேஷ் சந்திமாலின் துடுப்பாட்ட இன்னிங்ஸ் 21 ஓட்டங்களுடன் நிறைவுக்கு வந்தது.
>> SLC இன் புனர்வாழ்வு திட்டத்தை புறக்கணித்த குசல் பெரேரா
தினேஷ் சந்திமாலின் விக்கெட்டினை அடுத்து இலங்கை அணியும் 117 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் இலங்கை அணியின் ஆறாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அணித்தலைவர் திமுத் கருணாரட்ன மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோர் பொறுமையான முறையில் துடுப்பாடி சிறந்த இணைப்பாட்டம் (59) ஒன்றினை உருவாக்கி வந்த நிலையில், போட்டியில் போதிய வெளிச்சமின்றிய நிலை உருவானது. இதனால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டதோடு, பின்னர் மூன்றாம் நாளுக்குரிய ஆட்டம் நிறைவடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
மூன்றாம் நாள் ஆட்டநிறைவின் போது பாகிஸ்தானை விட 323 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி தமது இரண்டாம் இன்னிங்ஸிற்காக 5 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றிருக்கின்றது. களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் தனன்ஞய டி சில்வா 30 ஓட்டங்களுடனும், திமுத் கருணாரட்ன 27 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றனர்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் நஸீம் சாஹ் 2 விக்கெட்டுக்களையும், யாசிர் சாஹ், மொஹமட் நவாஸ் மற்றும் அகா சல்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Oshada Fernando | c Mohammad Rizwan b Mohammad Nawaz | 50 | 70 | 4 | 3 | 71.43 |
Dimuth Karunaratne | c Naseem Shah b Yasir Shah | 40 | 90 | 3 | 0 | 44.44 |
Kusal Mendis | run out (Agha Salman) | 3 | 10 | 0 | 0 | 30.00 |
Angelo Mathews | c Mohammad Rizwan b Nauman Ali | 42 | 106 | 5 | 0 | 39.62 |
Dinesh Chandimal | c Fawad Alam b Mohammad Nawaz | 80 | 137 | 9 | 2 | 58.39 |
Dhananjaya de Silva | b Naseem Shah | 33 | 61 | 3 | 1 | 54.10 |
Niroshan Dickwella | c Mohammad Rizwan b Naseem Shah | 51 | 54 | 6 | 1 | 94.44 |
Dunith Wellalage | c Babar Azam b Naseem Shah | 11 | 20 | 2 | 0 | 55.00 |
Ramesh Mendis | b Yasir Shah | 35 | 52 | 4 | 1 | 67.31 |
Prabath Jayasuriya | lbw b Yasir Shah | 8 | 17 | 0 | 0 | 47.06 |
Asitha Fernando | not out | 4 | 13 | 1 | 0 | 30.77 |
Extras | 21 (b 4 , lb 5 , nb 12, w 0, pen 0) |
Total | 378/10 (103 Overs, RR: 3.67) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Hasan Ali | 17 | 3 | 59 | 0 | 3.47 | |
Naseem Shah | 18 | 3 | 58 | 3 | 3.22 | |
Nauman Ali | 21 | 2 | 64 | 1 | 3.05 | |
Agha Salman | 6 | 0 | 25 | 0 | 4.17 | |
Mohammad Nawaz | 19 | 3 | 80 | 2 | 4.21 | |
Yasir Shah | 22 | 2 | 83 | 3 | 3.77 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Abdullah Shafique | b Asitha Fernando | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Imam-ul-Haq | b Dhananjaya de Silva | 32 | 54 | 4 | 0 | 59.26 |
Babar Azam | b Prabath Jayasuriya | 16 | 34 | 3 | 0 | 47.06 |
Mohammad Rizwan | lbw b Ramesh Mendis | 24 | 35 | 3 | 0 | 68.57 |
Fawad Alam | lbw b Ramesh Mendis | 24 | 69 | 1 | 0 | 34.78 |
Agha Salman | c Dhananjaya de Silva b Prabath Jayasuriya | 62 | 126 | 4 | 1 | 49.21 |
Mohammad Nawaz | c Niroshan Dickwella b Ramesh Mendis | 12 | 37 | 1 | 0 | 32.43 |
Yasir Shah | lbw b Ramesh Mendis | 26 | 97 | 0 | 1 | 26.80 |
Hasan Ali | b Prabath Jayasuriya | 21 | 54 | 0 | 1 | 38.89 |
Nauman Ali | c Niroshan Dickwella b Ramesh Mendis | 1 | 11 | 0 | 0 | 9.09 |
Naseem Shah | not out | 4 | 10 | 1 | 0 | 40.00 |
Extras | 9 (b 4 , lb 5 , nb 0, w 0, pen 0) |
Total | 231/10 (88.1 Overs, RR: 2.62) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 20 | 2 | 63 | 1 | 3.15 | |
Prabath Jayasuriya | 37 | 10 | 80 | 3 | 2.16 | |
Ramesh Mendis | 21.1 | 6 | 47 | 5 | 2.23 | |
Dhananjaya de Silva | 4 | 0 | 15 | 1 | 3.75 | |
Dunith Wellalage | 6 | 1 | 18 | 0 | 3.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Niroshan Dickwella | c Mohammad Rizwan b Naseem Shah | 15 | 25 | 2 | 0 | 60.00 |
Oshada Fernando | lbw b Yasir Shah | 19 | 24 | 3 | 0 | 79.17 |
Kusal Mendis | lbw b Mohammad Nawaz | 15 | 30 | 2 | 0 | 50.00 |
Angelo Mathews | c Babar Azam b Agha Salman | 35 | 62 | 4 | 1 | 56.45 |
Dinesh Chandimal | c Mohammad Rizwan b Naseem Shah | 21 | 58 | 0 | 0 | 36.21 |
Dimuth Karunaratne | c Abdullah Shafique b Nauman Ali | 61 | 105 | 3 | 0 | 58.10 |
Dhananjaya de Silva | run out (Yasir Shah) | 109 | 171 | 16 | 0 | 63.74 |
Dunith Wellalage | c Mohammad Rizwan b Mohammad Nawaz | 18 | 27 | 1 | 0 | 66.67 |
Ramesh Mendis | not out | 45 | 54 | 4 | 0 | 83.33 |
Extras | 22 (b 13 , lb 3 , nb 5, w 1, pen 0) |
Total | 360/8 (91.5 Overs, RR: 3.92) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Hasan Ali | 10 | 0 | 44 | 0 | 4.40 | |
Naseem Shah | 12.5 | 1 | 44 | 2 | 3.52 | |
Yasir Shah | 21 | 2 | 80 | 1 | 3.81 | |
Mohammad Nawaz | 21 | 4 | 75 | 2 | 3.57 | |
Nauman Ali | 14 | 0 | 54 | 1 | 3.86 | |
Agha Salman | 12 | 2 | 41 | 1 | 3.42 | |
Babar Azam | 1 | 0 | 6 | 0 | 6.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Abdullah Shafique | c Dunith Wellalage b Prabath Jayasuriya | 16 | 51 | 3 | 0 | 31.37 |
Imam-ul-Haq | c Niroshan Dickwella b Ramesh Mendis | 49 | 90 | 4 | 0 | 54.44 |
Babar Azam | lbw b Prabath Jayasuriya | 81 | 146 | 6 | 1 | 55.48 |
Mohammad Rizwan | b Prabath Jayasuriya | 37 | 69 | 6 | 0 | 53.62 |
Fawad Alam | run out (Niroshan Dickwella) | 1 | 9 | 0 | 0 | 11.11 |
Agha Salman | c Kusal Mendis b Prabath Jayasuriya | 4 | 6 | 1 | 0 | 66.67 |
Mohammad Nawaz | c Dinesh Chandimal b Ramesh Mendis | 12 | 29 | 1 | 0 | 41.38 |
Yasir Shah | c Kusal Mendis b Prabath Jayasuriya | 27 | 25 | 6 | 0 | 108.00 |
Hasan Ali | b Ramesh Mendis | 11 | 10 | 1 | 1 | 110.00 |
Nauman Ali | not out | 0 | 9 | 0 | 0 | 0.00 |
Naseem Shah | c Dunith Wellalage b Ramesh Mendis | 18 | 21 | 1 | 2 | 85.71 |
Extras | 5 (b 2 , lb 0 , nb 3, w 0, pen 0) |
Total | 261/10 (77 Overs, RR: 3.39) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 6 | 1 | 20 | 0 | 3.33 | |
Prabath Jayasuriya | 32 | 5 | 117 | 5 | 3.66 | |
Ramesh Mendis | 30 | 7 | 101 | 4 | 3.37 | |
Dhananjaya de Silva | 2 | 0 | 4 | 0 | 2.00 | |
Dunith Wellalage | 7 | 0 | 17 | 0 | 2.43 |
போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<