சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநிறைவில், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கை சுழல்பந்துவீச்சாளர்கள் காரணமா தடுமாற்றத்தினை சந்தித்து வருகின்றது.
காலியில் நடைபெற்று வருகின்ற இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று (24) நிறைவுக்கு வந்த போது இலங்கை கிரிக்கெட் அணி 315 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த நிரோஷன் டிக்வெல்ல 42 ஓட்டங்களையும், துனித் வெல்லாலகே 06 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் காணப்பட்டிருந்தனர்.
முதல் நாளில் பலம் பெற்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி
இன்று (25) இரண்டாம் நாளில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் போனது. இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக இன்றைய நாளில் நஸீம் ஷாஹ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த துனித் வெலால்கே 11 ஓட்டங்களை மாத்திரம் எடுத்திருந்தார். மறுமுனையில் அரைச்சதம் விளாசிய நிரோஷன் டிக்வெல்லவின் விக்கெட்டும் நஸீம் சாஹ்வினால் கைப்பற்றப்பட்டது.
விக்கெட்காப்பாளர் ரிஸ்வானிடம் பிடியெடுப்பினை வழங்கிய நிரோஷன் டிக்வெல்ல டெஸ்ட் போட்டிகளில் தான் பெற்ற 22ஆவது அரைச்சதத்துடன் 54 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
இதன் பின்னர் பின்வரிசை வீரராக வந்த ரமேஷ் மெண்டிஸின் பெறுமதியான ஓட்டக்குவிப்போடு இலங்கை கிரிக்கெட் அணி 103 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 378 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்ஸிற்காக எடுத்தது. இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் ரமேஷ் மெண்டிஸ் தன்னுடைய சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸினை வெளிப்படுத்தி ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
அழைப்பு T20 தொடரை ஒழுங்கு செய்த இலங்கை கிரிக்கெட் சபை
மறுமுனையில் பாகிஸ்தான் பந்துவீச்சில் நஸீம் ஷாஹ் மற்றும் யாசிர் ஷாஹ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, மொஹமட் நவாஸ் 2 விக்கெட்டுக்களையும், நௌமான் அலி ஒரு விக்கெட்டினையும் சாய்த்திருந்தனர்.
இதனை அடுத்து இரண்டாம் நாளின் மதிய போசணத்திற்கு சற்று முன்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த பாகிஸ்தான் அணிக்கு, தொடக்கத்திலேயே அசித்த பெர்னாண்டோ அதிர்ச்சியினை உருவாக்கினார். அதன்படி இந்த இன்னிங்ஸின் இரண்டாவது பந்திலேயே அப்துல்லா சபீக்கினை போல்ட் செய்த பெர்னாண்டோ, அவரினை ஓட்டமேதுமின்றி ஓய்வறை அனுப்பினார்.
இதன் பின்னர் இரண்டாம் நாளின் மதிய போசணத்தினை அடுத்து பாகிஸ்தான் அணியின் இரண்டாம் விக்கெட்டாக அதன் தலைவர் பாபர் அசாம், பிரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சில் போல்ட் செய்யப்பட்டு 16 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.
தொடர்ந்து இலங்கை சுழல்பந்துவீச்சாளர்களின் சிறந்த ஆட்டம் காரணமாக சீரான இடைவேளைகளில் விக்கெட்டுக்களை பறிகொடுக்கத் தொடங்கிய பாகிஸ்தான் அணி இரண்டாம் நாளின் தேநீர் இடைவேளையினை 111 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்தவாறு அடைந்து கொண்டது.
தேநீர் இடைவேளையினை அடுத்து பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கை தருவார் என எதிர்பார்க்கப்பட்ட பவாட் அலாம், ரமேஷ் மெண்டிஸின் சுழலுக்கு LBW முறையில் ஆட்டமிழந்து 24 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். இதன் பின்னர், புதிய துடுப்பாட்டவீரராக வந்த மொஹமட் நவாஸ் உம் தனது விக்கெட்டினை 12 ஓட்டங்களுடன் ரமேஷ் மெண்டிஸிடம் பறிகொடுத்தார்.
எனினும் கடந்த போட்டியில் அறிமுகம் பெற்ற அகா சல்மான் பொறுப்பான முறையில் துடுப்பாடி பாகிஸ்தான் அணிக்காக ஓட்டங்களை சேர்த்ததோடு, டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய கன்னி அரைச்சதத்தினையும் பதிவு செய்தார்.
அழைப்பு T20 தொடரை ஒழுங்கு செய்த இலங்கை கிரிக்கெட் சபை
அகா சல்மானின் ஆட்டத்தின் உதவியோடு பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் ஆட்டநிறைவில் 69.4 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.
பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இன்றைய நாளில் அதன் இறுதி விக்கெட்டாக மாறிய அகா சல்மான் 126 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்கள் எடுத்தார்.
அதேநேரம் இலங்கை அணியினை விட தற்போது 187 ஓட்டங்கள் பின்தங்கியிருக்கும் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதற்கு நம்பிக்கையளிக்கும் துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான யாசிர் சாஹ் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் இன்றைய பந்துவீச்சு சார்பில் ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டுக்களையும், பிரபாத் ஜயசூரிய 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Oshada Fernando | c Mohammad Rizwan b Mohammad Nawaz | 50 | 70 | 4 | 3 | 71.43 |
Dimuth Karunaratne | c Naseem Shah b Yasir Shah | 40 | 90 | 3 | 0 | 44.44 |
Kusal Mendis | run out (Agha Salman) | 3 | 10 | 0 | 0 | 30.00 |
Angelo Mathews | c Mohammad Rizwan b Nauman Ali | 42 | 106 | 5 | 0 | 39.62 |
Dinesh Chandimal | c Fawad Alam b Mohammad Nawaz | 80 | 137 | 9 | 2 | 58.39 |
Dhananjaya de Silva | b Naseem Shah | 33 | 61 | 3 | 1 | 54.10 |
Niroshan Dickwella | c Mohammad Rizwan b Naseem Shah | 51 | 54 | 6 | 1 | 94.44 |
Dunith Wellalage | c Babar Azam b Naseem Shah | 11 | 20 | 2 | 0 | 55.00 |
Ramesh Mendis | b Yasir Shah | 35 | 52 | 4 | 1 | 67.31 |
Prabath Jayasuriya | lbw b Yasir Shah | 8 | 17 | 0 | 0 | 47.06 |
Asitha Fernando | not out | 4 | 13 | 1 | 0 | 30.77 |
Extras | 21 (b 4 , lb 5 , nb 12, w 0, pen 0) |
Total | 378/10 (103 Overs, RR: 3.67) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Hasan Ali | 17 | 3 | 59 | 0 | 3.47 | |
Naseem Shah | 18 | 3 | 58 | 3 | 3.22 | |
Nauman Ali | 21 | 2 | 64 | 1 | 3.05 | |
Agha Salman | 6 | 0 | 25 | 0 | 4.17 | |
Mohammad Nawaz | 19 | 3 | 80 | 2 | 4.21 | |
Yasir Shah | 22 | 2 | 83 | 3 | 3.77 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Abdullah Shafique | b Asitha Fernando | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Imam-ul-Haq | b Dhananjaya de Silva | 32 | 54 | 4 | 0 | 59.26 |
Babar Azam | b Prabath Jayasuriya | 16 | 34 | 3 | 0 | 47.06 |
Mohammad Rizwan | lbw b Ramesh Mendis | 24 | 35 | 3 | 0 | 68.57 |
Fawad Alam | lbw b Ramesh Mendis | 24 | 69 | 1 | 0 | 34.78 |
Agha Salman | c Dhananjaya de Silva b Prabath Jayasuriya | 62 | 126 | 4 | 1 | 49.21 |
Mohammad Nawaz | c Niroshan Dickwella b Ramesh Mendis | 12 | 37 | 1 | 0 | 32.43 |
Yasir Shah | lbw b Ramesh Mendis | 26 | 97 | 0 | 1 | 26.80 |
Hasan Ali | b Prabath Jayasuriya | 21 | 54 | 0 | 1 | 38.89 |
Nauman Ali | c Niroshan Dickwella b Ramesh Mendis | 1 | 11 | 0 | 0 | 9.09 |
Naseem Shah | not out | 4 | 10 | 1 | 0 | 40.00 |
Extras | 9 (b 4 , lb 5 , nb 0, w 0, pen 0) |
Total | 231/10 (88.1 Overs, RR: 2.62) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 20 | 2 | 63 | 1 | 3.15 | |
Prabath Jayasuriya | 37 | 10 | 80 | 3 | 2.16 | |
Ramesh Mendis | 21.1 | 6 | 47 | 5 | 2.23 | |
Dhananjaya de Silva | 4 | 0 | 15 | 1 | 3.75 | |
Dunith Wellalage | 6 | 1 | 18 | 0 | 3.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Niroshan Dickwella | c Mohammad Rizwan b Naseem Shah | 15 | 25 | 2 | 0 | 60.00 |
Oshada Fernando | lbw b Yasir Shah | 19 | 24 | 3 | 0 | 79.17 |
Kusal Mendis | lbw b Mohammad Nawaz | 15 | 30 | 2 | 0 | 50.00 |
Angelo Mathews | c Babar Azam b Agha Salman | 35 | 62 | 4 | 1 | 56.45 |
Dinesh Chandimal | c Mohammad Rizwan b Naseem Shah | 21 | 58 | 0 | 0 | 36.21 |
Dimuth Karunaratne | c Abdullah Shafique b Nauman Ali | 61 | 105 | 3 | 0 | 58.10 |
Dhananjaya de Silva | run out (Yasir Shah) | 109 | 171 | 16 | 0 | 63.74 |
Dunith Wellalage | c Mohammad Rizwan b Mohammad Nawaz | 18 | 27 | 1 | 0 | 66.67 |
Ramesh Mendis | not out | 45 | 54 | 4 | 0 | 83.33 |
Extras | 22 (b 13 , lb 3 , nb 5, w 1, pen 0) |
Total | 360/8 (91.5 Overs, RR: 3.92) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Hasan Ali | 10 | 0 | 44 | 0 | 4.40 | |
Naseem Shah | 12.5 | 1 | 44 | 2 | 3.52 | |
Yasir Shah | 21 | 2 | 80 | 1 | 3.81 | |
Mohammad Nawaz | 21 | 4 | 75 | 2 | 3.57 | |
Nauman Ali | 14 | 0 | 54 | 1 | 3.86 | |
Agha Salman | 12 | 2 | 41 | 1 | 3.42 | |
Babar Azam | 1 | 0 | 6 | 0 | 6.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Abdullah Shafique | c Dunith Wellalage b Prabath Jayasuriya | 16 | 51 | 3 | 0 | 31.37 |
Imam-ul-Haq | c Niroshan Dickwella b Ramesh Mendis | 49 | 90 | 4 | 0 | 54.44 |
Babar Azam | lbw b Prabath Jayasuriya | 81 | 146 | 6 | 1 | 55.48 |
Mohammad Rizwan | b Prabath Jayasuriya | 37 | 69 | 6 | 0 | 53.62 |
Fawad Alam | run out (Niroshan Dickwella) | 1 | 9 | 0 | 0 | 11.11 |
Agha Salman | c Kusal Mendis b Prabath Jayasuriya | 4 | 6 | 1 | 0 | 66.67 |
Mohammad Nawaz | c Dinesh Chandimal b Ramesh Mendis | 12 | 29 | 1 | 0 | 41.38 |
Yasir Shah | c Kusal Mendis b Prabath Jayasuriya | 27 | 25 | 6 | 0 | 108.00 |
Hasan Ali | b Ramesh Mendis | 11 | 10 | 1 | 1 | 110.00 |
Nauman Ali | not out | 0 | 9 | 0 | 0 | 0.00 |
Naseem Shah | c Dunith Wellalage b Ramesh Mendis | 18 | 21 | 1 | 2 | 85.71 |
Extras | 5 (b 2 , lb 0 , nb 3, w 0, pen 0) |
Total | 261/10 (77 Overs, RR: 3.39) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 6 | 1 | 20 | 0 | 3.33 | |
Prabath Jayasuriya | 32 | 5 | 117 | 5 | 3.66 | |
Ramesh Mendis | 30 | 7 | 101 | 4 | 3.37 | |
Dhananjaya de Silva | 2 | 0 | 4 | 0 | 2.00 | |
Dunith Wellalage | 7 | 0 | 17 | 0 | 2.43 |
போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<