Home Tamil முதல் நாளில் பலம் பெற்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி

முதல் நாளில் பலம் பெற்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி

301

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை கிரிக்கெட் அணி தமது துடுப்பாட்டவீரர்களின் சிறப்பான ஆட்டத்தோடு வலுவடைந்திருக்கின்றது.

முன்னதாக காலி நகரில் ஆரம்பமாகிய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரட்ன முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை அணிக்காகப் பெற்றிருந்தார்.

>> இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடவுள்ள வெல்லாலகே

ஐ.சி.சி. இன் டெஸ்ட் உலக சம்பியன்ஷிப்பிற்காக நடைபெறும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருக்க, இலங்கை அணி இரு போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் தொடரினை தக்க வைக்க இப்போட்டியில் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்து களமிறங்கியிருக்கின்றது.

இதேநேரம் இந்த டெஸ்ட் போட்டி இலங்கையின் அனுபவ வீரர் அஞ்செலோ மெதிவ்ஸின் 100ஆவது டெஸ்ட் போட்டியாக அமைய, இப்போட்டியின் மூலம் சகலதுறைவீரரான துனித் வெலால்கே இலங்கையின் 162ஆவது டெஸ்ட் வீரராக அறிமுகம் பெற்றிருந்தார்.

மறுமுனையில் பாகிஸ்தான் இப்போட்டியில் சஹீன் அப்ரிடி மற்றும் அஷார் அலி ஆகியோருக்கு ஓய்வு வழங்கியிருக்க, பவாட் அலாம் மற்றும் நௌமான் அலி ஆகியோர் அணிக்குள் இணைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை பதினொருவர்

திமுத் கருணாரட்ன (தலைவர்), ஓசத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஞய டி சில்வா, தினேஷ் சந்திமால், நிரோஷன் டிக்வெல்ல, ரமேஷ் மெண்டிஸ், துனித் வெலால்கே, பிரபாத் ஜயசூரிய, அசித பெர்னாண்டோ

பாகிஸ்தான் பதினொருவர்

அப்துல்லா சபீக், இமாம்-உல்-ஹக், பவாட் அலாம், பாபர் அசாம் (தலைவர்), அகா சல்மான், மொஹமட் ரிஸ்வான், மொஹமட் நவாஸ், யாசிர் சாஹ், ஹசன் அலி, நௌமான் அலி, நஸீம் சாஹ்

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணிக்கு திமுத் கருணாரட்ன மற்றும் ஓசத பெர்னாண்டோ ஜோடி சிறந்த ஆரம்பத்தினை வழங்கியது. இதில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தொடர்ச்சியான முறையில் தன்னுடைய இரண்டாவது அரைச்சதத்தினைப் பதிவு செய்த ஓசத பெர்னாண்டோ, இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக மொஹமட் நவாஸின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க முன்னர் 70 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

இதனையடுத்து புதிய துடுப்பாட்டவீரராக வந்த குசல் மெண்டிஸ் துரதிஷ்டவசமான ரன் அவுட் ஒன்றின் மூலம், முதல் நாளின் மதிய போசணத்திற்கு முன்னர் தனது விக்கெட்டினை 03 ஓட்டங்கள் பெற்ற நிலையில் பறிகொடுத்தார்.

>> சமநிலை அடைந்த 143ஆவது நீலங்களின் சமர் பெரும் போட்டி

தொடர்ந்து முதல் நாளின் மதிய போசணத்திற்குப் பின்னர் இலங்கை அணியின் மூன்றாம் விக்கெட்டாக அணித்தலைவர் திமுத் கருணாரட்னவின் விக்கெட் பறிபோனது. யாசிர் சாஹ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த திமுத் கருணாரட்ன 3 பௌண்டரிகள் அடங்கலாக 40 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இதனையடுத்து முதல்நாளின் தேநீர் இடைவேளைக்கு முன்னர் ஜோடி சேர்ந்த அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் பொறுமையான முறையில் துடுப்பாடி, முதல் நாளின் தேநீர் இடைவேளை வரை இலங்கை அணியினை கொண்டு சென்றதோடு இலங்கை அணியின் மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக 75 ஓட்டங்களையும் பகிர்ந்தனர். தொடர்ந்து, இலங்கை அணியின் நான்காம் விக்கெட்டாக தேநீர் இடைவேளையை அடுத்து ஆட்டமிழந்த அஞ்செலோ மெதிவ்ஸ் 42 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

எனினும் களத்தில் நின்ற தினேஷ் சந்திமால் டெஸ்ட் போட்டிகளில் தான் பெற்ற 24ஆவது அரைச்சதத்தோடு, இலங்கை அணியினை தொடர்ந்து பலப்படுத்தினார்.

தொடர்ந்து மூன்றாம் இடைவெளியில் தினேஷ் சந்திமாலின் விக்கெட் பறிபோனது. மொஹமட் நவாஸின் பந்துவீச்சில் பிடியெடுப்பு ஒன்றினை வழங்கி ஆட்டமிழந்த தினேஷ் சந்திமால் 2 சிக்ஸர்கள் மற்றும் 9 பெளண்டரிகள் அடங்கலாக 80 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

தினேஷ் சந்திமாலை தொடர்ந்து, தனன்ஞய டி சில்வாவின் விக்கெட்டினையும் பறிகொடுத்த இலங்கை அணி போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 86 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 315 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.

>> சகலதுறைகளிலும் அபாரம் காண்பித்த சஜித்ர சேனநாயக்க

களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் நிரோஷன் டிக்வெல்ல 42 ஓட்டங்களுடனும், துனித் வெலால்கே 06 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றனர். இதேநேரம் இலங்கை அணியின் 6ஆவது விக்கெட்டாக மாறிய தனன்ஞய டி சில்வா 33 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் மொஹமட் நவாஸ் 2 விக்கெட்டுக்களையும், நஸீம் சாஹ், நெளமான் அலி மற்றும் யாசிர் சாஹ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
378/10 (103) & 360/8 (91.5)

Pakistan
231/10 (88.1) & 261/10 (77)

Batsmen R B 4s 6s SR
Oshada Fernando c Mohammad Rizwan b Mohammad Nawaz 50 70 4 3 71.43
Dimuth Karunaratne c Naseem Shah b Yasir Shah 40 90 3 0 44.44
Kusal Mendis run out (Agha Salman) 3 10 0 0 30.00
Angelo Mathews c Mohammad Rizwan b Nauman Ali 42 106 5 0 39.62
Dinesh Chandimal c Fawad Alam b Mohammad Nawaz 80 137 9 2 58.39
Dhananjaya de Silva b Naseem Shah 33 61 3 1 54.10
Niroshan Dickwella c Mohammad Rizwan b Naseem Shah 51 54 6 1 94.44
Dunith Wellalage c Babar Azam b Naseem Shah 11 20 2 0 55.00
Ramesh Mendis b Yasir Shah 35 52 4 1 67.31
Prabath Jayasuriya lbw b Yasir Shah 8 17 0 0 47.06
Asitha Fernando  not out 4 13 1 0 30.77


Extras 21 (b 4 , lb 5 , nb 12, w 0, pen 0)
Total 378/10 (103 Overs, RR: 3.67)
Bowling O M R W Econ
Hasan Ali 17 3 59 0 3.47
Naseem Shah 18 3 58 3 3.22
Nauman Ali 21 2 64 1 3.05
Agha Salman 6 0 25 0 4.17
Mohammad Nawaz 19 3 80 2 4.21
Yasir Shah 22 2 83 3 3.77
Batsmen R B 4s 6s SR
Abdullah Shafique b Asitha Fernando  0 2 0 0 0.00
Imam-ul-Haq b Dhananjaya de Silva 32 54 4 0 59.26
Babar Azam b Prabath Jayasuriya 16 34 3 0 47.06
Mohammad Rizwan lbw b Ramesh Mendis 24 35 3 0 68.57
Fawad Alam lbw b Ramesh Mendis 24 69 1 0 34.78
Agha Salman c Dhananjaya de Silva b Prabath Jayasuriya 62 126 4 1 49.21
Mohammad Nawaz c Niroshan Dickwella b Ramesh Mendis 12 37 1 0 32.43
Yasir Shah lbw b Ramesh Mendis 26 97 0 1 26.80
Hasan Ali b Prabath Jayasuriya 21 54 0 1 38.89
Nauman Ali c Niroshan Dickwella b Ramesh Mendis 1 11 0 0 9.09
Naseem Shah not out 4 10 1 0 40.00


Extras 9 (b 4 , lb 5 , nb 0, w 0, pen 0)
Total 231/10 (88.1 Overs, RR: 2.62)
Bowling O M R W Econ
Asitha Fernando  20 2 63 1 3.15
Prabath Jayasuriya 37 10 80 3 2.16
Ramesh Mendis 21.1 6 47 5 2.23
Dhananjaya de Silva 4 0 15 1 3.75
Dunith Wellalage 6 1 18 0 3.00
Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella c Mohammad Rizwan b Naseem Shah 15 25 2 0 60.00
Oshada Fernando lbw b Yasir Shah 19 24 3 0 79.17
Kusal Mendis lbw b Mohammad Nawaz 15 30 2 0 50.00
Angelo Mathews c Babar Azam b Agha Salman 35 62 4 1 56.45
Dinesh Chandimal c Mohammad Rizwan b Naseem Shah 21 58 0 0 36.21
Dimuth Karunaratne c Abdullah Shafique b Nauman Ali 61 105 3 0 58.10
Dhananjaya de Silva run out (Yasir Shah) 109 171 16 0 63.74
Dunith Wellalage c Mohammad Rizwan b Mohammad Nawaz 18 27 1 0 66.67
Ramesh Mendis not out 45 54 4 0 83.33


Extras 22 (b 13 , lb 3 , nb 5, w 1, pen 0)
Total 360/8 (91.5 Overs, RR: 3.92)
Bowling O M R W Econ
Hasan Ali 10 0 44 0 4.40
Naseem Shah 12.5 1 44 2 3.52
Yasir Shah 21 2 80 1 3.81
Mohammad Nawaz 21 4 75 2 3.57
Nauman Ali 14 0 54 1 3.86
Agha Salman 12 2 41 1 3.42
Babar Azam 1 0 6 0 6.00


Batsmen R B 4s 6s SR
Abdullah Shafique c Dunith Wellalage b Prabath Jayasuriya 16 51 3 0 31.37
Imam-ul-Haq c Niroshan Dickwella b Ramesh Mendis 49 90 4 0 54.44
Babar Azam lbw b Prabath Jayasuriya 81 146 6 1 55.48
Mohammad Rizwan b Prabath Jayasuriya 37 69 6 0 53.62
Fawad Alam run out (Niroshan Dickwella) 1 9 0 0 11.11
Agha Salman c Kusal Mendis b Prabath Jayasuriya 4 6 1 0 66.67
Mohammad Nawaz c Dinesh Chandimal b Ramesh Mendis 12 29 1 0 41.38
Yasir Shah c Kusal Mendis b Prabath Jayasuriya 27 25 6 0 108.00
Hasan Ali b Ramesh Mendis 11 10 1 1 110.00
Nauman Ali not out 0 9 0 0 0.00
Naseem Shah c Dunith Wellalage b Ramesh Mendis 18 21 1 2 85.71


Extras 5 (b 2 , lb 0 , nb 3, w 0, pen 0)
Total 261/10 (77 Overs, RR: 3.39)
Bowling O M R W Econ
Asitha Fernando  6 1 20 0 3.33
Prabath Jayasuriya 32 5 117 5 3.66
Ramesh Mendis 30 7 101 4 3.37
Dhananjaya de Silva 2 0 4 0 2.00
Dunith Wellalage 7 0 17 0 2.43



போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<