Home Tamil சாதனை வெற்றியுடன் டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்ற பாகிஸ்தான்.

சாதனை வெற்றியுடன் டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்ற பாகிஸ்தான்.

2162

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி அப்துல்லா சபீக்கின் அபார சதத்தோடு 04 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

வெற்றியை நோக்கி நகரும் பாகிஸ்தான் அணி

இன்னும் இந்த வெற்றியுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது.

ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நேற்று (19) நிறைவுக்கு வந்த போது, பாகிஸ்தான் அணி தமக்கு வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 342 ஓட்டங்களை அடைவதற்கு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்திருந்ததோடு, இரண்டாம் நாள் ஆட்டநிறைவில் 222 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கை தந்த அப்துல்லா சபீக் 112 ஓட்டங்களுடனும், மொஹமட் ரிஸ்வான் 7 ஓட்டங்களுடனும் காணப்பட்டிருந்தனர்.

இன்று போட்டியின் ஐந்தாம் நாளில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 7 விக்கெட்டுக்கள் மீதமிருக்க 120 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணி தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினைத் தொடர்ந்தது.

இன்றைய நாளில் இலங்கை அணி விக்கெட்டுக்கான முயற்சிகளை மேற்கொண்ட போதும் பாகிஸ்தான் அணிக்காக களத்தில் நின்ற மொஹமட் ரிஸ்வான் மற்றும் அப்துல்லா சபீக் ஆகிய இருவரும் சிறந்த முறையில் துடுப்பாடி ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர். தொடர்ந்து இன்றைய நாளில் பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டாக மாறிய மொஹமட் ரிஸ்வான் பிரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து 40 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். அத்துடன் மொஹமட் ரிஸ்வான் நான்காம் விக்கெட் இணைப்பாட்டமாக 71 ஓட்டங்களையும் பகிர்ந்திருந்தார்.

பாகிஸ்தான் தொடரிலிருந்து பெதும் நிஸ்ஸங்க நீக்கம்!

மொஹமட் ரிஸ்வானை அடுத்து தமது மத்திய வரிசை வீரர்களை இழந்த போதும் அப்துல்லா சபீக்கின் அபார ஆட்டத்தோடு, பாகிஸ்தான் அணி போட்டியின் வெற்றி இலக்கினை ஐந்தாம் நாளின் மதிய போசண இடைவேளையினை அடுத்து 127.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 344 ஓட்டங்களுடன் அடைந்தது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த அப்துல்லா சபீக் தன்னுடைய சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் உடன் 408 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 160 ஓட்டங்களை எடுத்திருந்தார். இதேநேரம் மொஹமட் நவாஸ் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுக்களையும், ரமேஸ் மெண்டிஸ் மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தனர்.

அத்துடன் இந்த வெற்றியுடன் பாகிஸ்தான் அணி காலி மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் அணியொன்று துரத்திய அதிகூடிய ஓட்டங்களுடன் புதிய சாதனை படைத்திருக்கின்றது. இதற்கு முன்னர் இலங்கை அணி கடந்த 2019ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 268 ஓட்டங்களை துரத்தியதே காலி மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் அணியொன்று துரத்திய அதிகூடிய ஓட்டங்களாக காணப்பட்டிருந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் அப்துல்லா சபீக் தெரிவாகியிருந்தார். இனி இரு அணிகளும் பங்கெடுக்கும் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) ஆரம்பமாகின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
222/10 (66.1) & 337/10 (100)

Pakistan
218/10 (90.5) & 344/6 (127.2)

Batsmen R B 4s 6s SR
Oshada Fernando c Mohammad Rizwan b Hasan Ali 35 49 5 0 71.43
Dimuth Karunaratne b Shaheen Shah Afridi 1 7 0 0 14.29
Kusal Mendis c Mohammad Rizwan b Yasir Shah 21 35 3 0 60.00
Angelo Mathews c Naseem Shah b Yasir Shah 0 15 0 0 0.00
Dinesh Chandimal c Yasir Shah b Hasan Ali 76 115 10 1 66.09
Dhananjaya de Silva b Shaheen Shah Afridi 14 28 2 0 50.00
Niroshan Dickwella c Agha Salman b Shaheen Shah Afridi 4 4 1 0 100.00
Ramesh Mendis c Mohammad Rizwan b Naseem Shah 11 41 1 0 26.83
Prabath Jayasuriya lbw b Mohammad Nawaz 3 9 0 0 33.33
Maheesh Theekshana c Mohammad Rizwan b Shaheen Shah Afridi 38 65 4 1 58.46
Kasun Rajitha not out 12 32 1 0 37.50


Extras 7 (b 1 , lb 3 , nb 3, w 0, pen 0)
Total 222/10 (66.1 Overs, RR: 3.36)
Bowling O M R W Econ
Shaheen Shah Afridi 14.1 3 58 4 4.11
Hasan Ali 12 2 23 2 1.92
Naseem Shah 13 0 53 1 4.08
Yasir Shah 21 4 66 2 3.14
Mohammad Nawaz 6 2 18 1 3.00
Batsmen R B 4s 6s SR
Abdullah Shafique lbw b Prabath Jayasuriya 13 47 2 0 27.66
Imam-ul-Haq lbw b Kasun Rajitha 2 16 0 0 12.50
Azhar Ali lbw b Prabath Jayasuriya 3 41 0 0 7.32
Babar Azam lbw b Maheesh Theekshana 119 244 11 2 48.77
Mohammad Rizwan c Niroshan Dickwella b Ramesh Mendis 19 35 3 0 54.29
Agha Salman lbw b Prabath Jayasuriya 5 15 1 0 33.33
Mohammad Nawaz c Nuwanidu Fernando b Prabath Jayasuriya 5 18 0 0 27.78
Shaheen Shah Afridi lbw b Prabath Jayasuriya 0 1 0 0 0.00
Yasir Shah c Dhananjaya de Silva b Maheesh Theekshana 18 56 1 0 32.14
Hasan Ali c Dinesh Chandimal b Ramesh Mendis 17 21 0 0 80.95
Naseem Shah not out 5 52 1 0 9.62


Extras 12 (b 5 , lb 1 , nb 1, w 5, pen 0)
Total 218/10 (90.5 Overs, RR: 2.4)
Bowling O M R W Econ
Kasun Rajitha 11 2 42 1 3.82
Maheesh Theekshana 25.5 6 68 2 2.67
Prabath Jayasuriya 39 10 82 5 2.10
Ramesh Mendis 13 2 18 2 1.38
Dhananjaya de Silva 2 0 2 0 1.00
Batsmen R B 4s 6s SR
Oshada Fernando c Babar Azam b Yasir Shah 64 125 6 1 51.20
Dimuth Karunaratne lbw b Mohammad Nawaz 16 29 2 0 55.17
Kasun Rajitha lbw b Mohammad Nawaz 7 12 1 0 58.33
Kusal Mendis b Yasir Shah 76 126 9 0 60.32
Angelo Mathews c Babar Azam b Mohammad Nawaz 9 25 1 0 36.00
Dinesh Chandimal not out 94 139 5 2 67.63
Dhananjaya de Silva b Yasir Shah 20 20 2 1 100.00
Niroshan Dickwella b Mohammad Nawaz 12 11 2 0 109.09
Ramesh Mendis b Mohammad Nawaz 22 32 2 0 68.75
Maheesh Theekshana c Mohammad Rizwan b Mohammad Hasnain 11 57 0 0 19.30
Prabath Jayasuriya b Naseem Shah 4 25 1 0 16.00


Extras 2 (b 0 , lb 1 , nb 1, w 0, pen 0)
Total 337/10 (100 Overs, RR: 3.37)
Bowling O M R W Econ
Shaheen Shah Afridi 7 2 21 0 3.00
Mohammad Nawaz 28 2 88 5 3.14
Agha Salman 16 1 53 0 3.31
Yasir Shah 29 2 122 3 4.21
Hasan Ali 12 3 19 1 1.58
Babar Azam 1 0 9 0 9.00
Naseem Shah 7 0 24 1 3.43


Batsmen R B 4s 6s SR
Abdullah Shafique not out 160 408 7 1 39.22
Imam-ul-Haq st Niroshan Dickwella b Ramesh Mendis 35 73 3 0 47.95
Azhar Ali c Dhananjaya de Silva b Prabath Jayasuriya 6 32 0 0 18.75
Babar Azam b Prabath Jayasuriya 55 104 4 1 52.88
Mohammad Rizwan lbw b Prabath Jayasuriya 40 74 2 0 54.05
Agha Salman c Niroshan Dickwella b Prabath Jayasuriya 12 35 1 0 34.29
Hasan Ali c Maheesh Theekshana b Dhananjaya de Silva 5 4 1 0 125.00
Mohammad Nawaz not out 19 34 1 0 55.88


Extras 12 (b 5 , lb 7 , nb 0, w 0, pen 0)
Total 344/6 (127.2 Overs, RR: 2.7)
Bowling O M R W Econ
Kasun Rajitha 9 2 18 0 2.00
Prabath Jayasuriya 56.2 10 133 4 2.37
Ramesh Mendis 33 0 102 1 3.09
Maheesh Theekshana 14 2 44 0 3.14
Dhananjaya de Silva 15 1 33 1 2.20



முடிவு – பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<