Home Tamil வெற்றியை நோக்கி நகரும் பாகிஸ்தான் அணி

வெற்றியை நோக்கி நகரும் பாகிஸ்தான் அணி

308

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற  பாகிஸ்தான் அணிக்கு  7 விக்கெட்டுக்கள் மீதமிருக்க 120 ஓட்டங்கள் மாத்திரமே தேவையாக இருக்கின்றது.

பொதுநலவாய போட்டிகளுக்கான இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (18) நிறைவுக்கு வரும் போது, தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வந்த இலங்கை அணி 329 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த தினேஷ் சந்திமால் 86 ஓட்டங்களுடனும், பிரபாத் ஜயசூரிய 04 ஓட்டங்களுடனும் காணப்பட்டிருந்தனர்.

இன்று பாகிஸ்தானை விட 333 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி, இன்றைய நாளில் 08 ஓட்டங்களை மாத்திரம் மேலதிகமாக எடுத்திருக்க, பிரபாத் ஜயசூரியவின் விக்கெட் அவர் 04 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற நிலையில் நஸீம் சாஹ்வின் பந்துவீச்சில் பறிபோனது. இதனால் இலங்கை கிரிக்கெட் அணியின் இறுதி விக்கெட்டும் பறிபோய், இரண்டாம் இன்னிங்ஸ் 337 ஓட்டங்களுடன் நிறைவுக்கு வந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த தினேஷ் சந்திமால் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 94 ஓட்டங்களை எடுத்திருந்தார். இதேநேரம் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் மொஹமட் நவாஸ் 5 விக்கெட்டுக்களையும், யாசிர் சாஹ் 3 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டாம் இன்னிங்ஸ்  துடுப்பாட்டத்தை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 342 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த வெற்றி இலக்கினை அடைவதற்கு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த பாகிஸ்தான் அணிக்கு இமாம்-உல்-ஹக் மற்றும் அப்துல்லா சபீக் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தினை வழங்கினர். இருவரின் சிறந்த ஆரம்பத்துடன் பாகிஸ்தான் நான்காம் நாளின் மதிய போசணத்தினை விக்கெட் இழப்புக்கள் எதுவுமின்றி 87 ஓட்டங்களுடன் அடைந்தது.

தொடர்ந்து மதிய போசணத்தின் பின்னர் ரமேஸ் மெண்டிஸின் பந்துவீச்சில் நிரோஷன் டிக்வெல்லவின் அட்டகாசமான ஸ்டம்பிங் மூலமாக பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டாக இமாம்-உல்-ஹக் 35 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.

பாகிஸ்தான் தொடரிலிருந்து பெதும் நிஸ்ஸங்க நீக்கம்!

இதன் பின்னர் புதிய துடுப்பாட்டவீரராக வந்த அஷார் அலியும் தனது விக்கெட்டினை 06 ஓட்டங்கள் பெற்றவாறு பிரபாத் ஜயசூரியவிடம் பறிகொடுத்தார். எனினும் புதிய வீரராக களம் நுழைந்த பாபர் அசாம், ஆட்டமிழக்காது இருந்த அப்துல்லா சபீக் உடன் இணைந்து நிதானமான முறையில் அணியினை கட்டியெழுப்பினார். இரண்டு வீரர்களும் நான்காம் நாளின் தேநீர் இடைவேளையினை வெற்றிகரமாக தாண்டியதோடு, இதில் அப்துல்லா சபீக் தன்னுடைய இரண்டாவது டெஸ்ட் சதத்தினையும் பூர்த்தி செய்தார். அத்துடன் பாபர் அசாமும் டெஸ்ட் போட்டிகளில் தான் பெற்ற 22ஆவது அரைச்சதத்தோடு பாகிஸ்தான் தரப்பினை பலப்படுத்தினார்.

தொடர்ந்து பாபர் அசாமின் விக்கெட் நான்காம் நாள் ஆட்ட நிறைவின் போது பிரபாத் ஜயசூரிய மூலம் கைப்பற்றப்பட்டது. அதன்படி, போல்ட் செய்யப்பட்ட பாபர் அசாம் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்களை எடுத்ததோடு, அவர் பாகிஸ்தான் அணியின் மூன்றாம் விக்கெட்டுக்காக 101 ஓட்டங்களையும் இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்தார்.

இதனையடுத்து நான்காம் நாள் ஆட்டநிறைவில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 222 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.

பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு இன்னும் 120 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ஆட்டமிழக்காது நிற்கும் அப்துல்லா சபீக் 112 ஓட்டங்களுடனும், மொஹமட் ரிஸ்வான் 7 ஓட்டங்களுடனும் இருந்து நம்பிக்கை தருகின்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் பிரபாத் ஜயசூரிய 2 விக்கெட்டுக்களையும், ரமேஷ் மெண்டிஸ் ஒரு விக்கெட்டினையும் சாய்த்திருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

Result


Sri Lanka
222/10 (66.1) & 337/10 (100)

Pakistan
218/10 (90.5) & 344/6 (127.2)

Batsmen R B 4s 6s SR
Oshada Fernando c Mohammad Rizwan b Hasan Ali 35 49 5 0 71.43
Dimuth Karunaratne b Shaheen Shah Afridi 1 7 0 0 14.29
Kusal Mendis c Mohammad Rizwan b Yasir Shah 21 35 3 0 60.00
Angelo Mathews c Naseem Shah b Yasir Shah 0 15 0 0 0.00
Dinesh Chandimal c Yasir Shah b Hasan Ali 76 115 10 1 66.09
Dhananjaya de Silva b Shaheen Shah Afridi 14 28 2 0 50.00
Niroshan Dickwella c Agha Salman b Shaheen Shah Afridi 4 4 1 0 100.00
Ramesh Mendis c Mohammad Rizwan b Naseem Shah 11 41 1 0 26.83
Prabath Jayasuriya lbw b Mohammad Nawaz 3 9 0 0 33.33
Maheesh Theekshana c Mohammad Rizwan b Shaheen Shah Afridi 38 65 4 1 58.46
Kasun Rajitha not out 12 32 1 0 37.50


Extras 7 (b 1 , lb 3 , nb 3, w 0, pen 0)
Total 222/10 (66.1 Overs, RR: 3.36)
Bowling O M R W Econ
Shaheen Shah Afridi 14.1 3 58 4 4.11
Hasan Ali 12 2 23 2 1.92
Naseem Shah 13 0 53 1 4.08
Yasir Shah 21 4 66 2 3.14
Mohammad Nawaz 6 2 18 1 3.00
Batsmen R B 4s 6s SR
Abdullah Shafique lbw b Prabath Jayasuriya 13 47 2 0 27.66
Imam-ul-Haq lbw b Kasun Rajitha 2 16 0 0 12.50
Azhar Ali lbw b Prabath Jayasuriya 3 41 0 0 7.32
Babar Azam lbw b Maheesh Theekshana 119 244 11 2 48.77
Mohammad Rizwan c Niroshan Dickwella b Ramesh Mendis 19 35 3 0 54.29
Agha Salman lbw b Prabath Jayasuriya 5 15 1 0 33.33
Mohammad Nawaz c Nuwanidu Fernando b Prabath Jayasuriya 5 18 0 0 27.78
Shaheen Shah Afridi lbw b Prabath Jayasuriya 0 1 0 0 0.00
Yasir Shah c Dhananjaya de Silva b Maheesh Theekshana 18 56 1 0 32.14
Hasan Ali c Dinesh Chandimal b Ramesh Mendis 17 21 0 0 80.95
Naseem Shah not out 5 52 1 0 9.62


Extras 12 (b 5 , lb 1 , nb 1, w 5, pen 0)
Total 218/10 (90.5 Overs, RR: 2.4)
Bowling O M R W Econ
Kasun Rajitha 11 2 42 1 3.82
Maheesh Theekshana 25.5 6 68 2 2.67
Prabath Jayasuriya 39 10 82 5 2.10
Ramesh Mendis 13 2 18 2 1.38
Dhananjaya de Silva 2 0 2 0 1.00
Batsmen R B 4s 6s SR
Oshada Fernando c Babar Azam b Yasir Shah 64 125 6 1 51.20
Dimuth Karunaratne lbw b Mohammad Nawaz 16 29 2 0 55.17
Kasun Rajitha lbw b Mohammad Nawaz 7 12 1 0 58.33
Kusal Mendis b Yasir Shah 76 126 9 0 60.32
Angelo Mathews c Babar Azam b Mohammad Nawaz 9 25 1 0 36.00
Dinesh Chandimal not out 94 139 5 2 67.63
Dhananjaya de Silva b Yasir Shah 20 20 2 1 100.00
Niroshan Dickwella b Mohammad Nawaz 12 11 2 0 109.09
Ramesh Mendis b Mohammad Nawaz 22 32 2 0 68.75
Maheesh Theekshana c Mohammad Rizwan b Mohammad Hasnain 11 57 0 0 19.30
Prabath Jayasuriya b Naseem Shah 4 25 1 0 16.00


Extras 2 (b 0 , lb 1 , nb 1, w 0, pen 0)
Total 337/10 (100 Overs, RR: 3.37)
Bowling O M R W Econ
Shaheen Shah Afridi 7 2 21 0 3.00
Mohammad Nawaz 28 2 88 5 3.14
Agha Salman 16 1 53 0 3.31
Yasir Shah 29 2 122 3 4.21
Hasan Ali 12 3 19 1 1.58
Babar Azam 1 0 9 0 9.00
Naseem Shah 7 0 24 1 3.43


Batsmen R B 4s 6s SR
Abdullah Shafique not out 160 408 7 1 39.22
Imam-ul-Haq st Niroshan Dickwella b Ramesh Mendis 35 73 3 0 47.95
Azhar Ali c Dhananjaya de Silva b Prabath Jayasuriya 6 32 0 0 18.75
Babar Azam b Prabath Jayasuriya 55 104 4 1 52.88
Mohammad Rizwan lbw b Prabath Jayasuriya 40 74 2 0 54.05
Agha Salman c Niroshan Dickwella b Prabath Jayasuriya 12 35 1 0 34.29
Hasan Ali c Maheesh Theekshana b Dhananjaya de Silva 5 4 1 0 125.00
Mohammad Nawaz not out 19 34 1 0 55.88


Extras 12 (b 5 , lb 7 , nb 0, w 0, pen 0)
Total 344/6 (127.2 Overs, RR: 2.7)
Bowling O M R W Econ
Kasun Rajitha 9 2 18 0 2.00
Prabath Jayasuriya 56.2 10 133 4 2.37
Ramesh Mendis 33 0 102 1 3.09
Maheesh Theekshana 14 2 44 0 3.14
Dhananjaya de Silva 15 1 33 1 2.20



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<