சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில், பாபர் அசாமின் போராட்டத்திற்கு மத்தியில் இலங்கை கிரிக்கெட் அணி தமது சுழல்பந்துவீச்சாளர்கள் மூலம் வலுவான நிலையினை அடைந்திருக்கின்றது.
>> முதல் நாளில் அபாரம் காட்டிய பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள்
நேற்று (17) காலியில் ஆரம்பித்த இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை நிறைவு செய்த இலங்கை கிரிக்கெட் அணி 222 ஓட்டங்களை எடுத்திருந்தது. இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடத் தொடங்கிய பாகிஸ்தான் அணி 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்திருந்த நிலையில் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. களத்தில் அஷார் அலி 3 ஓட்டங்களுடனும் பாபர் அசாம் ஒரு ஓட்டத்துடனும் காணப்பட்டிருந்தனர்.
இன்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையின் காரணமாக சற்று தாமதித்தே தொடங்கியது. பின்னர் தொடர்ந்த போட்டியில், பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டாக அஷார் அலி மாறினார். அதன்படி இன்றைய நாளில் ஓட்டங்கள் எதனையும் பெறாத அஷார் அலி பிரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சில் வெறும் 03 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். அஷார் அலியின் பின்னர் மொஹமட் ரிஸ்வான் நான்காம் விக்கெட் இணைப்பாட்டம் ஒன்றினை பெறுவதற்காக சிறந்த அடித்தளம் ஒன்றினை இட்ட போதும் அவரின் விக்கெட் ரமேஷ் மெண்டிஸின் பந்துவீச்சில் பறிபோனது. விக்கெட்காப்பாளர் நிரோஷன் டிக்வெல்லவினால் ஸ்டம்ப் செய்யப்பட்ட மொஹமட் ரிஸ்வான் 19 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
ரிஸ்வானின் பின்னர் புதிய துடுப்பாட்டவீரர்களாக வந்த அகா சல்மான் (5), மொஹமட் நவாஸ் (5) ஆகியோர் பிரபாத் ஜயசூரியவின் அபார பந்துவீச்சில் தமது விக்கெட்டுக்களை பறிகொடுக்க, சஹீன் அப்ரிடியும் தனது விக்கெட்டினை ஓட்டம் எதுவும் இன்றி பறிகொடுத்தார். இதனால், பாகிஸ்தான் அணி இரண்டாம் நாளின் மதிய போசணத்திற்கு முன்னதாக 85 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
எனினும் பாபர் அசாம் தனது பொறுமையான ஆட்டத்தோடு அணியினை மேலதிக விக்கெட்டுக்கள் எதுவும் இன்றி இரண்டாம் நாளின் மதிய போசணம் வரை கொண்டு சென்றார். இரண்டாம் நாளின் மதிய போசணத்திற்குப் பின்னர் இன்னும் இரண்டு விக்கெட்டுக்களைப் பறிகொடுத்த பாகிஸ்தான் அணி 148 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்து மிகவும் இக்கட்டான நிலைக்குச் சென்றது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் இறுதி விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த பாபர் அசாம் – நஸீம் சாஹ் ஜோடி மிகவும் பொறுமையான முறையில் துடுப்பாடி இரண்டாம் நாளின் தேநீர் இடைவேளையினையும் கடந்தனர்.
>> கொழும்பிலிருந்து காலிக்கு மாற்றப்படும் 2வது டெஸ்ட் போட்டி!
தொடர்ந்து இந்த ஜோடி பாபர் அசாமின் 7ஆவது டெஸ்ட் சதத்தோடு இறுதி விக்கெட்டுக்காக 70 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில், பாகிஸ்தான் அணி 90.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து முதல் இன்னிங்ஸிற்காக 218 ஓட்டங்களை எடுத்தது. அத்தோடு பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டிகளில் காலி மைதானத்தில் அணியொன்று இறுதி விக்கெட்டுக்காக பெற்ற அதிகூடிய இணைப்பாட்டத்தினையும் பதிவு செய்தது.
பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் இறுதி விக்கெட்டாக மகீஷ் தீக்ஷனவின் பந்துவீச்சில் மாறிய பாபர் அசாம் 2 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 119 ஓட்டங்களை பெற்றிருந்தார். மறுமுனையில் நஸீம் சாஹ் 5 ஓட்டங்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 5 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்ததோடு, மகீஷ் தீக்ஷன மற்றும் ரமேஸ் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து 04 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி, போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 11.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 36 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது. களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் ஓசத பெர்னாண்டோ 17 ஓட்டங்களுடனும், கசுன் ராஜித 3 ஓட்டங்களுடனும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் தற்போது பாகிஸ்தானை விட 40 ஓட்டங்களும் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் மொஹமட் நவாஸ் ஒரு விக்கெட்டினை சாய்த்திருந்தார்.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Oshada Fernando | c Mohammad Rizwan b Hasan Ali | 35 | 49 | 5 | 0 | 71.43 |
Dimuth Karunaratne | b Shaheen Shah Afridi | 1 | 7 | 0 | 0 | 14.29 |
Kusal Mendis | c Mohammad Rizwan b Yasir Shah | 21 | 35 | 3 | 0 | 60.00 |
Angelo Mathews | c Naseem Shah b Yasir Shah | 0 | 15 | 0 | 0 | 0.00 |
Dinesh Chandimal | c Yasir Shah b Hasan Ali | 76 | 115 | 10 | 1 | 66.09 |
Dhananjaya de Silva | b Shaheen Shah Afridi | 14 | 28 | 2 | 0 | 50.00 |
Niroshan Dickwella | c Agha Salman b Shaheen Shah Afridi | 4 | 4 | 1 | 0 | 100.00 |
Ramesh Mendis | c Mohammad Rizwan b Naseem Shah | 11 | 41 | 1 | 0 | 26.83 |
Prabath Jayasuriya | lbw b Mohammad Nawaz | 3 | 9 | 0 | 0 | 33.33 |
Maheesh Theekshana | c Mohammad Rizwan b Shaheen Shah Afridi | 38 | 65 | 4 | 1 | 58.46 |
Kasun Rajitha | not out | 12 | 32 | 1 | 0 | 37.50 |
Extras | 7 (b 1 , lb 3 , nb 3, w 0, pen 0) |
Total | 222/10 (66.1 Overs, RR: 3.36) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Shaheen Shah Afridi | 14.1 | 3 | 58 | 4 | 4.11 | |
Hasan Ali | 12 | 2 | 23 | 2 | 1.92 | |
Naseem Shah | 13 | 0 | 53 | 1 | 4.08 | |
Yasir Shah | 21 | 4 | 66 | 2 | 3.14 | |
Mohammad Nawaz | 6 | 2 | 18 | 1 | 3.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Abdullah Shafique | lbw b Prabath Jayasuriya | 13 | 47 | 2 | 0 | 27.66 |
Imam-ul-Haq | lbw b Kasun Rajitha | 2 | 16 | 0 | 0 | 12.50 |
Azhar Ali | lbw b Prabath Jayasuriya | 3 | 41 | 0 | 0 | 7.32 |
Babar Azam | lbw b Maheesh Theekshana | 119 | 244 | 11 | 2 | 48.77 |
Mohammad Rizwan | c Niroshan Dickwella b Ramesh Mendis | 19 | 35 | 3 | 0 | 54.29 |
Agha Salman | lbw b Prabath Jayasuriya | 5 | 15 | 1 | 0 | 33.33 |
Mohammad Nawaz | c Nuwanidu Fernando b Prabath Jayasuriya | 5 | 18 | 0 | 0 | 27.78 |
Shaheen Shah Afridi | lbw b Prabath Jayasuriya | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Yasir Shah | c Dhananjaya de Silva b Maheesh Theekshana | 18 | 56 | 1 | 0 | 32.14 |
Hasan Ali | c Dinesh Chandimal b Ramesh Mendis | 17 | 21 | 0 | 0 | 80.95 |
Naseem Shah | not out | 5 | 52 | 1 | 0 | 9.62 |
Extras | 12 (b 5 , lb 1 , nb 1, w 5, pen 0) |
Total | 218/10 (90.5 Overs, RR: 2.4) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kasun Rajitha | 11 | 2 | 42 | 1 | 3.82 | |
Maheesh Theekshana | 25.5 | 6 | 68 | 2 | 2.67 | |
Prabath Jayasuriya | 39 | 10 | 82 | 5 | 2.10 | |
Ramesh Mendis | 13 | 2 | 18 | 2 | 1.38 | |
Dhananjaya de Silva | 2 | 0 | 2 | 0 | 1.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Oshada Fernando | c Babar Azam b Yasir Shah | 64 | 125 | 6 | 1 | 51.20 |
Dimuth Karunaratne | lbw b Mohammad Nawaz | 16 | 29 | 2 | 0 | 55.17 |
Kasun Rajitha | lbw b Mohammad Nawaz | 7 | 12 | 1 | 0 | 58.33 |
Kusal Mendis | b Yasir Shah | 76 | 126 | 9 | 0 | 60.32 |
Angelo Mathews | c Babar Azam b Mohammad Nawaz | 9 | 25 | 1 | 0 | 36.00 |
Dinesh Chandimal | not out | 94 | 139 | 5 | 2 | 67.63 |
Dhananjaya de Silva | b Yasir Shah | 20 | 20 | 2 | 1 | 100.00 |
Niroshan Dickwella | b Mohammad Nawaz | 12 | 11 | 2 | 0 | 109.09 |
Ramesh Mendis | b Mohammad Nawaz | 22 | 32 | 2 | 0 | 68.75 |
Maheesh Theekshana | c Mohammad Rizwan b Mohammad Hasnain | 11 | 57 | 0 | 0 | 19.30 |
Prabath Jayasuriya | b Naseem Shah | 4 | 25 | 1 | 0 | 16.00 |
Extras | 2 (b 0 , lb 1 , nb 1, w 0, pen 0) |
Total | 337/10 (100 Overs, RR: 3.37) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Shaheen Shah Afridi | 7 | 2 | 21 | 0 | 3.00 | |
Mohammad Nawaz | 28 | 2 | 88 | 5 | 3.14 | |
Agha Salman | 16 | 1 | 53 | 0 | 3.31 | |
Yasir Shah | 29 | 2 | 122 | 3 | 4.21 | |
Hasan Ali | 12 | 3 | 19 | 1 | 1.58 | |
Babar Azam | 1 | 0 | 9 | 0 | 9.00 | |
Naseem Shah | 7 | 0 | 24 | 1 | 3.43 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Abdullah Shafique | not out | 160 | 408 | 7 | 1 | 39.22 |
Imam-ul-Haq | st Niroshan Dickwella b Ramesh Mendis | 35 | 73 | 3 | 0 | 47.95 |
Azhar Ali | c Dhananjaya de Silva b Prabath Jayasuriya | 6 | 32 | 0 | 0 | 18.75 |
Babar Azam | b Prabath Jayasuriya | 55 | 104 | 4 | 1 | 52.88 |
Mohammad Rizwan | lbw b Prabath Jayasuriya | 40 | 74 | 2 | 0 | 54.05 |
Agha Salman | c Niroshan Dickwella b Prabath Jayasuriya | 12 | 35 | 1 | 0 | 34.29 |
Hasan Ali | c Maheesh Theekshana b Dhananjaya de Silva | 5 | 4 | 1 | 0 | 125.00 |
Mohammad Nawaz | not out | 19 | 34 | 1 | 0 | 55.88 |
Extras | 12 (b 5 , lb 7 , nb 0, w 0, pen 0) |
Total | 344/6 (127.2 Overs, RR: 2.7) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kasun Rajitha | 9 | 2 | 18 | 0 | 2.00 | |
Prabath Jayasuriya | 56.2 | 10 | 133 | 4 | 2.37 | |
Ramesh Mendis | 33 | 0 | 102 | 1 | 3.09 | |
Maheesh Theekshana | 14 | 2 | 44 | 0 | 3.14 | |
Dhananjaya de Silva | 15 | 1 | 33 | 1 | 2.20 |
போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<