அண்மையில் நிறைவுக்கு வந்த சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய 12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இன்று கிரிக்கெட் உலகின் சம்பியன்களாக வலம்வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது, 2020ஆம் ஆண்டில் தங்களது சொந்த மண்ணில் விளையாடவுள்ள கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள தொடர்களுக்கான அட்டவணையின் படி இங்கிலாந்து அணியானது, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 6 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 6 டி20 சர்வதேச போட்டிகள் போன்ற மூவகையான கிரிக்கெட் தொடர்களில் மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுடன் விளையாடவுள்ளது.
இலங்கையுடனான ஒருநாள் தொடரை தக்கவைத்த பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணி
சுற்றுலா இலங்கை வளர்ந்துவரும் அணிக்கும்……
மேற்கிந்திய தீவுகள் எதிர் இங்கிலாந்து.
இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்ற மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியானது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மேலும் மூன்று போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது தொடராக இது அமைந்துள்ளது.
எதிர்வரும் 2020 ஜூன் மாத முதல் பகுதியில் ஆரம்பமாகின்ற குறித்த டெஸ்ட் தொடரின் மூன்று போட்டிகளும் இங்கிலாந்தின் மூன்று வெவ்வேறு மைதானங்களில் நடைபெறவுள்ளன. குறித்த தொடர் ஜூன் 29ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகிறது.
தொடர் அட்டவணை
- 4 முதல் 8 ஜூன் – முதலாவது டெஸ்ட் போட்டி – ஓவல்
- 12 முதல் 16 ஜூன் – இரண்டாவது டெஸ்ட் போட்டி – எட்கப்ஸ்டன்
- 25 முதல் 29 ஜூன் – மூன்றாவது டெஸ்ட் போட்டி – லோட்ஸ்
அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை நிறைவு செய்கின்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது அடுத்த நான்கு நாட்களுக்குள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் சர்வதேச தொடர்கள் போன்ற இரு தொடர்களில் ஆடவுள்ளது.
இங்கிலாந்துக்கு குறுகிய கால சுற்றுப்பயணம் மேற்கொள்கின்ற அவுஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாடவுள்ளது. தற்சமயம் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் நிறைவுக்கு வந்தவுடன் இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது வெள்ளை பந்து தொடராக இது அமைந்திருக்கின்றது.
ஜூலை மாத ஆரம்பத்தில் ஆரம்பமாகின்ற குறித்த தொடரானது அம்மாத நடுப்பகுதியிலேயே நிறைவுக்கு வருகிறது. மேலும் அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெறவுள்ள 6 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் 6 வெவ்வேறு மைதானங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரு தொடர்களுக்குமான அட்டவணை
- 3 ஜூலை – முதலாவது டி20 சர்வதேச போட்டி – எட்கப்ஸ்டன்
- 5 ஜூலை – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி – ஓல்ட் ட்ரப்பெட்
- 7 ஜூலை – மூன்றாவது டி20 சர்வதேச போட்டி – ஹெடிங்லி
- 11 ஜூலை – முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி – லோட்ஸ்
- 14 ஜூலை – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி – ஏஜஸ் போல்
- 16 ஜூலை – மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி – பிரிஸ்டெல்
பாகிஸ்தான் எதிர் இங்கிலாந்து
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதம் இங்கிலாந்தில் தங்கவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரின் பின்னர் டி20 சர்வதேச தொடரிலும் ஆடவுள்ளது.
ரஷீட் கான் தலைமையில் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது ……..
ஜூலை மாத இறுதியில் ஆரம்பமாகின்ற பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இருதரப்பு தொடர் செப்டம்பர் மாத ஆரம்பம் வரை மூன்று டி20 சர்வதேச போட்டிகளிலுடன் நடைபெறவுள்ளது.
இரு தொடர்களுக்குமான அட்டவணை
- 30 ஜூலை முதல் 3 ஆகஸ்ட் – முதலாவது டெஸ்ட் போட்டி – லோட்ஸ்
- 7 முதல் 11 ஆகஸ்ட் – இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஓல்ட் ட்ரப்பெட்
- 20 முதல் 24 ஆகஸ்ட் – மூன்றாவது டெஸ்ட் போட்டி – ட்ரென்ட் ப்ரிட்ச்ட்
- 29 ஆகஸ்ட் – முதலாவது டி20 சர்வதேச போட்டி – ஹெடிங்லி
- 31 ஆகஸ்ட் – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி – காடிப்
- 2 செப்டம்பர் – மூன்றாவது டி20 சர்வதேச போட்டி – ஏஜஸ் போல்
அயர்லாந்து எதிர் இங்கிலாந்து
உலக சம்பியன்களான இங்கிலாந்தின் அண்டை நாடான அயர்லாந்து நாட்டின் கிரிக்கெட் அணியானது இங்கிலாந்தின் அழைப்பை ஏற்று இங்கிலாந்தின் பாகிஸ்தானுடனான டி20 சர்வதேச தொடரின் பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாடவுள்ளது.
தொடர் அட்டவணை
- 10 செப்டம்பர் – முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி – ட்ரென்ட் ப்ரிட்ச்ட்
- 12 செப்டம்பர் – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி – எட்கப்ஸ்டன்
- 15 செப்டம்பர் – மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி – ஓவல்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<