பாகிஸ்தான் அணி இந்த மாதம் இறுதியில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் பாகிஸ்தான் அணி கடுமையாகத் தடுமாறும் என்று முன்னாள் வீரர் சலிம் மாலிக் கூறியுள்ளார்.
இலங்கை முடிந்து விட்டது, பாகிஸ்தானைக் கொண்டு வாருங்கள் – குக்
பாகிஸ்தான் அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 283 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சலிம் மாலிக் இங்கிலாந்து மண்ணில் 3 டெஸ்ட் சதம் மற்றும் ஐந்து அரைச்சதங்களைப் பெற்றுள்ளார். இவர் தற்போது இங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் கடுமையாகத் தடுமாறும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சலிம் மாலிக் கூறுகையில் ‘‘பாரம்பரியமாக ஆசியாவின் அனைத்து அணிகளும் இங்கிலாந்து சூழ்நிலை மற்றும் ஆடுகளத்தில் தடுமாறும். பாகிஸ்தான் அணிக்கு கடந்த சில வருடங்களாக என்ன பிரச்சினை என்றால், அதிக அளவில் “பிலெட் பிட்ச்” ஆன ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆடுகளத்தில்தான் விளையாடியுள்ளனர்.
இந்த ஆடுகளத்தில் பந்து ஸ்விங் ஆகாது. வேகமாக செல்லாது. அத்துடன் சுழற்பந்துக்கு அதிக அளவு ஒத்துழைக்காது. அதனால் நமது வீரர்கள் இங்கிலாந்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ள மிகவும் தடுமாறுவார்கள் என்று நினைக்கிறேன்.
இங்கிலாந்து ஆடுகளத்தில் முதலில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை எதிர்த்து விளையாடுவது மிகக்கடினம். ஸ்விங், பவுன்ஸ் பந்துக்கு ஒத்துழைக்கும் ஆடுகளத்தில் உங்களை நிற்க விடமாட்டார்கள். பின்னர் ஆடுகளம் சற்று ஒத்துழைக்கும்போது நிலைத்து நின்று ஓட்டங்களை சேர்க்க முயற்சிக்க வேண்டும்” என்றார்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்