பிரித்தானியாவின் Isle of Man என்ற பகுதியில் நிறுவப்பட்டுள்ள நிறுவனமொன்றுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் இடையில் காணப்படுகின்ற சட்டரீதியான முரண்பாடொன்று காரணமாக அந்த நிறுவனமானது, தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியிடம் உள்ள கிரிக்கெட் உபகரணங்களை பறிமுதல் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உலகக் கிண்ண சுப்பர் லீக் தொடரை அறிமுகப்படுத்தும் ஐசிசி
பாகிஸ்தானி டெய்லி பத்திரிகை வெளியிட்டுள்ள குறித்த செய்தியில், Broadsheet LLC என்ற நிறுவனம் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், நீண்ட காலமாக கடனை திருப்பிச் செலுத்த தவறிய காரணத்தால் பாகிஸ்தான் அணி வீர்ரகளின் கிரிக்கெட் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்யப்போவதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையானது, பிரித்தானியாவில் உள்ள தமது உயர்தானிகராலயத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன், இதுவரை அவ்வாறான எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் சட்டப் பிரிவு அதிகாரிகள் வெளியிட்டிருந்த அறிக்கையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது அந்நாட்டு கிரிக்கெட் சபையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு அணியொன்றே தவிர, அந்த நாட்டின் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைப்பல்ல என தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அணியில் நிராகரிப்பு ஏமாற்றம் அளிக்கிறது – இம்ரான் தாஹிர் வேதனை
எனவே, பாகிஸ்தான் அரசாங்கத்துடன் உள்ள முரண்பாட்டுக்கும், பாகிஸ்தான் அணிக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டிருந்த அறிக்கையில்,
“பாகிஸ்தான் கிரிக்கெட் சபையானது, குறித்த நிறுவனத்துக்கும், பாகிஸ்தான் அரசாங்கத்துக்கும் இடையில் உள்ள எந்தவொரு கொடுக்கல் வாங்கல்களுடனும் தொடர்புபடவில்லை.
குறிப்பாக, 1962இன் விளையாட்டு அபிவிருத்தி மற்றும் கட்டுப்பாட்டு சட்டவிதிமுறைகளின் கீழ் கிரிக்கெட் விளையாட்டை கட்டுப்படுத்தல், முகாமைத்துவம் செய்தல் மற்றும் பிரச்சாரம் செய்தல் உள்ளிட்ட நோக்கங்களுக்காகவே பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எனவே கிரிக்கெட் சபையின் அரசியலமைப்புக்கு அமைய சுயாதீனமாக செயற்படுகின்ற நிறுவனம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூனுஸ் கான் கழுத்தில் கத்தியை வைத்ததாக கூறியதுக்கு மன்னிப்பு கேட்ட கிரான்ட் பிளவர்
அத்துடன், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையானது அந்நாட்டு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனமாக அல்லாமல், ஒரு சுயாதீன அமைப்பாக செயற்பட்டு வருகின்றது. எமக்கான வருமானத்தை நாங்கள் சுயமாகத் தான் பெற்றுக் கொள்கின்றோம். மத்திய அரசாங்கம் அல்லது பிராந்திய அரசாங்கத்தினால் எந்தவொரு நிதி உதவியினையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பெற்றுக் கொள்வதில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.
2000ஆம் ஆண்டின் முற்பகுதியில் பாகிஸ்தானின் அப்போதைய ஜனாதிபதி பர்விஸ் முஷர்ரப், பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான சொத்துக்கள் வெளிநாடுகளில் இருப்பதை கண்டறியும் நோக்கில் Broadsheet LLC என்ற நிறுவனத்தை குத்தகைக்கு எடுத்தார்.
பாகிஸ்தானின் தேசிய பொறுப்புக்கூறல் பணியகம் (Accountability Bureau), குறித்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தாலும், அந்த ஒப்பந்தமானது 2003இல் இரத்து செய்யப்பட்டது.
பாகிஸ்தான் அணியில் இணையவுள்ள ஆமிர், சொஹைப் மலிக்
இதன்காரணமாக, குறித்த நிறுவனத்துக்கும், பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்ந்து சர்ச்சை நிலவி வருவதுடன், 2018இல் லண்டனில் உள்ள சர்வதேச சமாதான மற்றும் நடுவர் தீர்ப்பாயம் (nternational arbitration court), குறித்த நிறுவனத்துக்கு சார்பாக வழக்கு முடிவை வழங்கியது.
இதன்படி, பாகிஸ்தான் அரசாங்கம் 33 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக Broadsheet LLC நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<