ஆகஸ்ட் மாதம் நடக்கவிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து பயணத்திற்கு அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் அனுமதி அளித்துள்ளார்.
உலகெங்கிலும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதம் இறுதியிலிருந்து அனைத்து நாடுகளிலும் நடக்கவிருந்த கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டு, வீரர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. பயிற்சிக்கு கூட அவர்கள் வெளி வருவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு
தற்போது பல நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருவதால் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் இங்கிலாந்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக வீரர்கள் பயிற்சிக்கு திரும்பினர். ஜூலை மாதம் 8ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கிறது. அந்த தொடர் முடிவுற்ற பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை தமது சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி விபரம் அண்மையில் வெளியிட்டது. மேலும், பாகிஸ்தானில் கொரோனா தாக்கம் காரணமாக, வெளிநாடு செல்ல தடை இருந்ததால் பிரதமரின் அனுமதிக்காக காத்திருந்தனர்.
இதற்கான அனுமதியைப் பெற இம்ரான் கானை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஈசான் மணி நேரில் சந்தித்து அவரிடம் விளக்கினார்.
கொரோனா விதிகளை மீறிய பாபர் அசாமிற்கு எச்சரிக்கை
அவர் கூறிய விளக்கத்தை ஏற்றுக் கொண்ட இம்ரான் கான், நிச்சயம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து செல்ல வேண்டும். கிரிக்கெட் விளையாட வேண்டும். மக்கள் கிரிக்கெட் பார்க்க ஆர்வமாக உள்ளனர். கொரோனா பரவல் இருந்தாலும் கூட பாதுகாப்பான முறையில் விளையாடலாம் என்று கூறினார்.
அதேசமயம், வீரர்கள், அணி ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்பை முறையாக உறுதி செய்ய வேண்டும். அனைவரின் ஆரோக்கியமும் முக்கியம் என்பதையும் இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஏற்கனவே ஆலோசித்துள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்து தொடரின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டிருந்த அறிக்கையில், கொரோனா முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இங்கிலாந்து தொடரின் போது பாகிஸ்தான் வீரர்கள் தங்களது குடும்பத்தினரை உடன் அழைத்து செல்வதற்கு அனுமதி கிடையாது.
இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய ஆமிர், ஹரிஸ் சொஹைல்
அதுமட்டுமின்றி, வீரர்கள் தங்களது குடும்பத்தினரை இங்கிலாந்துக்கு வரவழைத்து தனிப்பட்ட முறையில் தங்க வைத்தால் கூட பிரயோசனம் கிடையாது.
ஏனெனில் தொடர் நிறைவடையும் செப்டம்பர் மாதம் வரை ஒட்டுமொத்த அணியினரும் தங்களது குடும்பத்தினருடன் நேரில் உரையாட முடியாது. இதை அவர்களிடம் தெளிவாக விளக்கிக் கூறப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி இந்த மாத இறுதியில் இங்கிலாந்து செல்கிறது. அங்கு 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
சஹீட் அப்ரிடிக்கு கொவிட்-19 தொற்று
மொத்தம் 29 வீரர்கள், 14 அதிகாரிகள் அடங்கிய அணி இங்கிலாந்து சென்றதும் அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதற்கு அடுத்த 3 முதல் 4 வாரங்கள் வரை அங்கு தங்கியிருந்து பயிற்சிகளில் ஈடுபடுவார்கள்.
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் போட்டிகள் நடைபெறும். சமூக விலகலை கடைப்பிடித்து பயிற்சிகளிலும் ஈடுபடுவர். முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அனைவரும் கொரோனா பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுவர்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<