இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கட்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. தொடர்ந்து நான்கு போட்டிகளை வென்று 4-0 என இங்கிலாந்து முன்னிலையில் இருந்தது. நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்று வயிட் வோஷைத் தவிர்த்தது.
இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பு பாகிஸ்தான் 87 புள்ளிகள் பெற்றிருந்தது. இந்தத் தொடரை 1-4 என இழந்ததால் ஒரு புள்ளி சரிந்து 86 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஐ.சி.சி. தரவரிசையை 2001-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதில் இருந்து பாகிஸ்தான் தரவரிசையில் இவ்வளவு மோசமான நிலைமைக்குச் சென்றது கிடையாது. முதன்முறையாக 86 புள்ளிகளைப் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. 9-வது இடத்தில் இருப்பதால் பாகிஸ்தான் அணிக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கிண்ண தொடருக்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் தன்னிச்சையாக உலகக் கிண்ண போட்டிகளுக்குத் தகுதி பெறும். மற்ற அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடிய பின்னரே உலகக் கிண்ண போட்டிகளின் முதன்மை சுற்றுக்குத் தகுதி பெற முடியும்.
தற்போதைய நிலையில் பாகிஸ்தான் 8-வது இடத்தில் இருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியை விட 8 புள்ளிகள் பின் தங்கியுள்ளது. பாகிஸ்தான் அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் சிறப்பாக செயற்பட்டு அதிக அளவு புள்ளிகளைப் பெற்று 8-வது இடத்திற்குள் நுழைந்தால் நேரடியாக உலகக் கிண்ணப் போட்டிகளுக்குத் தகுதி பெறும்.
இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரை 4-1 என அவுஸ்திரேலியா கைப்பற்றியதால் அவுஸ்திரேலியா 124 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 113 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இந்தியா 110 புள்ளிகள் பெற்று 3-வது இடத்திலும், தென்ஆபிரிக்கா 113 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும் உள்ளன.
செப்டம்பர் 4ஆம் திகதி வெளியான ஒருநாள் அணிகளின் தரவரிசை
- அவுஸ்திரேலியா – 124 புள்ளிகள்
- நியூசிலாந்து – 113 புள்ளிகள்
- இந்தியா – 110 புள்ளிகள்
- தென் ஆபிரிக்கா – 110 புள்ளிகள்
- இங்கிலாந்து – 107 புள்ளிகள்
- இலங்கை – 101 புள்ளிகள்
- பங்களாதேஷ் – 98 புள்ளிகள்
- மேற்கிந்திய தீவுகள் – 94 புள்ளிகள்
- பாகிஸ்தான் – 86 புள்ளிகள்
- ஆப்கானிஸ்தான் – 49 புள்ளிகள்
- சிம்பாப்வே – 46 புள்ளிகள்
- அயர்லாந்து – 43 புள்ளிகள்
ஆகஸ்ட் 27ஆம் திகதி வெளியான டி20 அணிகளின் தரவரிசை
- நியூசிலாந்து – 132 புள்ளிகள்
- இந்தியா – 126 புள்ளிகள்
- மேற்கிந்திய தீவுகள் – 125 புள்ளிகள்
- தென் ஆபிரிக்கா – 119 புள்ளிகள்
- இங்கிலாந்து – 116 புள்ளிகள்
- அவுஸ்திரேலியா – 110 புள்ளிகள்
- பாகிஸ்தான் – 104 புள்ளிகள்
- இலங்கை – 96 புள்ளிகள்
- ஆப்கானிஸ்தான் – 78 புள்ளிகள்
- பங்களாதேஷ் – 74 புள்ளிகள்
- நெதர்லாந்து – 67 புள்ளிகள்
- சிம்பாப்வே – 62 புள்ளிகள்
- ஸ்காட்லாந்து – 57 புள்ளிகள்
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – 54 புள்ளிகள்
- அயர்லாந்து – 48 புள்ளிகள்
- ஓமான் – 37 புள்ளிகள்
- ஹொங் கொங் – 29 புள்ளிகள்
ஆகஸ்ட் 30ஆம் திகதி வெளியான டெஸ்ட் அணிகளின் தரவரிசை
- பாகிஸ்தான் – 111 புள்ளிகள்
- இந்தியா – 110 புள்ளிகள்
- அவுஸ்திரேலியா – 108 புள்ளிகள்
- இங்கிலாந்து – 108 புள்ளிகள்
- தென் ஆபிரிக்கா – 96 புள்ளிகள்
- இலங்கை – 95 புள்ளிகள்
- நியூசிலாந்து – 95 புள்ளிகள்
- மேற்கிந்திய தீவுகள் – 67 புள்ளிகள்
- பங்களாதேஷ் – 57 புள்ளிகள்
- சிம்பாப்வே – 08 புள்ளிகள்
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்