மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடனான ஒருநாள் போட்டித் தொடரை எதிர்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணியின் தலைமைப் பதவி உட்பட, அணியில் பல அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, அங்கு நான்கு போட்டிகள் கொண்ட T-20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் விளையாடி வருகின்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான T-20 தொடரை 3-1 என்ற அடிப்படையில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. இதன்போது அணியின் புதிய தலைவராக சர்ப்ராஸ் அஹமட் செயற்பட்டிருந்தமை முக்கிய விடயமாகப் பார்க்கப்படுகின்றது.
கோலாகல ஆரம்ப நிகழ்வு, நடப்புச் சம்பியனின் வெற்றி என்பவற்றுடன் ஆரம்பித்த ஐ.பி.எல்
“ஜெய் கோ” என்ற பாடலுடன் ஆரம்பமான பத்தாவது பருவகாலத்திற்கான ஐ.பி.எல் போட்டிகளின்..
இந்நிலையில் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடருக்கும் சர்ப்ராஸ் அஹமட் அணியை தலைமை தாங்கவுள்ளார். இவரது தலைமையின் கீழ் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ள முதல் ஒருநாள் தொடராக இந்த தொடர் அமையவுள்ளமை விஷேட அம்சமாகும்.
2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் அணி நேரடியாக தகுதிபெறுவது கேள்விக்குறியாகியுள்ள நிலையிலேயே இந்த ஒருநாள் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இதன் காரணமாக இந்த தொடர் பாகிஸ்தான் அணிக்கு மிக முக்கிய தொடராக காணப்படுகின்றது. எனவே, அவ்வணி வீரர்கள் கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலேயே விளையாட வேண்டி உள்ளனர்.
பாகிஸ்தான் உள்ளூர் T-20 போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்த கம்ரான் அக்மலுக்கு மிக நீண்ட இடைவேளைக்குப் பின்னர் அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த தொடரில் சிறப்பான முறையில் செயற்பட்டு அணியில் தனக்கான இடத்தினை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவர் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோன்று, உபாதை காரணமாக அண்மைக் காலமாக போட்டிகளில் விளையாடாத பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைட் கான், மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளார்.
பாகிஸ்தான் சுப்பர் லீக் T-20 தொடரின்போது, சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய ஷர்ஜில் கான், காலித் லத்தீப், மொஹமட் இர்பான், நாசிர் ஜம்ஷெட் மற்றும் ஷாசாயிப் ஹசன் ஆகிய 5 வீரர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மந்த கதியில் பந்து வீசிய இலங்கை அணிக்கு அபராதம்
நடைபெற்று முடிந்த இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது T-20 போட்டியில்..
இவ்வாறான ஒரு நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணியினை நேற்றைய தினம் (புதன்கிழமை) அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
மிஸ்பா தலைமையில் விளையாடவுள்ள குறித்த அணியில் 18 வயதான இளம் வீரர் சதாப் கான் இணைக்கப்பட்டுள்ளார்.
சர்ஜில் கான், சொஹைல் கான், சமி அஸ்லம், ரஹாட் அலி, மொஹம்மட் ரிஸ்வான், மொஹம்மட் நவாஸ், இம்ரான் கான் ஆகியோர் இந்த அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அஹமட் சஷாட், சொகைப் கான், ஷான் மசூட், உஸ்மான் சலாஹுட்டின், ஹசன் அலி, மொஹமட் அப்பாஸ் ஆகிய வீரர்கள் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தி வரும் பாகிஸ்தான் அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒருநாள் குழாம்
சர்ப்ராஸ் அஹமட் (தலைவர்), அகமட் சஹ்சாட், ஆசிப் சாகிர், பாபர் அசாம், பாஹிம் அஷ்ரப், பகார் ஸமான், ஹசன் அலி, இமாட் வசீம், ஜுனைட் கான், கம்ரான் அக்மல், மொஹமட் ஆமிர், மொஹமட் அஸ்கர், மொஹமட் ஹபீஸ், சஷாப் கான், சொஹைப் மலிக், வஹாப் ரியாஸ்
டெஸ்ட் குழாம்
மிஸ்பா (தலைவர்), அஹமட் ஷசாட், அசார் அலி, ஷான் மஸூத், பாபர் அசாம், யூனிஸ் கான், அசாத் ஷபிக், சர்ப்ராஸ் அஹ்மட் (விக்கெட் காப்பாளர்), உஸ்மான் சலாஹுட்டின், யசிர் ஷா, சதாப் கான், மொஹம்மட் அஸ்கார், மொஹம்மட் ஆமீர், வஹாப் ரியாஸ், ஹசன் அலி, மொஹம்மட் அப்பாஸ்
>> மேலும் பல செய்திகளுக்கு <<