யூனுஸ், சபீக் சதம், பாகிஸ்தான் முன்னிலையில்

268
pakistan-england-test-day-2-report-scorecard-tamil

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டெஸ்டில் பாகிஸ்தானும், 2-வது, 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன.

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. இதன் படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி தமது முதல் இனிங்ஸில் சகல விக்கட்டுகளையும் இழந்து 328 ஓட்டங்களைப் பெற்றது. இங்கிலாந்து அணி சார்பாக மொயின் அலி 108 ஓட்டங்களையும் அலஸ்டயர் குக் 35 ஓட்டங்களையும், ஜோ ரூட் 26 ஓட்டங்களையும்,ஜொனி  பேர்ஸ்டோ 55 ஓட்டங்களையும், கிறிஸ் வோக்ஸ் 45 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு தரப்பில் சோகைல் கான் 5 விக்கட்டுகளும், வஹாப் ரியாஸ் 3 விக்கட்டுகளும், முகமது அமிர் 2 விக்கட்டுகளும் கைப்பற்றினர்.

பின் தமது முதல் இனிங்ஸிற்காக ஆடிய பாகிஸ்தான் அணி 1ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கட் இழப்பிற்கு 3 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பிறகு தமது ஆட்டத்தை தொடர்ந்த பாக்கிஸ்தான் அணி நேற்றைய 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கட்டுகள் இழப்பிற்கு 340 ஓட்டங்களைப் பெற்று இருந்தது. பாகிஸ்தான் அணி சார்பாக யூனிஸ் கான் ஆட்டம் இழக்காமல் 101 ஓட்டங்களைப் பெற அசாத் ஷபீக் 109 ஓட்டங்களையும் அசார் அலி  49 ஓட்டங்களையும் சர்ப்பராஸ் அஹமத் ஆட்டம் இழக்காமல் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து அணியின் பின் மற்றும் க்றிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் வீழ்த்தினார்கள். தற்போது வரை பாகிஸ்தான் அணி 4 விக்கட்டுகள் கையிருப்பில் இருக்க 12 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

அலெக்ஸ் ஹேல்ஸிற்கு அபராதம் 

இங்கிலாந்துபாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் துடுப்பாட்டம் செய்து கொண்டிருந்தார். அப்போது அமீர் வீசிய பந்தை மிட்விக்கெட் திசையில் அடித்தார். அதை அப்பகுதியில் பீல்டிங் செய்திருந்த யாசீர் ஷா கேட்ச் பிடித்தார்.

பந்து தரையில் பட்டபின் யாசீர் ஷா கேட்ச் பிடித்ததுபோல் தோன்றியது. இதனால் 3-வது நடுவரிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் ஆட்டம் இழந்ததாக தீர்ப்பளித்தார்.

இதனால் விரக்தியடைந்து ஹேல்ஸ் நடுவரை குறித்து தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டே பெவிலியன் திரும்பினார். அவரது நடவடிக்கை .சி.சி.யின் விதிமுறையை மீறியதாக இருந்தது.

இதை ஹேல்ஸ் ஒத்துக்கொண்டார். இதனால் அவருக்குப் போட்டியின் சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

 

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து 328

மொயீன் அலி 108, அலஸ்டயர் குக் 35, ஜோ ரூட் 26, பேர்ஸ்டோ 55, கிறிஸ் வோக்ஸ் 45

சுஹைல் கான் 68/5, வஹாப் ரியாஸ் 93/3, முஹமத் அமீர் 80/2

 

பாகிஸ்தான் 340/6

யூனுஸ் கான் 101*, அசாத் ஷபீக் 109, அசார் அலி 49, சர்ப்பராஸ் அஹமத் 17*

ஸ்டிவன் பின் 71/2, க்றிஸ் வோக்ஸ் 52/2

 

பாகிஸ்தான் அணி  12 ஓட்டங்கள் முன்னிலையில்