லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரில், கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடவிருந்த பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் சொஹைல் தன்வீருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
LPL தொடரில் மாலிங்க இல்லை என்பது உறுதி
LPL தொடர் ஆரம்பமாக இன்னும் ஒரு வாரம் மாத்திரமே எஞ்சியிருக்கும் நிலையில், இந்த தொடரில் பங்கெடுக்கும் சொஹைல் தன்வீர் நேற்று (19) இலங்கை வந்திருந்தார். அந்தவகையில், தன்வீர் இலங்கை வந்து ஒருநாள் கடந்திருக்கும் நிலையில் அவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது.
தற்போது வைரஸ் தொற்றுக்கு ஆளாகிய சொஹைல் தன்வீர் கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு விளையாடுவது சந்தேகமாகியிருக்கும் நிலையில், இது தொடர்பில் அவ்வணியின் இயக்குனரான பர்வீஸ் மஹரூப் ThePapare.com இடம் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
“சொஹைல் தன்வீருக்கு அத்தியவசியமாக இருக்கும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் சுகாதார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.”
சொஹைல் தன்வீர், கொழும்பு கிங்ஸ் அணி வீரர் ரவிந்தர்போல் சிங்கின் பின்னர் LPL தொடரில் விளையாட வந்து கொவிட்-19 தொற்றுக்கு ஆளான இரண்டாவது வெளிநாட்டு வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜப்னா ஸ்டாலியன்ஸின் இணை உரிமையாளராகும் Microsoft Ventures ஸ்தாபகர்
அதேநேரம், வைரஸ் தொற்றுக்கு ஆளான LPL கிரிக்கெட் வீரர்கள் 10 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின் மீண்டும் பரிசோதனைகளுக்கு முகம்கொடுத்து அதில் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர், பயிற்சிகளில் ஈடுபட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
சொஹைல் தன்வீரின் இழப்பு ஒருபக்கம் இருக்க கண்டி டஸ்கர்ஸ் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெயிலும், இந்த ஆண்டுக்கான LPL தொடரில் உபாதை காரணமாக விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<