ராவல்பிண்டியிலிருந்து லாஹூரிற்கு போட்டிகளை மாற்றிய பாகிஸ்தான்

Australia tour of Pakistan 2022

318
AUSvPAK

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20I போட்டிகள் லாஹூரிற்கு மாற்றப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் T20I போட்டிகள் கொண்ட தொடர் ஏற்கனவே, ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

>> தம்புள்ளை அணிக்காக 7 விக்கெட்டுகளை வீழ்த்திய மாலிந்த

இரண்டு கிரிக்கெட் சபைகளின் பேச்சுவார்த்தைகளுக்கு அமைய ஒருநாள் மற்றும் T20I போட்டிகள் லாஹூரிற்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், போட்டிகள் நடைபெறும் தினத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைகளுக்கு இடையில் இன்று (19) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் T20I போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய குழாம் எதிர்வரும் 24ம் திகதி நேரடியாக லாஹூர் வருகைத்தரவுள்ளதுடன், ஒருநாள் தனிமைப்படுத்தலில் இருந்து பயிற்சிகளை ஆரம்பிக்கும்.

அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ள இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், ஐசிசி சுப்பர் லீக்கிற்கான தொடராக அமையவுள்ளது. இந்த புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி 9வது இடத்திலும், அவுஸ்திரேலிய அணி 7வது இடத்திலும் உள்ளன.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் எதிர்வரும் 29, 31 மற்றும் 3ம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், T20I போட்டி 5ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<