பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸி. அணியுடனான இரண்டாவது டெஸ்டிற்கு முன்னர் இரு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியொன்றில் ஆடவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
>> நியூசிலாந்து T20I குழாத்தில் மீண்டும் கேன் வில்லியம்சன்
தற்போது அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது.
இந்த நிலையில் பேர்த் நகரில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் 360 ஓட்டங்களால் படுதோல்வியினைத் தழுவியதனை அடுத்தே, பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் போதிய பயிற்சியினைப் பெறுவதற்காக இரு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.
அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடும் பயிற்சிப் போட்டியானது மெல்பர்ன் நகரில் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது. பாகிஸ்தான் அணியினை விக்டோரியா XI எதிர்த்து ஆடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதேநேரம் பாகிஸ்தான் அணி இந்த பயிற்சி ஆட்டத்தின் போது தமது அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இந்தப் பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தான் ஆடுவது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அதன் தலைமைப் பயிற்சியாளரான மொஹமட் ஹபீஸ் பாகிஸ்தானின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முன்னர் உள்ளடக்கப்படாத இந்தப் போட்டி, பந்துவீச்சாளர்களுக்கு அதிக பயிற்சியை வழங்கும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
>> MLC T20 தொடர் இரண்டாவது பருவத்திற்கான திகதிகள் அறிவிப்பு
இதேநேரம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியா 1-0 என முன்னிலை பெற்றிருக்க இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இம்மாதம் 26ஆம் திகதி மெல்பர்ன் கிரிக்கெட் அரங்கில் (MCG) ஆரம்பமாகின்றது.
>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<