பாகிஸ்தான் அணியின் இங்கிலாந்து, நியூசிலாந்து தொடர்களுக்கான போட்டி அட்டவணை

440
The Express Tribune

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருக்கும், கிரிக்கெட் தொடர்களுக்கான போட்டி அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

செப்டம்பர் 29 ம் திகதி நான்கு நாள் பயிற்சிப் போட்டியுடன் ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய அணியுடனான தொடர், ஒக்டோபர் 28 ம் திகதிவரை நடைபெறவுள்ளது.

மாலிங்கவுக்கு வித்தியாசமாக வாழ்த்துக் கூறிய சச்சின் டெண்டுல்கர்

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் …

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு செல்லும் அவுஸ்திரேலிய அணி, நான்கு நாள் பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இதன்பின்னர் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஒக்டோபர் 7 ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், 24 ம் திகதி ஆரம்பமாகும் மூன்று T-20 போட்டிகள் கொண்ட தொடருடன் அவுஸ்திரேலிய அணியுடனான தொடர் முடிவுக்கு வருகிறது.  

இதனையடுத்து மூன்று T-20, மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு செல்கிறது. மூன்று T-20 போட்டிகளுடன் ஒக்டோபர் 31ம் திகதி ஆரம்பமாகும் இந்த தொடர், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளுடன் டிசம்பர் 7ம் திகதி நிறைவுக்கு வருகிறது.

அத்துடன், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாடவுள்ள தொடர்களுக்கான போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 12ம் திகதி ஆரம்பிக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர், மூன்று T-20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு நான்கு நாள் போட்டிகளுடன் நவம்பர் 9ம் திகதி நிறைவடைகிறது.

ஆசிய விளையாட்டு விழாவில் கிரிக்கெட் திறன்களை கையாளும் பாகிஸ்தான் பேஸ்போல் அணி

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்று …

பின்னர் நான்கு நாள் போட்டியுடன் ஆரம்பிக்கும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான தொடரில், ஐந்து ஒருநாள் மற்றும் இரண்டு T-20 போட்டிகளில் பாகிஸ்தான் அணி மோதவுள்ளது. இந்த போட்டித் தொடர் நவம்பர் 18ம் திகதி முதல் டிசம்பர் 8ம் திகதிவரை நடைபெறவுள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகள் அனைத்தும்,அபுதாபி மற்றும் டுபாய் சர்வதேச மைதானங்களில் நடைபெறவுள்ளன. முக்கியமாக சார்ஜா மைதானத்தில் போட்டிகள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. அத்துடன் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடும் போட்டிகள் டுபாயில் அமைந்துள்ள ஐசிசி அக்கடமி மைதானம் மற்றும் அபுதாபியில் உள்ள நர்செரி ஓவல் மைதானங்களில் நடைபெறவுள்ளன.

போட்டி அட்டவணை முழு விபரம்

பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

  • நான்கு நாள் பயிற்சிப் போட்டி: செப்டம்பர் 29 – ஒக்டோபர் 2, ஐசிசி அக்கடமி மைதானம்
  • முதல் டெஸ்ட் போட்டி: 07-11 ஒக்டோபர்,டுபாய்
  • இரண்டாவது டெஸ்ட் போட்டி: 16-20, அபுதாபி
  • முதலாவது T-20: 24 ஒக்டோபர்,அபுதாபி
  • இரண்டாவது T-20: 26 ஒக்டோபர், டுபாய்
  • மூன்றாவது T-20: 28 ஒக்டோபர், டுபாய்

பாகிஸ்தான் எதிர் நியூசிலாந்து

  • முதலாவது T-20: 31 ஒக்டோபர், அபுதாபி
  • இரண்டாவது T-20: 02 நவம்பர், டுபாய்
  • மூன்றாவது T-20: 04 நவம்பர், டுபாய்
  • முதலாவது ஒருநாள் போட்டி: 07 நவம்பர், அபுதாபி
  • இரண்டாவது ஒருநாள் போட்டி: 09 நவம்பர், அபுதாபி
  • மூன்றாவது ஒருநாள் போட்டி: 11 நவம்பர், டுபாய்
  • முதல் டெஸ்ட் போட்டி: 16-20 நவம்பர், அபுதாபி
  • இரண்டாவது டெஸ்ட் போட்டி: 24-28 நவம்பர், டுபாய்
  • மூன்றாவது டெஸ்ட் போட்டி: 03-07 அபுதாபி

பாகிஸ்தான் எதிர் நியூசிலாந்து

  • முதலாவது T-20: 12 ஒக்டோபர், ஐசிசி அக்கடமி
  • இரண்டாவது T-20: 15 ஒக்டோபர், ஐசிசி அக்கடமி
  • மூன்றாவது T-20: 17 ஒக்டோபர், ஐசிசி அக்கடமி
  • முதலாவது ஒருநாள் போட்டி: 21 ஒக்டோபர், நர்செரி ஓவல்
  • இரண்டாவது ஒருநாள் போட்டி: 24 ஒக்டோபர், நர்செரி ஓவல்
  • மூன்றாவது ஒருநாள் போட்டி: 26 ஒக்டோபர், நர்செரி ஓவல்
  • முதலாவது நான்கு நாள் போட்டி: ஒக்டோபர் 30 – நவம்பர் 2, ஐசிசி அக்கடமி
  • இரண்டாவது நான்கு நாள் போட்டி: 6-9 நவம்பர், நர்செரி ஓவல்

பாகிஸ்தான் எதிர் இங்கிலாந்து லையன்ஸ்

  • நான்கு நாள் போட்டி: 18-21 நவம்பர், நர்செரி ஓவல்
  • முதலாவது ஒருநாள் போட்டி: 25 நவம்பர், ஐசிசி அக்கடமி
  • இரண்டாவது ஒருநாள் போட்டி: 27 நவம்பர், ஐசிசி அக்கடமி
  • மூன்றாவது ஒருநாள் போட்டி: 30 நவம்பர், நர்செரி ஓவல்
  • நான்காவது ஒருநாள் போட்டி: 02 டிசம்பர், நர்செரி ஓவல்
  • ஐந்தாவது ஒருநாள் போட்டி: 05 டிசம்பர், ஐசிசி அக்கடமி
  • முதலாவது T-20: 7 டிசம்பர், நர்செரி ஓவல்
  • இரண்டாவது T-20: 8 டிசம்பர், நர்செரி ஓவல்