சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியின் முதல் டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட குழாம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் இன்று (04) அறிவிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் சவாலுக்கு மத்தியில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அங்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச ஆகிய இரு தொடர்களில் பங்கேற்கவுள்ளது. இதில் நடைபெறுகின்ற டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு தொடராகவும் அமைந்துள்ளது.
அவுஸ்திரேலிய – மேற்கிந்திய தீவுகள் T20 தொடர் ஒத்திவைப்பு
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை (05) மென்செஸ்டரில் ஆரம்பமாகவுள்ள நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதற்கான குழாமை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் நடைபெறுகின்ற தொடர் என்ற அடிப்படையில் டெஸ்ட் மற்றும் இருபதுக்கு இருபது தொடர்களுக்கும் சேர்த்து மொத்தமாக 29 பேர் கொண்ட கலப்பு குழாம் வெளியிடப்பட்டிருந்தது.
இதிலிருந்து கடந்த 28 ஆம் திகதி டெஸ்ட் தொடருக்கான குழாம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது முதல் டெஸ்ட் போட்டிக்கென தனியாக 16 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவராக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அஸார் அலி செயற்படவுள்ளதுடன், உப தலைவராக அனுபவ துடுப்பாட்ட வீரர் பாபர் அஸாம் செயற்படவுள்ளார்.
விக்கெட் காப்பாளராக குழாமில் இடம்பெற்ற மொஹமட் ரிஸ்வான் மற்றும் முன்னாள் அணித்தலைவர் சர்ப்ராஸ் அஹமட் ஆகிய இருவரும் முதல் டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இருவரில் ஒருவர் மாத்திரம் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இறுதியாக 2018 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடிய நிலையில் மொத்த குழாமில் இடம்பெற்ற வேகப்பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் முதல் டெஸ்ட் போட்டிக்கான குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவை ஆட்டம் காணச் செய்த மெண்டிஸின் மிஷ்ட்ரி!
இதேவேளை டெஸ்ட் அறிமுகம் பெறும் அடிப்படையில் குழாமில் இடம்பெற்றிருந்த காசிப் பாத்தி தொடர்ந்தும் குழாமில் இடம்பெற்றுள்ளார். உள்ளக பயிற்சி போட்டியின் போது உபாதைக்குள்ளான துடுப்பாட்ட வீரர் ஆபித் அலி முதல் டெஸ்ட் போட்டிக்கான குழாமில் இடம்பெற்றுள்ளார். இதில் குறிப்பாக இறுதியாக 2009 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடிய துடுப்பாட்ட வீரர் பவாட் அலாம் குறித்த குழாமில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் குழாம்
அஸார் அலி (அணித்தலைவர்), பாபர் அஸாம் (உபதலைவர்), ஆபித் அலி, அஸாட் சபீக், பவாட் அலாம், இமாம் உல் ஹக், காசிப் பாத்தி, மொஹமட் அப்பாஸ், மொஹமட் றிஸ்வான், நஸீம் ஷாஹ், சர்ப்ராஸ் அஹமட், சதாப் கான், ஷஹீன் அப்ரிடி, ஷான் மஸூத், சுஹைல் கான், யாஸிர் ஷாஹ்
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க