கொழும்பு மற்றும் ரினௌன் கழகங்கள் மீது பக்கீர் அலி அதிருப்தி

603

இலங்கை 23 வயதுக்கு உட்பட்ட தேசிய கால்பந்து அணித் தேர்வு முகாமில் பங்கேற்க கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் ரினௌன் விளையாட்டுக் கழகம் தமது அணி வீரர்களுக்கு அனுமதி அளிக்காதது குறித்து இலங்கை தேசிய ஆடவர் கால்பந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் நிஸாம் பக்கீர் அலி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

பெத்தகான கால்பந்து வளாகத்தில் இன்று (7) ஆரம்பமான பயிற்சி முகாமிற்கு பங்கேற்கும்படி மூன்று முறை சம்பியனான கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் ரினௌன் அணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அந்த அணிகளில் இருந்து எந்த ஒரு வீரரும் பங்கேற்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

ThePapare.com இற்கு பிரேத்தியேகமாக பேட்டி அளித்த நிஸாம் பக்கீர் அலி கூறியதாவது,

”கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் ரினௌன் அணிகளில் இருந்து சில வீரர்கள் (பயிற்சி முகாமிற்காக) வரத் தவறினர். சிலர் மைதானம் அல்லது அதுபோன்றவை தொடர்பில் கேள்வி எழுப்பினர்.

சொனால், சுதீரவின் அபாரத்தால் ஆஸி. இளையோரை வீழ்த்திய இலங்கை

இது தேசிய அணி என்பதால் இந்த வீரர்களை விடுவிப்பதில் கழகங்களிடம் இருந்து நான் ஆதரவை எதிர்பார்க்கிறேன். தேசிய அணி சிறப்பாக செயற்படும்போது அது கழகங்களுக்கும் நல்லது” என்றார்.

கொழும்பு மற்றும் ரினௌன் ஆகிய இரு கழகங்களும் 2018 டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடிக் கொண்டிருப்பதோடு சம்பியன் பட்டத்தை வெல்வதற்கு இரு அணிகளும் கடுமையாக போட்டியிடுகின்றன. டயலொக் சம்பியன்ஸ் லீக்கில் ஆடும் ஏனைய அனைத்து கழகங்களும் வீரர்களை இந்த தேர்வு முகாமில் பங்கேற்க அனுமதித்திருப்பது உறுதியாகிறது. இந்த தேர்வு முகாம் குழுக்களாக நடத்தப்பட வேண்டும்.   

கொழும்பு மற்றும் ரினௌன் இரு கழகங்களிலும் 23 வயதுக்கு உட்பட்ட தேசிய அணியில் இடம்பிடிக்கக் கூடிய திறமையான மற்றும் தகுதி படைத்த வீரர்கள் உள்ளனர்.

கோல் காப்பு பயிற்றுவிப்பாளர் சம்பத் பண்டார இடம்பெறாதது இந்த தேர்வு முகாமில் மற்றொரு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

”(அவர் பணியாற்றும்) இராணுவத்தில் இருந்து அவர் விடுமுறை எடுப்பதில் பிரச்சினை ஒன்று இருப்பதால் எனது கோல்காப்பு பயிற்றுவிப்பாளரும் வரவில்லை. முடியுமான விரைவில் அவர் பங்கு கொள்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்றும் பக்கீர் அலி குறிப்பிட்டார்.

”குறிப்பாக எம்மிடம் உயரமான மற்றும் பலம் கொண்ட இளமையான திறமை படைத்த கோல்காப்பாளர்கள் இருப்பதால் கோல்காப்பு பயிற்றுவிப்பாளர் சம்பத் பண்டார எமக்கு தேவைப்படுகிறார்” என்றும் அவர் கூறினார்.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<