டிவிஷன் – II பாடசாலை கிரிக்கெட் தொடர் அரையிறுதியில் யாழ். மத்தி

265

இந்தப் பருவத்திற்கான 19 வயதின் கீழ்ப்பட்ட டிவிஷன்-II பாடசாலை அணிகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் விளையாட யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி தெரிவாகியுள்ளது.

இலங்கை – ஜிம்பாப்வே போட்டி அட்டவணையில் மாற்றம்

அதன்படி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி Tier B அணிகளுக்கான அரையிறுதி மோதலில் அம்பாலங்கொடை P.De.S. குலரத்ன கல்லூரியினை எதிர்கொள்ளவிருக்கின்றது.

இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்த இந்த தொடரின் அரையிறுதிப் போட்டியானது நாளை (13) சூரியவேவவில் அமைந்திருக்கும் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நடைபெறுகின்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியானது தொடரின் காலிறுதிப் போட்டியில் ஹென்னேகம மத்திய கல்லூரியுடன் மோதவிருந்த போதும் குறிப்பிட்ட காலிறுதிப் போட்டி நடைபெறாமல் போக, முன்னைய போட்டிகளின் சராசரி புள்ளிகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி அரையிறுதி வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றது.

IPL ஏலத்தில் இடம்பெறவுள்ள 8 இலங்கை வீரர்கள்

மறுமுனையில் P.De.S குலரத்ன கல்லூரியானது பாணதுறை ரோயல் கல்லூரி அணியுடன் விளையாடவிருந்த காலிறுதிப் போட்டி கைவிடப்பட்டு அவ்வணியும் முன்னைய சுற்றுக்களின் புள்ளிகளின் அடிப்படையில் காலிறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தொடரின் அரையிறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி நிசாந்தன் அஜய் மூலமும், P.De.S குலரத்ன கல்லூரி அணி ரவிஷான் நெத்சார மூலமும் வழிநடாத்தப்படவிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<