LPL தொடருக்காக 500 இற்கும் அதிகமான வீரர்கள் பதிவு

Lanka Premier League 2024

171

இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்காக 500 இற்கும் அதிகமான வீரர்கள் பதிவுசெய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 

ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்காக சர்வதேசத்தின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது. 

>> பாகிஸ்தான் அணிக்கு இரு புதிய பயிற்சியாளர்கள் நியமனம்

அன்படி நியூசிலாந்து வீரர்களான டிம் சௌதி, ஜிம்மி நீஷம், இஸ் சோதி மற்றும் மார்க் செப்மன் ஆகியோர் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்துள்ளனர். 

மேற்கிந்திய தீவுகளிலிருந்து ஷேய் ஹோப், எவின் லிவிஸ், பெபியன் எலன், என்ரே பிளச்சர் மற்றும் இங்கிலாந்திலிருந்து ரீஷ் டொப்லே, தென்னாபிரிக்காவிலிருந்து ரஸ்ஸி வென் டர் டஸன், ரீஷா ஹென்ரிக்ஸ், லுங்கி என்கிடி, ரெய்லி ரூஷோவ் மற்றும் டெப்ரைஷ் சம்ஷி ஆகியோர் பெயர்களை பதிவுசெய்துள்ளனர். 

இவர்களை தவிர்த்து முன்னணி வீரர்களான உஸ்மான் கவாஜா, முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹமட், இப்திகார் அஹமட், மொஹமட் நவாஸ், குல்பதீன் நயீப், இப்ரஹீம் ஷர்தான், முஷ்பகூர் ரஹீம், டஸ்கின் அஹமட், நசீம் ஷா, ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ், நஜிமுல் ஹுசைன் செண்டோ, கொலின் மன்ரோ, ஜேசன் பெஹரென்ரொப்ஒசானே தோமஸ் மற்றும் கீமோ போல் போன்ற வீரர்களும் தங்களுடைய பெயர்களை இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஏலத்துக்காக வழங்கியுள்ளனர். 

LPL தொடரானது ஜூலை முதலாம் திகதி முதல் 21ம் திகதிவரை இலங்கையில் நடைபெறவுள்ளதுடன், வீரர்கள் ஏலத்துக்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை சுட்க்காட்டியுள்ளது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<