தனது காதலி ரீவா ஸ்டீன்காம்பை கொலை செய்த தென்னாபிரிக்க ஒலிம்பிக் தடகள வீரர் ஒஸ்கார் பிஸ்டோரியஸுக்கு, ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தண்டனை விதிக்கப்பட்ட ஒஸ்கார் பிஸ்டோரியஸ் உடனடியாக சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கடந்த 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், 29 வயதான பிஸ்டோரியஸ் தனது காதலி ரீவா ஸ்டீன்காம்பை கதவு மூடப்பட்டிருந்த கழிப்பறையில் நான்கு முறை சுட்டார்.
ரீவா ஸ்டீன்காம்பை தான் சுட்டதாக ஒப்புக்கொண்ட பிஸ்டோரியஸ், அச்சத்தினால் திருடன் என எண்ணி தவறுதலாக தனது காதலியை சுட்டுவிட்டதாக தெரிவித்தார்.
குறித்த வழக்கில் குறைந்தது 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையை பிஸ்டோரியஸ் எதிர்நோக்கியிருந்த வேளையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, புனர்வாழ்வு மற்றும் குற்றத்துக்கு வருத்தம் தெரிவித்தல் ஆகிய தணிமைப்படுத்தும் சூழல்கள், கொலை குற்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட 15 ஆண்டுகள் என்ற நிலையிலிருந்து மாறி குறைந்த தண்டனை வழங்கக் காரணமாக அமைந்ததாகக் குறிப்பிட்டார்.
இதனையடுத்தே பிஸ்டோரியஸிற்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் – வீரகேசரி
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்