பிபா உலகக் கிண்ண போட்டியில் போர்த்துக்கல்லுக்கு எதிராக தனது முதல் போட்டியில் பங்கேற்க இரண்டு தினங்கள் மாத்திரமே இருக்கும் நிலையில் ஸ்பெயின் தனது பயிற்றுவிப்பாளர் ஜூலன் லோபெட்டிகுயை (Julen Lopetegui) பணி நீக்கம் செய்துள்ளது.
ரியெல் மெட்ரிட் கழகம் தனது அடுத்த முகாமையாளராக லோபெட்டிகுயை நியமிப்பதாக நேற்று (12) அறிவித்ததை அடுத்தே இந்த அதிர்ச்சி முடிவு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்பெயின் அணி உலகக் கிண்ணத்தை எதிர் நோக்கி இருக்கும் நிலையில் ரியெல் மெட்ரிட்டின் இந்த அறிவிப்பு அந்நாட்டு கால்பந்து சம்மேளனம் மற்றும் ரசிகர்களின் கோபத்தை தூண்டியது.
சிடானின் இடத்திற்கு ஸ்பெயின் தேசிய அணியின் பயிற்சியாளரை இணைக்கும் ரியெல் மெட்ரிட்
ஸ்பெயின் தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஜூலன் லோபெட்டிகுய் உலகக் கிண்ணத்திற்கு பின்னர் ஐரோப்பிய சம்பியன் ரியெல் மெட்ரிட்…
ஸ்பானிய கால்பந்து சம்மேளனத்திடம் எந்த அறிவுறுத்தலும் இன்றி (ரியெட் மெட்ரிட்டுடனான) பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட லோபெட்டிகுய் பதவி நீக்கப்படுவதாக அந்த கால்பந்து சம்மேளனம் இன்று (13) அறிவித்தது.
உலகக் கிண்ண கால்பந்து போட்டி நாளை ரஷ்யாவில் ஆரம்பமாகவிருக்கும் நிலையிலேயே ஸ்பெயின் கால்பந்து ரசிகர்களுக்கு இந்த அதிர்ச்சி செய்தி internationalகிடைத்துள்ளது.
”மிக சிக்கலான நிலைமை என்பது எனக்குத் தெரியும். எனது நடவடிக்கை விமர்சனத்திற்கு உள்ளாகும் என்பதும் எனக்குத் தெரியும்” என்று இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஸ்பானிய கால்பந்து சம்மேளனத் தலைவர் லுயிஸ் ருபியலஸ் தெரிவித்தார். லோபெட்டிகுய் தனது புதிய பதவி குறித்து அது அறிவிக்கப்படுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னரே தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
”தேசிய அணியின் முகாமையாளரை நீக்குவது அவசியம் என்று நாம் கருதினோம்” என்றும் ருபியலஸ் கூறினார்.
2016 ஆம் ஆண்டு ஸ்பெயின் அணியின் பயிற்றுவிப்பாளர் பொறுப்பை ஏற்ற 51 வயது லோபெட்டிகுயின் வழிநடத்தலில் அந்த அணி தோல்வியுறாத அணியாக நீடித்து வருகிறது.
ஜூலன் லோபெட்டிகுய் பொறுப்பேற்ற பின்னர் ஸ்பெயின் ஆடிய 20 போட்டிகளில் 14 இல் வெற்றி பெற்றதோடு எஞ்சிய ஆறு போட்டிகளையும் அந்த அணி சமநிலை செய்தது.
2018 உலகக் கிண்ணம்: பிரான்ஸ் அணியின் முன்னோட்டம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பிய கிண்ணத்தை நூழிலையில் தவறவிட்ட பலம்மிக்க…
எனினும் ஸ்பெயினின் பலம் மிக்க கழகமான ரியெல் மெட்ரிட் கழகம் கடந்த மாதம் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்று ஒரு சில தினங்களில் அதன் பயிற்றுவிப்பாளர் சினேடின் சிடான் பதவி விலகி அதிர்ச்சி அளித்தார்.
மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க