யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியில் சுமார் 8 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கூடைப்பந்தாட்ட அரங்கை முன்னாள் வடமாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. குருகுலராஜா அவர்கள் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
விபுலானந்தன் ஞாபகார்த்த கிண்ணம் ஏழாவது முறையாக சென்றலைட்ஸ் வசம்
16ஆவது பொன். விபுலானந்தன் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் 51:63 என்ற..
கூடைப்பந்தாட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் வைத்தியர் கோபிசங்கர் அவர்களது தலைமையில் நேற்று (12) இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மே ளனத்தின் பிரதிநிதியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசனாதன் அவர் களும், வட மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா அவர்களு ம், உறுப்பினர்களான ஆர்னோல்ட், சிவாஜிலிங்கம், சிவஜோகன், சஜந் தன் ஆகியோரும் யாழ் கல்வி வலய உ டற்கல்விபொறுப்பாசிரியர் சண் தயா ளன், சுண்டுக்குளிமகளிர் கல்லூ ரி அதிபர் திருமதி துசிதரன், கல் லூரியின் முன்னாள் அதிபர்கள், ஆ சிரியர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் கூடை ப்பந்தாட்ட வீரர்கள், பயிற்றுவி ப்பாளர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
விருந்தினர்கள் வரவேற்பினை தொடர்ந்து, வண. டேனியல் ஜெயரூபன் அவர்களது பிரார்த்தனை இடம்பெற்றது. பின்னர் கூடைப்பந்தாட்ட அபிவிருத்திக் குழுவின் சார்பில் நிகழ்வின் ஞாபகார்த்தமாக மரம் நடுகை இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து மீள் நிர்மாணிக்கப்பட்ட கூடைப்பந்தாட்ட திடலினை முன்னாள் வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா அவர்கள் திறந்து வைத்தார். நினைவு கல்வெட்டினை கல்லூரி உப அதிபர் துசிதரன் மற்றும் ரோஹன் தேவதாசன் ஆகியோர் திரைநீக்கம் செய்து வைத்தனர்.
அதன் பின்னர், முன்னாள் உப அதிபர் அமரர் திரு.N.J. பொன்னையா அவர்களது ஞாபகார்த்தமாக அவரது புதல்வர் டேவிட் மற்றும் கல்லூரியின் 1999ஆம் வருட (1999 batch) நண்பர்கள் இணைந்து அன்பளிப்பில் அமைக்கப்பட்ட முதலாவது தூண் மற்றும் அமரர் திரு சிவசோதி சிவகுமாரன் ஞாபகார்த்தமாக கல்லூரியின் 1992ஆம் வருட (1992 batch) நண்பர்களால் அமைக்கப்பட்ட இரண்டாவது தூண் ஆகியவை திரைநீக்கம் செய்யப்பட்டது.
2017இல் விளையாட்டு உலகை அலங்கரித்த முக்கிய நிகழ்வுகள்
விளையாட்டு உலகில் கடந்த 2017ஆம் ஆண்டு சாதனைகள், சோதனைகள்….
மின்னொளி தூண்களை அன்பளிப்பு செய்திருந்த வாமதேவ தியாகேந்திரனும் அதனை திரைநீக்கம் செய்து வைத்தார்.
கல்லூரியின் கூடைப்பந்தாட்ட திடலானது 1969இல் ஒரு முறையும், பின்னர் 1998இலும், மூன்றாவது முறையாக தற்போது தேசிய தரத்திலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின்போது கூடைப்பந்தாட்ட அபிவிருத்தித் திட்ட குழுவின் தலைவர் திரு கோபிஷங்கர் கருத்து தெரிவிக்கையில், “கடந்த மார்ச் மாதம் வடக்கின் பெரும் சமர் கிரிக்கெட் போட்டிக்கு அதிகளவிலான பழைய மாணவர் வந்திருந்தார்கள். அப்போது எனது நண்பர் அப்போதைய மெல்பார்ன் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளராகவிருந்த ஜுடே பிரகாஷ் கூடைப்பந்தாட்ட திடல் அவசரமாக புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றது என்கிறார்.
எனவே மெல்பார்ன் பழைய மாணவர் சங்கத்தின் ஆரம்ப உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் பின்னர் உலகளாவிய ரீதியில் வாழும் பழைய மாணவர்களின் பங்களிப்புடன், வட மாகாண சபை, ஹரின் பெர்னாண்டோ மற்றும் வாமதேவ தியாகேந்திரன் ஆகியோரது பேராதரவுடன் இன்று நிறைவடைந்துள்ளது.
இந்த கூடைப்பந்தாட்ட திடலானது அமைக்கும் பொழுது, நீண்ட கால பாவனை, காயம் ஏற்படுகின்ற வீதம் குறைவானதாகவிருக்க வேண்டும், சர்வதேச தரத்தில் அமைய வேண்டும் ஆகியன போன்ற விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டன. அதேவேளை இந்த கூடைப்பந்தாட்ட திடலானது வெறுமனே சென் ஜோன்ஸ் கல்லூரியின் பாவனைக்கு மாத்திரமின்றி, வடக்கினுடைய பாடசாலைகள், கழகங்கள் ஆகியனவும் பயன்பெறும் நோக்குடனேயே அமைக்கப்பட்டுள்ளது. தேசிய ரீதியிலான போட்டித்தொடர்கள் வெகு விரைவில் இங்கு நடத்தப்படும் என எதிர் பார்க்கின்றோம்“ எனத் தெரிவித்தார்.
“இவ்வருடம் கல்லூரி ஸ்தாபகர் Joshep Knight அவர்களது வருகையின் 200ஆவது ஆண்டினை நினைவு கூர்ந்து கொண்டு இருக்கையில் இந்த கூடைப்பந்தாட்ட திடலினை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். கல்லூரியின் 200ஆவது ஆண்டு விழாவிற்கு முதலில் நீச்சல் தடாகம் மற்றும் Smart Classrooms இனையும் அமைப்பதே எமது இலக்கு. அதேவேளை, கூடைப்பந்தாட்ட நிதியம் ஒன்றினையும் அமைப்பதற்கான அழைப்பினை விடுக்கின்றோம்“ என கல்லூரி அதிபர் வண . N .J ஞானபொன்ராஜா அவர்கள்.
தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் வட மாகாண அமைச்சர் திரு. குருகுலராஜா அவர்கள், “இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கின்ற இந்த மைதானம், வீரகளுக்கு சந்தோசத்தினையும், ஆர்வத்தினை ஏற்படுத்தி இருக்கின்ற அதேவேளை, அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். கூடைப்பந்தாட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 127 ஆண்டுகள் ஆகின்றன. இந்த விளையாட்டினை அறிமுகப்படுத்திய ‘James Naismith’ குறிப்பிட்டது போல கூடைப்பந்தாட்டம் ஒரு உபாதை குறைவான விளையாட்டாகும். வாலிபர்களுக்கு விழுமியத்தினை ஊட்டுவதற்கு விளையாட்டு மிகவும் சிறந்த வழியாக அமையும்.” என மகிழ்வுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து திறப்பு விழா நினைவு புத்தகத்தினை வைத்தியர் காண்டீபன் அவர்கள் வெளியிட்டு வைக்க வட மாகாண சபை உறுப்பினர் ஆர்னோல்ட் அவர்கள் அதனைப் பெற்றுக்கொண்டார். இந்த திட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் கல்லூரி அதிபரால் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது. வைபவம் இனிதே வைத்தியர் காண்டீபன் அவர்களது நன்றி உரையுடன் நிறைவிற்கு வந்தது.
பின்னர் இடம்பெற்ற பழைய மாணவர்கள் மற்றும் கல்லூரி சிரேஷ்ட அணி ஆகியவற்றுக்கிடையிலான போட்டியில் பழைய மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
கடந்த காலங்களில் வடக்கின் கூடைப்பந்தாட்டத்தில் முன்னிலை வகித்த சென் ஜோன்ஸ் கல்லூரி இந்த புதிய மைதானம்மூலம் மீண்டும் அவ்விடத்தினை அடைய எத்தனிக்கின்றது. அதேபோன்று, வடக்கினுடைய கூடைப்பந்தாட்ட வளர்ச்சிக்கு இந்த திடல் மிகச்சிறந்த பங்களிப்பினை வழங்கும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.