1934ஆம் ஆண்டு – லான்ஸ் கிப்ஸ் பிறப்பு
உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலே 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 1ஆவது சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமைக்குரிய லான்ஸ் கிப்ஸின் பிறந்த தினமாகும். மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த இவரின் கைவிரல்கள் வழக்கத்திற்கு மாறாக நீண்ட விரல்களாக காணப்படுகின்றன.
முழுப் பெயர் – லேன்ஸ்லாட் ரிச்சர்ட் கிப்ஸ்
பிறப்பு – 1934ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி
பிறந்த இடம் – குயின்ஸ்டவுன், ஜார்ஜ்டவுன், டெமராரா, பிரிட்டிஷ் கயானா
வயது – 82
விளையாடிய காலப்பகுதி – 1958ஆம் ஆண்டு தொடக்கம் 1976ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி
துடுப்பாட்ட பாணி – வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு பாணி – வலதுகை சுழற்பந்து வீச்சு (ஓப் பிரேக்)
உறவுகள் – கிளைவ் லொயிட் (அத்தான்)
விளையாடிய ஒருநாள் போட்டிகள் – 03
கைப்பற்றிய ஒருநாள் விக்கெட்டுகள் – 02
சிறந்த ஒருநாள் பந்துவீச்சு – 12/1
ஒருநாள் பந்துவீச்சு சராசரி – 29.50
விளையாடிய டெஸ்ட் போட்டிகள் – 79
கைப்பற்றிய டெஸ்ட் விக்கெட்டுகள் – 309
சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு – 38/8
டெஸ்ட் பந்துவீச்சு சராசரி – 29.09
லான்ஸ் கிப்ஸ் 330 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 27.22 என்ற பந்து வீச்சு சராசரியில் 1024 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய முக்கிய அம்சமாகும்.
1957ஆம் ஆண்டு – மார்க்ஸ் நிக்கோலஸ் பிறப்பு
தற்போதைய உலக கிரிக்கெட் அரங்கில் உள்ள தலைசிறந்த, கிரிக்கெட் வர்ணனையை கேட்கத் தூண்டும் அளவிற்கு சிறந்த குரல் வல்லமை உடைய, இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வர்ணனையாளரான மார்க் நிக்கோலஸின் பிறந்த தினமாகும்.
முழுப் பெயர் – மார்க் சார்லஸ் ஜெபோர்ட் நிக்கோலஸ்
பிறப்பு – 1957ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி
பிறந்த இடம் – வெஸ்ட்மின்ஸ்டர், லண்டன்
வயது – 59
புனைப் பெயர் – எல்விஸ், ஜார்டின்
கல்வி – ப்ரட்பீல்ட் கல்லூரி
துடுப்பாட்ட பாணி – வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு பாணி – வலதுகை மித வேகப்பந்து வீச்சு
உறவு – பிரெட் நிக்கோலஸ் (பாட்டன்)
இவர் இங்கிலாந்து தேசிய அணியில் விளையாடாவிட்டாலும் இங்கிலாந்து “ஏ” அணியை வழிநடாத்திய பெருமைக்குரியவர் ஆவார். 377 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள மார்க்ஸ் நிக்கோலஸ் 34.39 என்ற துடுப்பாட்ட சராசரியைக் கொண்டு 18,262 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அதில் அதிக பட்ச ஓட்டம் ஆட்டம் இழக்காமல் பெற்ற 206 ஓட்டங்களாகும். அத்தோடு இவரது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையில் 36 சதங்களையும் 81 அரைச் சதங்களையும் பெற்றுள்ளார்.
கிரிக்கட் வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 28
செப்டம்பர் மாதம் 29ஆம் திகதியில் பிறந்த கிரிக்கெட் வீரர்கள்
- 1930ஆம் ஆண்டு – ராம்நாத் கென்னி (இந்தியா)
- 1934ஆம் ஆண்டு – லிண்ட்சே களின் (அவுஸ்திரேலியா)
- 1941ஆம் ஆண்டு – டேவிட் ஸ்டீல் (இங்கிலாந்து)
- 1957ஆம் ஆண்டு – கிறிஸ் பிரோட் (இங்கிலாந்து)
- 1979ஆம் ஆண்டு – சிகாரா மெட்காஃபே (அயர்லாந்து)
- 1980ஆம் ஆண்டு – மைக்கேல் கர்பேரி (இங்கிலாந்து)
- 1986ஆம் ஆண்டு – அரபாத் சனி (பங்களாதேஷ்)
- 1987ஆம் ஆண்டு – மொன்டிக் ஹாட்ஜ் (மேற்கிந்திய தீவுகள்)
- 1988ஆம் ஆண்டு – மைக்கேல் ஹில் (அவுஸ்திரேலியா)
- 1989ஆம் ஆண்டு – அமன் அலி (ஐக்கிய அரபு நாடுகள்)
- 1989ஆம் ஆண்டு – அப்ரார் காஸி (இந்தியா)
- 1981ஆம் ஆண்டு – ரிக்கி கிளார்க் (இங்கிலாந்து)
- 1991ஆம் ஆண்டு – மொமினுல் ஹக் (பங்களாதேஷ்)
- 1991ஆம் ஆண்டு – அலெக்ஸ் ஹியூஸ் (இங்கிலாந்து)
- 1994ஆம் ஆண்டு – கிரெக் கார்க் (இங்கிலாந்து)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்