கிரிக்கெட் வரலாற்றில் இன்று: செப்டம்பர் மாதம் 28

1419
Romesh Kaluwitharana

1995ஆம் ஆண்டுகழுவித்தாரணவின் 1ஆவது ஒருநாள் சதம்

கென்ய கிரிக்கெட் வரலாற்றில் முதலாவது அதிகாரபூர்வமான ஒருநாள் சர்வதேசப் போட்டி 1995ஆம் ஆண்டு நைரோபி நகரில் அமைந்துள்ள ஜிம்கானா கழக கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்றது. வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் கென்ய அணிகள் பலப்பரீட்சை நடாத்தின. மொத்தமாக 1119 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் பின்பு தான் கென்யா மண்ணில் 1ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டி நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி மொரிஸ் ஓடும்பே தலைமையிலான கென்ய அணியை துடுப்பெடுத்தாடுமாறு அழைப்பு விடுத்தது. இதன்படி களமிறங்கிய கென்ய அணியின் விக்கெட்டுகள் முதல் ஓவர் தொட்டு விழ ஆரம்பித்தன. வழமை போன்று இடதுகை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் ஆரம்ப விக்கெட்டை வீழ்த்தி கென்ய அணியை நெருக்கடிக்கு உள்ளாக்கினார்.

சமிந்த வாஸ் ஆரம்பத்தில் கென்ய அணியை தடுமாற்ற, மத்தியில் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 4 விக்கெட்டுகளை வீழ்த்த கென்ய அணியினரால் ஈடு கொடுக்க முடியாமல் ஓட்டங்களை மெதுவாகப் பெற்று 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது. கென்ய அணி சார்பாக துடுப்பாட்டத்தில் இறுதிவரை தனி ஒருவாறாக நின்று போராடிய ஹிடேஷ் மூடி 105 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 78 ஓட்டங்களைப் பெற்றார். இவரைத் தவிர சந்தீப் குப்தா 41 ஓட்டங்களையும், ஆசிப் கரீம் 24 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்களைத் தவிர மற்ற வீரர்கள் தமது சொந்த மண்ணில் ஓட்டங்களைப் பெற சிரமப்பட்டு 10 இற்கும் குறைவான ஓட்டங்களோடு ஆடுகளத்தை விட்டு வெளியேறினர். இலங்கை அணியின் பந்துவீச்சில் முத்தையா முரளிதரன் 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்த சஜீவ டி சில்வா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

பின்னர் 189 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 30.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 190 ஓட்டங்களைப் பெற்று 116 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.  இலங்கை அணி ஆரம்பத்தில் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தாலும் ரொமேஷ் கழுவித்தாரன மிகவும் அருமையாக ஆடி 89 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக 100 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமல் பெற்று இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த சதமானது ரொமேஷ் கழுவித்தாரன தனது ஒருநாள் கிரிக்கெட் பயணத்தில் பெற்ற 1ஆவது சதமாகக் காணப்பட்டது. கழுவித்தாரனவைத் தவிர இலங்கை அணி சார்பாக அரவிந்த டி சில்வா 55 ஓட்டங்களைப் பெற்றார். கென்ய அணி சார்பாக டிட்டோ ஓடும்பே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கிரிக்கட் வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 27

செப்டம்பர் மாதம் 28ஆம் திகதியில் பிறந்த கிரிக்கெட் வீரர்கள்

  • 1946ஆம் ஆண்டுமஜித் கான் (பாகிஸ்தான்)
  • 1964ஆம் ஆண்டுஇர்பான் பட்டி (பாகிஸ்தான்)
  • 1966ஆம் ஆண்டுமிக் மார்டெல் (அவுஸ்திரேலியா)
  • 1971ஆம் ஆண்டுஅசங்க ஜயசூரிய (இலங்கை)
  • 1971ஆம் ஆண்டுமெத்திவ் எலியட் (அவுஸ்திரேலியா)
  • 1973ஆம் ஆண்டுகொலின் ஸ்டுவர்ட் (மேற்கிந்திய தீவுகள்)
  • 1975ஆம் ஆண்டுஸ்டூவர்ட் கிளார்க் (அவுஸ்திரேலியா)
  • 1978ஆம் ஆண்டுபென் எட்மஸ்ன்டன் (அவுஸ்திரேலியா)
  • 1982ஆம் ஆண்டுவில் ஸ்மித் (இங்கிலாந்து)
  • 1983ஆம் ஆண்டுபிபுல் ஷர்மா (இந்தியா)
  • 1984ஆம் ஆண்டுமால்கம் வாலர் (சிம்பாப்வே)
  • 1984ஆம் ஆண்டுலூக் பொமர்ஸ்பாச் (அவுஸ்திரேலியா)
  • 1985ஆம் ஆண்டுஎன்டன் டெவிசிச் (நியூசிலாந்து)
  • 1987ஆம் ஆண்டுநதீம் அஹ்மத் (ஹொங் கொங்)
  • 1990ஆம் ஆண்டுஜேக் ரீட் (அவுஸ்திரேலியா)
  • 1990ஆம் ஆண்டுநீல் பீனர் (இங்கிலாந்து)
  • 1997ஆம் ஆண்டுபென் க்ரீன் (இங்கிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்