1999ஆம் ஆண்டு – அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கையின் 1ஆவது டெஸ்ட் வெற்றி
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் 1999ஆம் ஆண்டு கண்டி அஸ்கிரிய கிரிக்கட் மைதானத்தில் தொடரின் 1ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.
போட்டியின் சுருக்கம்
அவுஸ்திரேலியா – 188/10
ரிக்கி பொன்டிங் 96, ஜேசன் கிளஸ்பி 41
முத்தையா முரளிதரன் 63/4, நுவான் சொயிஸா 38/3
இலங்கை – 234/10
அரவிந்த டி சில்வா 78, மஹேல ஜயவர்தன 46, மார்வன் அதபத்து 25
ஷென் வோர்ன் 52/5, கொலின் மில்லர் 62/4
அவுஸ்திரேலியா – 140/10
ரிக்கி பொன்டிங் 51, மைக்கல் ஸ்லேட்டர் 27
சமிந்த வாஸ் 15/3, முத்தையா முரளிதரன் 65/3
இலங்கை – 95/4 (வெற்றி இலக்கு : 95)
அரவிந்த டி சில்வா 31*, அர்ஜுன ரணதுங்க 19*, சனத் ஜயசூரிய 18
கொலின் மில்லர் 48/3
இலங்கை அணி 6 விக்கட்டுகளால் வெற்றி பெற்று தமது டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் முதல் தடவையாகஅவுஸ்திரேலிய அணியை டெஸ்ட் போட்டி ஒன்றில் வெற்றி கொண்டது.
இந்த வெற்றியை இலங்கை அணி சனத் ஜயசூரியவின் தலைமையின் கீழ் பெற்றது. இதன் பின் 17 வருடங்களுக்குப் பிறகு இலங்கை அணி எஞ்சலோ மெதிவ்ஸ் தலைமையின் கீழ் கடந்த மாதம் அவுஸ்திரேலிய அணியை கண்டி பல்லேகலையில் இடம்பெற்ற 1ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி கொண்டதோடு டெஸ்ட் தொடரையும் 3 – 0 என்று வயிட் வோஷ் செய்து இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 09
1985ஆம் ஆண்டு – இலங்கையின் 1ஆவது டெஸ்ட் வெற்றி
1985ஆம் ஆண்டு இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானம் செய்தது.
இதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி தமது முதல் இனிங்ஸில் 156.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 385 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அமல் சில்வா 111 ஓட்டங்களையும், ரோய் டயஸ் 95 ஓட்டங்களையும், ரஞ்சன் மடுகல்ல 54 ஓட்டங்களையும், துலீப் மெண்டிஸ் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்திய அணியின் முதல் இனிங்ஸில் சீடன் சர்மா 5 விக்கட்டுகளையும் ரவி சாஸ்திரி 3 விக்கட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். பின்னர் தமது முதல் இனிங்ஸிசிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 244 ஓட்டங்களைப் பெற்றது. இதில் க்றிஸ் ஸ்ரீகாந்த் 64 ஓட்டங்களையும், அமர்நாத் 60 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் ரொமேஸ் ரத்நாயக்க 4 விக்கட்டுகளையும், சாலிய அஹங்கம 2 விக்கட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.
பின்பு 141 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை அணி 2ஆவது இனிங்ஸைத் தொடங்கியது. இந்த அணி 2ஆவது இனிங்ஸில் 3 விக்கட்டுகளை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது. இலங்கை அணி சார்பாக 2ஆவது இனிங்ஸில் அரவிந்த டி சில்வா 74 ஓட்டங்களையும் ரோய் டயஸ் ஆட்டம் இழக்காமல் 60 ஓட்டங்களையும் பெற்றனர்.
பின்னர் 348 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய 66.2 ஓவர்களில் 198 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இதில் கபில் தேவ் தனிமரமாக ஆடி 78 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் முதல் இனிங்ஸில் 4 விக்கட்டுகளை வீழ்த்திய ரொமேஸ் ரத்நாயக்க 2ஆவது இனிங்ஸில் 5 விக்கட்டுகளையும், சாலிய அஹங்கம 2 விக்கட்டுகளையும், அசாந்த டி மெல் 3 விக்கட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.
இதன் மூலம் இலங்கை அணி 149 ஓட்டங்களால் வெற்றி பெற்று தமது டெஸ்ட் வரலாற்றில் 1ஆவது வெற்றியைப் பதிவு செய்ததோடு அதற்கு அடுத்து நடைபெற்ற 3ஆவது டெஸ்ட் போட்டியை சமநிலையில் முடித்து தமது முதலாவது டெஸ்ட் தொடர் வெற்றியைப் பெற்றது இலங்கை அணி.
வரலாற்றில் : செப்டம்பர் மாதம் 10
செப்டம்பர் மாதம் 11ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1874ஆம் ஆண்டு – சார்லஸ் பிரின்ஸ் (தென் ஆபிரிக்கா)
- 1907ஆம் ஆண்டு – ஆஸ்கார் டா கோஸ்டா (மேற்கிந்திய தீவுகள்)
- 1969ஆம் ஆண்டு – சஞ்சயன் துரைசிங்கம் (கனடா)
- 1971ஆம் ஆண்டு – வீரேந்திர சர்மா (இந்தியா)
- 1976ஆம் ஆண்டு – முரளி கார்த்திக் (இந்தியா)
- 1990ஆம் ஆண்டு – ஜொனாதன் போ (மேற்கிந்திய தீவுகள்)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்