2000ஆம் ஆண்டு – சிலிர்ப்பூட்டும் வெற்றி
2000ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டித் தொடரை தீர்மானிக்கும் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 1 விக்கட்டால் சிலிர்ப்பூட்டும் வெற்றியைப் பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி தமது முதல் இனிங்ஸில் 269 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் தமது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 273 ஓட்டங்களை பெற்றது. பின் 4 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 219 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 216 என்ற வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்கிணங்க தமது இரண்டாவது இனிங்ஸைத் தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கட்டுகளை இழந்து ஒரு நிலையில் 9 விக்கட் இழப்பிற்கு 197 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறியது. ஆனால் இறுதி விக்கட்டுக்காக ஜோடி சேர்ந்த ஜிம்மி எடம்ஸ் மற்றும் கொர்ட்னி வோல்ஸ் ஜோடி மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றிக் கோட்டை கடக்க உதவியது. இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 1 விக்கட்டால் சிலிர்ப்பூட்டும் வெற்றியை பெற்றது.
வரலாற்றில் இன்று : மே மாதம் 28
மே மாதம் 29ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்
- 1839 நட் தொம்சன் (அவுஸ்திரேலியா)
- 1950 தலத் அணி (பாகிஸ்தான்)
- 1950 டேவிட் முரே (மேற்கிந்திய தீவுகள்)
- 1953 ரங்கி நனன் (மேற்கிந்திய தீவுகள்)
- 1974 அஹ்சன் ராசா (பாகிஸ்தான்)
- 1987 ஜோன் ஹொலண்ட் (அவுஸ்திரேலியா)
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்